ரூபாவின் பெறுமதியில் வீழ்ச்சி:இன்றைய நாணய மாற்று விகிதம்

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்பில் மத்திய வங்கி தகவல் வெளியிட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 371.71 ரூபாவாகவும், கொள்வனவு விலை 361.30 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது. பவுண்ட் மற்றும் யூரோவின் பெறுமதி இலங்கை மத்திய வங்கியின் தகவலுக்கமைய, பல வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாவின் மதிப்பு தளம்பல் நிலையில் உள்ளது. இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 394.72 ரூபாவாகவும், கொள்வனவு … Read more

குமார வெல்கம திடீர் சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதி

சிங்கப்பூரில் இருந்து நாடு திரும்பிய குமார வெல்கம எம்.பி திடீர் சுகவீனம் காரணமாக தனியார் வைத்தியசாலையொன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம, சிங்கப்பூருக்கான தனிப்பட்ட விஜயமொன்றை முடித்துக்கொண்டு இன்று முற்பகல் நாடு திரும்பியிருந்தார். விமான நிலையத்தில் அவசர முதலுதவி இந்நிலையில் விமான நிலையத்தில் வைத்து அவருக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அதனையடுத்து அவருக்கு விமான நிலையத்தின் அவசர முதலுதவிச் சிகிச்சை மையத்தில் ஆரம்ப கட்ட சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் அவர் … Read more

லாஃப் எரிவாயு நிறுவனம் சற்றுமுன்னர் வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பு

லாஃப் எரிவாயு நிறுவனம் சிறப்பு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. லாஃப் சமையல் எரிவாயுவின் விலை தொடர்பில் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. விலை அதிகரிப்பு அந்த அறிவிப்பின் மூலம் உள்நாட்டு லாஃப் சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்படாது என சம்பந்தப்பட்ட நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்படி, தற்போதைய விலைக்கே எரிவாயு விற்பனை செய்யப்படும் என அந்த நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது. இந்நிலையில் நாட்டில் லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலையை மீண்டும் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும். Source link

ஏழரை சனி யாருக்கு நடக்கப் போகிறது..! கடினமான காலத்தை எதிர்கொள்ளவுள்ள இரு ராசியினர் – நாளைய ராசிபலன்

நாளொன்றுக்கான ராசி பலனை நாம் முன்னரே அறிந்து கொண்டு அதற்கேற்றாற் போல் முன்னெச்சரிக்கையாக சில செயல்களை திட்டமிட்டு நடந்துக்கொண்டால் நினைத்த காரியங்கள் வெற்றி பெறும். கிரக நிலைக்கு ஏற்ப ராசிபலன் கணிக்கப்படுவதால், நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை சரியாக முடிவு செய்தால் வெற்றி நிச்சயமாகும். இதேவேளை சனி ஒருவரின் ஜென்ம ராசிக்கு முன் உள்ள ராசியில் வரும் போதே ஏழரை சனி தொடங்கிவிடும். தன் ராசிக்கு அடுத்துள்ள ராசியில் சஞ்சரிக்கக்கூடிய காலம் வரை ஏழரை … Read more

லிட்ரோ எரிவாயுவின் விலை மீண்டும் அதிகரிப்பு

லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலையை மீண்டும் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.  இந்த விலை அதிகரிப்பு இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வருகின்றது.  புதிய விலை விபரங்கள் இதன்படி, 12.5  கிலோ கிராம் எடைகொண்ட சமையல் எரிவாயுவின் விலை 250 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.  அத்துடன்,  5 கிலோ கிராம் சமையல் எரிவாயுவின் விலை 100 ரூபாவினால் அதிகரிக்கப்படுவதுடன், 2.3 கிலோ கிராம் எடைகொண்ட சமையல் எரிவாயுவின் விலை 45 ரூபாவினால் அதிகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.   விலை அதிகரிப்பிற்கமைய, … Read more

ஆறு மாதம் லண்டனுக்குச் சென்று வரும் இலங்கை அரசியல்வாதிகள்! அம்பலமாகும் தகவல்கள்(Video)

