சில மருந்துகளுக்கு தட்டுப்பாடு: சுகாதார பிரிவு விளக்கம்

நாட்டுக்குத் தேவையான மருந்து இறக்குமதி வரையறுக்கப்படவில்லை என மருந்து விநியோகப் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் துஷித்த சுதர்சன தெரிவித்தார். இதேவேளை,சில மருந்துகளை இறக்குமதி செய்வதற்கு வழங்குநர்கள் முன்வராரமையினால் அந்த மருந்துகள் சிலவற்றுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார். நாட்டிற்கான மருந்து தேவையில் 300 வகையான மருந்துகளே தயாரிக்கப்படுகின்றன. சுமார் 20 ஆயிரம் வகையான மருந்துகள் இறக்குமதி செய்யப்படுகின்றன. அந்நிய செலாவணி நெருக்கடியினால் மருந்து விநியோகத்தில் தாக்கம் ஏற்பட்டுள்ள போதும், அரசாங்கம் இதுபற்றி முக்கிய கவனம் செலுத்தியுள்ளது. நாட்டின் மருந்து விநியோகத்தில் … Read more

உலக அளவில் கொரோனா வைரஸ்: பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 64.92 கோடி

உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 64.92 கோடியாக அதிகரித்துள்ளது. தற்போது கொரோனா வைரஸ் 228 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் வைரஸ் தொடர்ந்து பரவி வருகிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 649,273,133ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 15,897,719 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 626,730,709 பேர் … Read more

யாழில் இரு குழுக்களுக்கிடையில் வாள்வெட்டு தாக்குதல்! இருவர் படுகாயம்

யாழ்ப்பாணம் – தாவடி மதுபான விற்பனை நிலையம் அருகே இரண்டு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் இருவர் வாள்வெட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்துள்ளனர். இன்றிரவு சனிக்கிழமை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் காயமடைந்த இருவரும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பொலிஸார் மேலதிக விசாரணை கோண்டாவில் மற்றும் இணுவில் பகுதியைச் சேர்ந்த 34 மற்றும் 30 வயது மதிக்கத்தக்கவர்களே வாள்வெட்டுக்கு இலக்காகியுள்ளனர். சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். Source link

அவசர அவசரமாக வெளிநாடு செல்லும் இளைஞர்கள் நூறு மாடிக்கு மேல் தொங்கும் நிலை! வெளியான தகவல்

கிழக்கின் பல தமிழர் பகுதிகளில் ஆண்கள் மற்றும் பெண்கள் தொழில் செய்ய முடியாத நிலையில் வெளிநாடுகளில் போய் வேலை செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றின் இன்றைய தினம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், இன்று இளைஞர்கள் 20 – 22 வயதுகளில் வேறு எந்த வழியும் இன்றி கட்டார், மத்திய கிழக்கு நாடுகளில் சென்று வேலை செய்கிறார்கள். இங்கிருந்து போகும் போது … Read more

ஹோட்டலில் உணவு உட்கொள்ள சென்றவரின் வியக்க வைக்கும் செயல் – கண்ணீர் விட்டழுத நபர்

புத்தளம் – வென்னப்புவ பிரதேசத்தில் ஹோட்டல் ஒன்றில் மறந்து வைக்கப்பட்ட 35 லட்சம் ரூபா பணப் பையொன்று உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. குறித்த ஹோட்டலுக்கு வந்த நபர் ஒருவர் பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் அதனை உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பணப்பையை மறந்துவிட்டு சென்ற நபர் ஹலவத்தை, இரணைவில பகுதியைச் சேர்ந்த மீன்பிடி படகு உரிமையாளர் ஒருவர் கடந்த 30ஆம் திகதி காலை தனது மீன்பிடி படகுகளுக்கு எரிபொருளை பெற்றுக் கொள்வதற்காக நீர்கொழும்புக்கு வந்த போது வென்னப்புவ பகுதியில் உள்ள … Read more

நீச்சல் தடாகத்தில் மூழ்கி 14 வயது மாணவன் பலி

வென்னப்புவ – பொரலெஸ்ஸ பகுதியிலுள்ள ஹோட்டல் ஒன்றில் நீச்சல் தடாகத்தில் நீராடிய சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். தரம் 10 இல் கல்வி கற்கும் 14 வயதான சிறுவனே நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். மேலதிக வகுப்பை சேர்ந்த 80 மாணவர்களுடன் சுற்றுலா சென்றிருந்த போது தங்கியிருந்த ஹோட்டலில் உள்ள நீச்சல் தடாகத்தில் நீராடிய போது இந்த அனர்த்தம் இடம்பெற் றுள்ளது. சடலம் சிலாபம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. Source link

