ஜாதக கதைகள் ஒலிப்புத்தகத்தின் இரண்டாவது தொகுதி வெளியீடு
அதிவணக்கத்துக்குரிய சங்கமித்தை தேரி அவர்கள் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வருகை தந்தமையை குறிக்கும் முகமாக 2022 டிசம்பர் 02 ஆம் திகதி இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் ,கலாசாரப் பிரிவான சுவாமி விவேகானந்தா கலாசார நிலையத்தில் நடைபெற்ற நிகழ்வில் “ஜாதக கதைகள்” சிங்கள மொழி மூலமான ஒலிப்புத்தகத்தின் இரண்டாவது தொகுதி வெளியிடப்பட்டது. ஜாதககதைகள் தொகுப்பிலிருந்து நன்னெறிக்கதைகள் என்ற கருப்பொருளின்கீழ் 50 ஜாதக கதைகள் இந்த ஒலிப்புத்தகத்தில் இலங்கை மக்களுக்காக தொகுக்கப்பட்டுள்ளதுடன் கட்புலம் பாதிக்கப்பட்டவர்களுக்காக விசேடமாக வடிவமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த தொகுப்பின் … Read more