பல்கலைக்கழகங்களுக்கு தெரிவான மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு

வெட்டுப்புள்ளியின் அடிப்படையில் பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் தெரிவு செய்யப்படவுள்ள பாடநெறி மற்றும் பல்கலைக்கழகம் தொடர்பான தகவல்கள் 2 வாரங்களுக்குள் அறிவிக்கப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர், சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார். குறித்த தகவல்கள் குறுஞ்செய்தி மூலமாகவே அல்லது மின்னஞ்சல் மூலமாகவே அறிவிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். மேன்முறையீடு  அத்துடன் ஏதேனும் மேன்முறையீடு இருந்தால் அதனை 30 நாட்களுக்குள் சமர்ப்பிக்குமாறும் அவர் தெரிவித்துள்ளார். 2021 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயர்தர பரீட்சை பெறுபேறுகளை … Read more

மொணராகலை, கொட்டியாகலையில் பயிர்ச் செய்கைக்காக 5000 ஹெக்டெயர் காணிகளை, தற்காலிகமாக பகிர்ந்தளிக்க நடவடிக்கை.

மொணராகலை, கொட்டியாகலை, கெபிலித்த பிரதேசத்தில் வனவளத் திணைக்களத்திற்கு சொந்தமான காடுகளை மீள் வளர்ப்பதற்காக ஒதுக்கப்பட்ட காணிகளை, பயிர்ச் செய்கைக்குப் பயன்படுத்துவது தொடர்பாக விசேட கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது. எதிர்காலத்தில் ஏற்படவுள்ள உணவு நெருக்கடியை எதிர்கொள்ளும் வகையில் இந்தக் காணிகளை பயிர்ச்செய்கைக்கு பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.   தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தலைமையில் நேற்று (01) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.   மொணராகலை, கொட்டியாகலை, கெபிலித்த பிரதேசத்தில் வனவளத் … Read more

பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளி இன்று

2021 ஆம் ஆண்டு உயர்தர பரீட்சையின், பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளி இன்று(02) மாலை வெளியிடப்படும் என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதற்கமைவாக 2021 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்கள் ,இது தொடர்பான விபரங்களை WWW.ugc.ac.lk  இணையத்தளம் ஊடாக அறிந்து கொள்ள முடியும்.

இரகசியமான ஆவணங்களை பாதுகாக்கும் சிறப்புப் பை: ரணிலிடம் கையளித்த இலங்கை இராணுவம் (Photos)

ஜனாதிபதியின் ஆவணங்களைக் கொண்டு செல்லக்கூடிய சர்வதேச தரத்தினாலான சிறப்புப் பை (Attaché Case) இராணுவத் தளபதி லுதினன் ஜெனரல் விக்கும் லியனகேயினால் இன்று (02) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டது. இலங்கை இராணுவத்தின் மின் மற்றும் இயந்திர பொறியியலாளர்களால் இந்த சிறப்புப் பை வடிவமைக்கப்பட்டுள்ளது. சிறப்புப் பை உலகத் தலைவர்கள் பயணம் செய்யும் போது முக்கியமான மற்றும் இரகசியமான ஆவணங்களை எடுத்துச் செல்ல ஒரு சிறப்புப் பையை (Attaché Case) பயன்படுத்துவது மரபாகும். … Read more

தேர்தல் ஆணைக்குழுவினால் பதிதாக 7 அரசியல் கட்சிகளுக்கு அங்கீகாரம்

தேர்தல் ஆணைக்குழுவினால் பதிதாக 7 அரசியல் கட்சிகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு:

கொழும்பு துறைமுகத்திற்கு இரண்டு உரக் கப்பல்கள்

ஐக்கிய நாடுகள் சபையின் உணவு, விவசாய அமைப்பினால் 8 மாவட்டங்களில் உள்ள குறைந்த வருமானங்களைக் கொண்ட விவசாயக் குடும்பங்களுக்காக வழங்கப்படும் 9,000 மெற்றிக் தொன் யூரியாவுடனான கப்பல் இன்று (02) காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. பெரும்போக நெல் உற்பத்திக்கு தேவையான உரம் அதாவது, விசேட வகையான உரம் Miuriate of Potash (MOP)  அல்லது பண்டி உரம் 41,876 மெற்றிக் தொன் உடனான கப்பல் இன்றிறவு கொழும்புத் துறைமுகத்தை வந்தடையவுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த உரத்தை … Read more

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

க.பொ.த (உ/த) பரீட்சை 2021 பரீட்சார்த்திகளுக்கான பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிப்பதற்கான வெட்டுப்புள்ளிகள் இன்று பிற்பகல் வெளியிடப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் இன்று தெரிவித்துள்ளார். இதற்கான பணிகள் முழுமையாக நிறைவுப் பெற்றுள்ளதாக உயர்க் கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் நேற்று நாடாளுமன்றில் தெரிவித்தார்.  உயர்க்கல்வி இந்த வெட்டுப்புள்ளிகளின் அடிப்படையில் 44 ஆயிரம் மாணவர்கள் தமது உயர்க்கல்விக்காக பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கப்படவுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  www.ugc.ac.lk இல், நுழைவு கட்-ஆஃப் மதிப்பெண்களைப் பார்க்க முடியும் எனவும் பல்கலைக்கழக மானியங்கள் … Read more

sss

ஐக்கிய நாடுகள் சபையின் உணவு, விவசாய அமைப்பினால் 8 மாவட்டங்களில் உள்ள குறைந்த வருமானங்களைக் கொண்ட விவசாயக் குடும்பங்களுக்காக வழங்கப்படும் 9,000 மெற்றிக் தொன் யூரியோவுடனான கப்பல் இன்று காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. பெரும்போக நெல் உற்பத்திக்கு தேவையான உரம் அதாவது, விசேட வகையான உரம்…. அல்லது பண்டி உரம் 41876 மெட்ரிக் டொன் உடனான கப்பல் இன்றிறவு கொழும்புத் துறைமுகத்தை வந்தடையவுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த உரத்தை நாளை மாலை இறக்குவதற்கான பணிகள் … Read more