வட கிழக்கின் விவசாயத்தின் மூலம், நாட்டின் உணவுத்தட்டுப்பாட்டை தீர்க்க வாய்ப்பு

எமது மக்களுக்கு நீண்டகாலமாக தீர்க்கப்படாத பிரச்சனைகளில் , காணிப்பிரச்சனையும் பிரதானமானது என்று பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளர், அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார்.  பாராளுமன்னறத்தில் நேற்று(02) வனஜீவராசிகள் மற்றும் வனவளங்கள் பாதுகாப்பு அமைச்சு, சுற்றுலாத்துறை மற்றும் காணி அமைச்சுக்களுக்கு ,2023 வரவு செலவுத்திட்ட நிதி ஒதுக்கீட்டு குழுநிலை விவாதத்தில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார். தற்போதைய பொருளாதார நெருக்கடியால் ஏற்பட்டுள்ள உணவுத்தட்டுப்பாட்டை தவிர்க்க இலங்கையின் 30% நிலப்பரப்பை கொண்ட வட கிழக்கின் விவசாயத்தின் மூலம், உணவு உற்பத்தியை அதிகரித்து, நாட்டின் … Read more

வெளிநாட்டில் பணிபுரியும் வீட்டுப் பணிபெண்:ஊடகங்கள் பொறுப்புடன் செய்திகளை வெளியிட வேண்டும்

வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையை சேர்ந்த வீட்டுப் பணிபெண் தொடர்பில் ஊடகங்கள் பொறுப்புடன் செய்திகளை வெளியிட வேண்டும் என்று நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக் ஷ . பாராளுமன்றத்தில் தெரிவித்தார். நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு, தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சுக்களுக்கான 2023 வரவு செலவுத்திட்ட நிதி ஒதுக்கீட்டு குழு நிலை விவாதம் இன்று (03) இடம்பெற்றது விவாதத்தில் கலந்துகொண்ட அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக் ஷ, இலங்கையை … Read more

அடுத்த ஆண்டு முதல் புதிய பாடத்திட்டத்தின் கீழ், உயர் தர மாணவர்களுக்கு தகவல் தொழில்நுட்ப பிரிவு

டிஜிட்டல் பொருளாதாரத்தை உருவாக்குவற்கு கல்வி சீர்திருத்தங்கள் அவசியமாகும் என இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவித்துள்ளார். இதற்கமைவாக உயர் பிரிவில் கற்கும் மாணவர்களுக்கு அடுத்த ஆண்டு முதல் புதிய பாடத்திட்டத்தின் கீழ் தகவல் தொழில்நுட்ப பிரிவு ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார். ஒரு இலட்சம் அரச அதிகாரிகளுக்கு டிஜிட்டல் தகவல் தொழில்நுட்ப அறிவை பெற்றுக் கொடுக்கும் வேலைத்திட்டத்தை அரசாங்கம் நேற்று (02) ஆரம்பித்துள்ளது. இதன் கீழ் கேகாலை மாவட்ட செயலகத்தில் . அரச அதிகாரிகளுக்கு டிஜிட்டல் தகவல் தொழில்நுட்ப … Read more

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களை மாலைதீவு உப ஜனாதிபதி சந்தித்தார்

மாலைதீவு உப ஜனாதிபதி பைசல் நசீம் (Faisal Naseem) நேற்று (02) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களை ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்தார். மாலைதீவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால நட்புறவைக் கருத்தில் கொண்டு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள், இலங்கையின் உயர் தொழில்நுட்ப விவசாயத் துறை, கப்பல் சுற்றுலா மற்றும் உயர்தர சுற்றுலாத் துறைகளில் முதலீடு செய்யுமாறு மாலைதீவுக்கு வேண்டுகோள் விடுத்தார். காலநிலை மாற்ற பல்கலைக்கழகத்தை நிறுவுவதற்கு இலங்கையுடன் கைகோர்க்குமாறு மாலைதீவுக்கு ஜனாதிபதி விக்ரமசிங்க அவர்கள் வேண்டுகோள் விடுத்தார். … Read more