இலங்கையில் உள்ள கோடீஸ்வரர்களும்  இன்று பிச்சைக்காரர்கள் ஆகிவிட்டார்கள் என்று பொதுமகன் ஒருவர் தெரிவித்துள்ளார்.  மக்களது கருத்துக்களை சேகரிக்கும் வகையில் எமது குழுவினர் சென்றிருந்த வேளையில் ஒரு பொதுமகனின் உளக்குமுறல்களை எம்மோடு பகிர்ந்து கொண்டிருந்தார்.   இதன்போது, அரசியல்வாதிகள் அனைவரையும் கடுமையாக விமர்சித்ததோடு தங்களது துயரங்களையும் அவர் எம்மோடு பகிர்ந்து கொண்டார்.   அரசியல்வாதிகள் பலருக்கு இன்று இரட்டைக் குடியுரிமை உண்டு. லண்டனுக்கு ஆறு மாதம் ஒரு வருடம் என்று சென்று வருகின்றனர்.  ஆனால், இலங்கை மக்கள் அகதிகளான அண்டை நாட்டுக்குச் … Read more

மீன்பிடிப் படகுகளுக்கு பயன்படுத்தக்கூடிய மின்கலங்களில் இயங்கும் இயந்திரங்கள்

எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் விலையேற்றம் போன்றவற்றினால் ,கடற்றொழிலார்கள் தொழில் ரீதியில் பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ளனர். இதற்கு தீர்வாக, மில்டன் மோட்டர்ஸ் எனும் தனியார் நிறுவனத்தை சேர்ந்த தொழில் முயற்சியாளர்களினால் மின்கலத்தில் இயங்கும் இயந்திரங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. குறித்த மின்கலங்கள் பொருத்தப்பட்ட படகுகளை நேற்று பாணந்துறை மீன்பிடித் துறைமுகத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேரில் பார்வையிட்டதுடன், இயந்திரங்களிள் செயல் திறனை அதிகரிப்பதற்கான ஆலோசனைகளையும் வழங்கினார்.

எரிபொருள் விலை குறைப்பு! நள்ளிரவு முதல் நடைமுறை

லங்கா ஐஓசி மற்றும் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத் தாபனம் ஆகிய நிறுவனங்கள் டீசலின் விலையை குறைக்கத் தீர்மானித்துள்ளன.  இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இவ்வாறு டீசலின் விலை குறைக்கப்படவுள்ளது.  புதிய விலை இதன்படி, ஒரு லீட்டர் டீசல் 10 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளது. இந்த நிலையில் தற்போது 430 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படும் டீசல் லீட்டர் ஒன்றின் புதிய விலை 420 ரூபாவாகும்.   Source link

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை முன்னிட்டு பொலிஸ் நடமாடும் சேவை

இலங்கை வரும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை முன்னிட்டு புதிய பொலிஸ் நடமாடும் சேவைகளை அறிமுகப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அடுத்த வருடத்தில் 15 இலட்சம் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளை நாட்டிற்கு வரவழைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதேவேளை நவம்பர் மாதத்தில் சுற்றுலாத்துறை அபிவிருத்தியின் மூலம் 107 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைத்துள்ளன. இதற்கமைவாக, கடந்த 11 மாத காலங்களில் சுற்றுலாத் துறையின் மூலம் 1,100 மில்லியன் ரூபாவுக்கு மேற்பட்ட தொகை கிடைத்துள்ளது. ஒக்டோபர் மாதத்தில் பெறப்பட்ட வருமானம் 75 … Read more

வதந்திகள் குறித்து இலங்கை மத்திய வங்கி

வெளிநாடுகளில் பணியாற்றும் இளைஞர்கள் அனுப்பும் அந்நியச் செலாவணிக்கு வரி அறவிடப்பட மாட்டாது என்று இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இதேபோன்று இந்த பணத்தை பலவந்தமாக இலங்கை நாணயத்திற்கு மாற்றப்பட மாட்டாது என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக பரவி வரும் தகவல்கள் உண்மைக்குப் புறம்பானவை என மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.