சீனாவின் முன்னாள் ஜனாதிபதி ஜியெங் செமினின் மறைவுக்கு – ஜனாதிபதி இரங்கல்

சீன மக்கள் குடியரசின் முன்னாள் ஜனாதிபதி ஜியெங் செமினின் (Jiang Zemin) மறைவுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் தனது ஆழ்ந்த அனுதாபங்களை வெளியிட்டுள்ளார். கொழும்பில் உள்ள சீனத் தூதரகத்திற்கு நேற்று (02) பிற்பகல் நேரில் சென்ற ஜனாதிபதி, அங்கு வைக்கப்பட்டுள்ள இரங்கல் புத்தகத்தில் விசேட குறிப்பொன்றை எழுதியதன் மூலம் முன்னாள் சீன ஜனாதிபதியின் மறைவுக்கு தனது இரங்கலை தெரிவித்தார். இங்கு கருத்து தெரிவிக்கும்போது, மறைந்த தலைவர் ஜியெங் செமின் சீன மக்கள் குடியரசிற்கு சிறந்தப் பங்களிப்பை … Read more

நிர்மாணத்துறையின் கொடுப்பனவுகளை அடுத்த வருடத்தில் செலுத்த திட்டம்

கொவிட் தொற்றுநோய் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு முன்னர் இருந்ததை விட நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்புத் துறையை உயர் மட்டத்திற்கு கொண்டு செல்வதே தனது நம்பிக்கை என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இன்று (3) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுக்கும் வகையில் பல்வேறு தடைகள் உள்ள போதிலும், நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு தொழில்துறையை மேம்படுத்த தயாராக உள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். புதிய அரசியல் … Read more

விசேட தேவையுடையோரின் நலனுக்காக ,புதிய வேலைத்திட்டம் – ஜனாதிபதி

விசேட தேவையுடையவர்களின் நலனுக்காக புதிய வேலைத்திட்டமொன்று தயாரிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் தெரிவித்தார். விளையாட்டு, சுகாதாரம், இளைஞர் விவகாரம் உள்ளிட்ட பல அமைச்சுக்களின் ஒத்துழைப்புடன் தயாரிக்கப்படும் இப்புதிய வேலைத்திட்டத்தை விரைவில் அமைச்சரவையில் சமர்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். 2022 ஆம் ஆண்டுக்கான சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு இன்று (03) முற்பகல் அலரி மாளிகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய நிகழ்வில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். பல்வேறு திறன்களைக் … Read more

ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம்: மறுசீரமைக்கப்பட வேண்டும்

ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் தற்போது குறிப்பிடத்தக்க இலாபத்தை ஈட்டி வருவருகிறது. ஆனால் கடன் காரணமாக  வெற்றிகரமாக நடத்துவதில் சிக்கல்கள் எழுந்துள்ளது. அதனை மறுசீரமைக்க வேண்டியுள்ளதாக அமைச்சர் நிமால் சிறிபால டீ சில்வா தெரிவித்துள்ளார். விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் தான் இது பற்றிய யோசனையினை அமைச்சரவைக்கு முன்வைத்திருப்பதாக அமைச்சர் தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (02) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அமைச்சர் 100 கோடி அமெரிக்க டொலருக்கும் அதிகமான தொகையை  ஸ்ரீ … Read more

இம்மாத இறுதியில் வீட்டிற்கு செல்லப் போகும் அரச ஊழியர்கள் தொடர்பில் வெளியான தகவல்

இம்மாதம் 31ஆம் திகதியுடன் 60 வயது பூர்த்தியாகும் அரச ஊழியர்கள் எவருக்கும் சேவை நீடிப்பை வழங்கப் போவதில்லை என்ற உறுதியான நிலைப்பாட்டில் நிதியமைச்சின் செயலாளர் மற்றும் அதன் பிரதானிகள் கடுமையான நிலைப்பாட்டில் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. சேவை நீடிப்பை பெற முயற்சி இந்த ஆண்டு டிசம்பர் 31ஆம் திகதி 60 வயதை எட்டும் அதிகாரிகள் 27 பேர் நாடாளுமன்றத்தில் உள்ளனர். இந்த நிலையில் அவர்கள் சேவை நீடிப்பை பெறுவதற்கான முயற்சிகளில் தற்போது ஈடுபட்டுள்ளதாக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இது … Read more

காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தித் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன

நாட்டின் துறைமுகம் இலாபகரமான நிறுவனமாக மாறியுள்ளதாக துறைமுகங்கள்  , கப்பல் மற்றும் விமான போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்திக்காக 45 மில்லியன் அமெரிக்க டொலர்களை இந்தியா வழங்கியுள்ளது சலுகை அடிப்படையில் வழங்கப்பட்டுள்ள இந்த கடன் திட்டத்தில் அங்கு அபிவிருத்தித் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அலைதாங்கி உட்பட பல்வேறு தேவைகளை உருவாக்குவதற்கு சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும் அமைச்சர்; தெரிவித்தார். எதிர்காலத்தில் கொழும்பு துறைமுகம், கொள்கலன் முனையங்கள் மட்டுமன்றி பயணிகள் கப்பல்களுக்கான … Read more

இலங்கைக்கு தொடர்ந்தும் உதவுவோம்! அமெரிக்கா அறிவிப்பு

இலங்கையின் பொருளாதார மீட்சிக்காக அமெரிக்கா உதவிகளை வழங்கும் என்று அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார். அலி சப்ரியை சந்தித்த அன்டனி பிளிங்கன் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியை நேற்று அமெரிக்க ராஜாங்க திணைக்களத்தில் சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பிளிங்கன் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.  அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கை மற்றும் அமெரிக்காவுக்கு இடையில் அடுத்த வருடத்துடன் 75 வருட ராஜதந்திர உறவு பூர்த்தியடைகிறது. இந்த நிலையில் அமெரிக்கா இலங்கைக்கு அன்பளிப்பு, கடன் மற்றும் ஏனைய … Read more

அரசாங்க ஊழியர்களுக்கான சம்பளம் தொடர்பில் வெளியான புதிய தகவல்

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அரசாங்க ஊழியர்களுக்காக வழங்கப்படும் சம்பளத்தை நிறுத்தப்போவதில்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார். அரச ஊழியர்களின் சம்பளத்தை குறைக்காமல் அந்த சுமையை அரசு ஏற்றுள்ளதாக ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியின் போது இதனைத் தெரிவித்துள்ளார். தற்போது முன்வைக்கப்பட்டுள்ள வரவு செலவுத் திட்டத்தில் மக்களுக்கு ஏதும் நிவாரணங்கள் வழங்கப்படவில்லை என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன. இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் அரசியல் நோக்கங்களை அடிப்படையாக கொண்டு முன்வைக்கப்படுகின்றன. அடுத்த ஆண்டுக்கான அரசின் செலவு சுமார் 7885 பில்லியன் … Read more

எதிர்க்கட்சி உறுப்பினர் சிலரின் நடத்தை மிகவும் கவலைக்குரியது

எதிர்க்க கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சிலரது நடத்தை மிகக் கலலைக்குரியதாக இருப்பதாக ,சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன சுட்டிக்காட்டினார்.