மின்விநியோக தடை தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்

நாட்டில் மின்சாரம் தடையின்றி வழங்கப்படுவதற்கு மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். அடுத்தாண்டில் தடையற்ற மின்சார விநியோகத்தை உறுதி செய்வதற்காக, மின்சார சபை ஒரு அலகுக்கு 56.90 ரூபாவை செலவிட வேண்டியிருக்கும். இலங்கை மின்சார சபையின் மதிப்பீடுகளின்படி இது கணக்கிடப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார் தற்போதைய கட்டணத்தின் அடிப்படையில் ஒரு அலகுக்கு சராசரியாக 29.14 ரூபய் வசூலிக்கப்படுகிறது. இதனால் 423.5 பில்லியன் ரூபாய் பற்றாக்குறை ஏற்படும் என்று அவர் கூறினார். மின் பாவனையாளர்களில் … Read more

வங்காள விரி குடா கடலில் நிலநடுக்கம்

வங்காள விரி குடா கடலில் 5.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு நிலையம் அறிவித்துள்ளது. இலங்கை நேரப்படி இன்று (05)  காலை 8.32 மணியளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தின் அதிர்ச்சியை வங்கதேச தலைநகர் டாக்காவிலுள்ளவர்களும் உணர்ந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மீண்டும் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பு:அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்

நாட்டில் மீண்டும் பொருட்களின் விலை அதிகரிக்கப்படும் எனவும் வரி சீராய்வு திருத்தச்சட்டம் தாக்கல் செய்யப்படும் எனவும் தகவல்கள் வெளியாகியிருந்தன. குறித்த விடயம் தொடர்பாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தகவல் வெளியிட்டுள்ளார். நிகழ்வொன்றில் நேற்று(04.12.2022) கலந்துக்கொண்டு பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் குறித்த தகவலை வெளியிட்டுள்ளார். பொய்யான விடயம் நாட்டில் எதிர்வரும் 9ஆம் திகதி வரி திருத்தச் சட்டமூலம் சமர்ப்பிக்கப்படமாட்டாது எனவும் அனைத்துப் பொருட்களின் விலைகள் உயரும் என கூறப்படுவது பொய்யானது … Read more

மண்சரிவு அனர்த்த எச்சரிக்கை – இடியுடன் கூடிய மழை

தற்போது தொடரும் மழையுடனான காலநிலை காரணமாக நாட்டின் ஐந்து மாவட்டங்களில் பல பிரதேசங்களுக்கு மண்சரிவு அனர்த்தத அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது. இதேவேளை, நாட்டின் பல பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மண்சரிவு அனர்த்தத அறிவிப்பு , கொழும்பு மாவட்டத்தின் சிதாவக்க, காலி மாவட்டத்தில் நாகொட, களுத்துரை மாவட்டத்தில் இங்கிரிய, கேகாலை மாவட்டத்தில் எட்டியந்தோட்டை மற்றும் … Read more

பாடசாலை மூன்றாம் தவணை இன்று ஆரம்பம்

2022ஆம் ஆண்டுக்கான பாடசாலை மூன்றாம் தவணை இன்று (05 ஆரம்பமாகிறது. இதற்கமைவாக இன்று ஆரம்பமாகும் மூன்றாம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகள், மார்ச் மாதம் 24 ஆம் திகதி முடிவடைவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேதஜயந்த தெரிவித்தார். கொவிட் தொற்று வைரசு காரணமாக பாடசாலை தவணை கல்வி நடவடிக்கைகள் பல்வேறு சந்தர்ப்பங்களில் தடைப்பட்டன. இதன் காரணமாக டிசம்பர் மாதத்துடன் நிறைவடையவிருந்த 03ம் தவணை பாடசாலை கல்வி நடவடிக்கை மார்ச் மாதத்துடன் நிறைவடைகிறது. இதேவேளை நத்தார் பண்டிகை காரணமாக எதிர்வரும் 23ஆம் … Read more

அடுத்த ஆண்டு இரண்டு முறை அதிகரிக்கப்படவுள்ள மின்சார கட்டணம்

அடுத்த வருடம் ஜனவரி முதல், மின்சார கட்டணங்கள் மேலும் 30 சதவீதம் அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் அமைச்சரவையில் முன்வைத்த யோசனைக்கமைய இந்த விடயம் குறிப்பிடப்படுகின்றது. சர்வதேச நாணய நிதியத்தின் யோசனைக்கமைய, இந்த விலை அதிகரிப்பை அமுல்படுத்த நேரிடும் என குறிப்பிடப்படுகின்றது. இந்த ஆண்டு ஒகஸ்ட் மாதம் மின்சார கட்டணம் அதிகரிக்கப்பட்ட போதிலும் டிசம்பர் மாதத்திற்குள் சுமார் 160 பில்லியன் ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளனர். அத்துடன் 2023 ஆம் ஆண்டில் … Read more

இலங்கையில் குறைக்கப்பட்ட மதுபான வகையொன்றின் விலை

இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் அதிவிசேடம் மதுபான வகையின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.  மதுவரித் திணைக்கள ஆணையாளர் நாயகம் எம்.ஜே. குணசிறி இந்த விடயம் தொடர்பில் தெற்கு ஊடகமொன்றுக்கு தகவல் வெளியிட்டுள்ளார். வெளியான விலை குறைப்பு விபரம் அதன்படி 750 மில்லி லீட்டர் மதுபான போத்தலின் விலை 80 ரூபாவினாலும், 375 மில்லி லீட்டர் மதுபான போத்தலின் விலை 60 ரூபாவினாலும், 180 மில்லி லீட்டர் மதுபான போத்தலின் விலை 20 ரூபாவினாலும் குறைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  நாடு … Read more

எரிபொருள் ஒதுக்கீட்டின் மூலம் இடம்பெறும் மோசடி! வெளிவரும் தகவல்

மேல்மாகாண முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் எரிபொருள் ஒதுக்கீடு தொடர்பில் குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளனர். மேல்மாகாண முச்சக்கரவண்டி உரிமையாளர்களின் எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிப்பதற்காக பதிவுக் கட்டணம் ஒன்றை செலுத்த வேண்டிய தேவை உள்ளதாக தெரிவித்துள்ளனர். குற்றச்சாட்டு இந்நிலையில் பதிவுக் கட்டணம் என்ற போர்வையில் மேலதிக பணத்தை செலுத்த வேண்டியுள்ளதாக அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் மற்றும் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. பதிவுக் கட்டணத்தைச் செலுத்தாத முச்சக்கரவண்டி உரிமையாளர்களுக்கு மேலதிகமாக ஐந்து லீட்டர் எரிபொருள் ஒதுக்கீடு வழங்கப்படவில்லை என்று அதன் தலைவர் … Read more