இலங்கை
பிரதான நகரங்களுக்கான,வானிலை முன்னறிவிப்பு 07.12.2022
பிரதான நகரங்களுக்கான,வானிலை முன்னறிவிப்பு 07.12.2022
இலங்கையின் தற்போதைய நிலை! முக்கிய தகவலை வெளியிட்ட மத்திய வங்கி ஆளுநர்
இம்மாதத்தில் சீனாவிடமிருந்து நிதி உத்தரவாதம் கிடைத்தால், ஜனவரியில் சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர் சபையின் அனுமதி கிடைக்கும் என நம்பலாம் என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். நாட்டின் நிலைமை குறித்து விளக்கமளிக்கும் போதே மத்திய வங்கியின் ஆளுநர் இவ்வாறு தெரிவித்தார். அடுத்த முக்கியமான நடவடிக்கை, எங்கள் இருதரப்பு கடன் வழங்குனர்களும் நிதி உத்தரவாதம் வழங்க சம்மதிக்க வேண்டும். அதற்கான நடவடிக்கைகளையே செய்து வருகின்றோம். நாங்கள் நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளோம் என்று நினைக்கிறேன். … Read more
2021 டிசம்பர் 31 வரை மேல்மாகாண வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் மேலதிகப் பணியாளர்கள் 556
2021 டிசம்பர் 31 வரை மேல்மாகாண வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் மேலதிகப் பணியாளர்கள் 556 – கோபா குழுவில் புலப்பட்டது 2021 டிசம்பர் 31 வரை மேல்மாகாண வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் அனுமதிக்கப்பட்ட பணியாளர்களின் எண்ணிக்கையைத் தாண்டி நாளாந்த சம்பள அடிப்படையில் மற்றும் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் பணியாளர்கள் 556 பேர் காணப்படுவதாக கோபா குழுவில் புலப்பட்டது. அதற்கமைய, நாளாந்த சம்பள அடிப்படையில் 396 பணியாளர்களும் ஒப்பந்த அடிப்படையில் 160 பணியாளர்கள் இருப்பதாகவும் புலப்பட்டது. மேல்மாகாண வீதி … Read more
ஸ்ரீ ஜயவர்த்தனபுர வைத்தியசாலையின் நிர்வாக சீர்கேடுகள்
ஸ்ரீ ஜயவர்த்தனபுர வைத்தியசாலையின் நிர்வாக சீர்கேடுகள் பல கோப் குழுவில் புலப்பட்டன கணக்காய்வாளர் நாயகத்தின் விசேட அறிக்கையை விசாரிக்க அழைப்பு… மூன்று மாதங்களில் மீண்டும் அழைப்பு… அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (கோப் குழு) அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ (பேராசிரியர்) ரஞ்சித் பண்டார தலைமையில் நேற்று (06) கூடியபோது ஸ்ரீ ஜயவர்த்தனபுர வைத்தியசாலையின் பிரச்சினைகள் பல அடையாளம் காணப்பட்டன. ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலை தொடர்பில் கணக்காய்வாளர் நாயகத்தினால் 5 வருடங்களுக்கு முன்னர் நடத்தப்பட்ட கணக்காய்வு … Read more
இலங்கையர்களுக்கு 2023 வரை காத்திருக்கும் கடும் நெருக்கடி
இலங்கையில் உள்ள ஒவ்வொரு 5 குடும்பங்களிலும் 2 குடும்பங்கள் மேற்கொள்ளும் செலவில் 75 சதவீதம் உணவுக்காக செலவிடப்படுகிறது என யுனிசெப் அமைப்பின் சமீபத்திய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அறிக்கையின்படி, ஒருவரின் மாதச் சம்பளம் அல்லது வருமானத்தில் 75 சதவீதம் உணவுக்காகச் செலவிடப்படும்போது, சுகாதாரம் மற்றும் கல்விக்கு மிகக் குறைவாகவே ஒதுக்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பொருளாதார நெருக்கடி இலங்கையில் பொருளாதார நெருக்கடி 2023 ஆம் ஆண்டு முழுவதும் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த ஆண்டு 6.2 மில்லியன் இலங்கையர்களுக்கு அவசர மனிதாபிமான உதவி … Read more
டொலர்களில் வீடுகளை பெற்றுக்கொள்ள தொடர்புகொள்ள வேண்டிய தொலைபேசி
நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான வீடுகளை வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கு டொலர்களுக்கு விற்பனை செய்யும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தின் கீழ் 6 வீடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. டுபாய், அமெரிக்கா, கனடா மற்றும் கட்டார் ஆகிய நாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் இந்த வீடுகளை வாங்கியுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். இந்தக் கொள்வனவுக்காக கடந்த இரண்டு மாதங்களில் நகர அபிவிருத்தி அதிகார சபையின் வெளிநாட்டு நாணயக் … Read more
இலங்கையில் நாளாந்தம் 55 பேர் உயிரிழக்கின்றனர்: சமாதி ராஜபக்ச
எந்தவொரு மதுபானத்தையும் உட்கொள்வது புற்றுநோயை ஏற்படுத்தும் என புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான தேசிய அதிகாரசபையின் தலைவர் பேராசிரியர் சமாதி ராஜபக்ச எச்சரிக்கை விடுத்துள்ளார். தேசிய அபாயகர மருந்துகள் கட்டுப்பாட்டு சபையால் பெறப்பட்ட போதைப்பொருள் தொடர்பான ஆய்வுகள் 2022க்கான சர்வதேச கருத்தரங்கில் இவ்விடயத்தை தெரிவித்துள்ளார். கேட்வே மருந்துகள் ‘கேட்வே மருந்துகள்’ என்ற சொல், மது மற்றும் சிகரெட் போன்ற எளிதில் கிடைக்கக்கூடிய சில மருந்துகளின் பயன்பாடு ஏனைய மருந்துகளின் பயன்பாடு மற்றும் குற்றச் செயல்களில் ஈடுபடுவதில் அதிக … Read more
அரச ஊழியர்களின் சம்பளம்! அமைச்சர் வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பு
மக்களின் வரிப்பணத்தில் கிடைக்கப் பெறும் வருமானம் அரச உத்தியோகத்தர்களின் சம்பளத்திற்கும் அபிவிருத்தி பணிகளை பேணுவதற்கும் செலவிடப்படுகிறது என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தொடர்ந்தும் தெரிவிக்கையில், தற்போது அரச ஊடகமொன்று புனரமைக்கப்படாத வீதிகள் தொடர்பில் தினமும் செய்திகளை ஒளிபரப்பிக் கொண்டிருக்கிறது. நெடுஞ்சாலை அபிவிருத்தி அமைச்சர் என்ற ரீதியில் தனிப்பட்ட ரீதியில் என்னால் அந்த வீதிகளை புனரமைக்க முடியாது. மக்களுக்கு தெளிவுப்படுத்த … Read more