அரச ,தனியார் துறையினரை ஒன்றிணைத்து நாட்டின் அபிவிருத்திப் பணிகளை நடைமுறைப்படுத்த நடவடிக்கை

கட்டட நிர்மாணத்துறையில் வேலைகள் நிறுத்தப்படுவதால் பெரும் எண்ணிக்கையானவர்களுக்கு  தொழில் இல்லாமல் போகும் பின்னணியில் அரச மற்றும் தனியார் துறையினரை ஒன்றிணைத்து எதிர்கால அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்க அரசாங்கம் கொள்கை ரீதியில் தீர்மானித்திருப்பதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் மற்றும் அரசாங்கக் கட்சி முதற்கோலாசான் கௌரவ பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார். நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு அமைச்சரின்  தலையில் அண்மையில் (22) பாராளுமன்றத்தில் கூடிய போது, நகர அபிவிருத்தித் திட்டங்கள் … Read more

ஆட்சிக்காக சிங்கள மக்கள் மத்தியில் பிரச்சினையை எழுப்ப வேண்டாம்! பிள்ளையான் விடுத்துள்ள எச்சரிக்கை (Video)

70 ஆண்டுகள் நீடிக்கின்ற இந்த பிரச்சினையிலே அரசியலுக்காக அல்லது ஆட்சியை பிடிப்பதற்காக வருகின்ற தலைவர்கள் சிங்கள மக்கள் மத்தியில் துவேசத்தை கிளப்பிவிட்டால் மீண்டும் பிரச்சினைகள் எழுமே தவிர தீர்வு கிடைக்காது என இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) எச்சரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்றில் இன்றைய தினம் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். “கடந்த காலங்களில் தமிழர்களிடம் ஒற்றுமையில்லை என்கிற பெரிய பிரச்சினையொன்று இருந்து வந்தது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார். கடந்த காலங்களில் தமிழரசுக் கட்சி அனைத்துக் கட்சிகளுக்கும் … Read more

கிராம வீதி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ், வடக்கு , கிழக்கு மாகாணங்களுக்கு முன்னுரிமை

உலக வங்கியுடன் இணைந்து கிராமப்புர வீதிகளைஅபிவிருத்தி செய்யும் பணிகள் ,தெரிவு செய்யப்பட்ட மாகாணங்களில் இருந்து ஆரம்பிக்கப்பட உள்ளதாக வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுறை சந்திரகாந்தன் இன்று (28) பாராளுமனறத்தில் தெரிவித்தார். 2023 வரவு செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தில் நெடுஞ்சாலைகள் அமைச்சுக்கான  நிதி ஒதுக்கீட்டு குழு நிலை விவாதத்தில் உரையாற்றிய இராஜாங்க அமைச்சர் ,  இந்த  திட்டத்தின் கீழ்; வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு முன்னுரிமை வழங்க எதிர்பார்த்துள்ளோம். இவை சரியாக இடம்பெற்றால் ,கிராமங்களுக்கும் நகரங்களுக்குமான … Read more

நாட்டின் சிறுவர்களுக்கு பாராளுமன்றத்திலிருந்து சிறுவர் புத்தகம்

இலங்கைப் பாராளுமன்றத்தினால் வெளியீடான ‘சிறியதொரு தீவில் பறவைகளின் கதை’ சிறுவர் கதைப்புத்தகம் சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன உள்ளிட்ட விருந்தினர்களின் தலைமையில் நேற்று (27) கொழும்பு பொது நூலகத்தின் சிறுவர் பிரிவில் வெளியிடப்பட்டது. எதிர்கால தலைமைத்துவத்துக்குத் தயாராகும் இந்நாட்டின் சிறுவர்கள் மத்தியில் பிரதிநிதித்துவ ஜனநாயகம் மற்றும் இலங்கை பாராளுமன்றம் குறித்து எளிமையான மொழியில் சுவாரஸ்யமாக விளக்கும் இந்த சிறுவர் கதைப்புத்தகம் சிங்களம், தமிழ் மற்றம் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் வெளியிடப்பட்டது. சபாநாயகர் கௌரவ மஹிந்த … Read more

உதைபந்தாட்ட போட்டியில் மோசமான தோல்வி – ஐரோப்பிய நாடொன்றில் வன்முறை

பெல்ஜியத்தின் தலைநகர் பிரஸ்ஸல்ஸ் நகரில் உதைபந்தாட்ட ரசிகர்கள் மோசமான செயற்பாடுகள் காரணமாக வன்முறையாக வெடித்துள்ளது. உலகக் கிண்ண உதைப்பந்தாட்ட போட்டித்தொடரில் நேற்றைய தினம் பெல்ஜியம் மற்றும் மொரோக்கோ அணிகள் மோதின. போட்டியில் மொராக்கோவிடம் 2 – 0 என்ற கோல் கணக்கில் மோசமான தோல்வி அடைந்ததால் பெல்ஜியம் ரசிகர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். மோசமான தோல்விக்குப் பிறகு பெல்ஜியம் ரசிகர்கள் கோபத்தில் பிரஸ்ஸல்ஸ் நகரில் கலவரத்தில் ஈடுபட்டுனர். வீதியால் சென்ற வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டு 500 மேற்பட்ட ரசிகர்கள் … Read more

தேசிய பாதுகாப்பு கல்லூரியில் பயின்ற இலங்கை அதிகாரிகளின் மீளிணைவு

இந்தியாவின் தேசிய பாதுகாப்பு கல்லூரி மற்றும் இலங்கை ஆயுதப் படையினர் இடையிலான 50 ஆண்டுகால ஒத்துழைப்பினைக் குறிக்கும் முகமாக 2022 நவம்பர் 24ஆம் திகதி இந்திய உயர் ஸ்தானிகராலயத்தால் விசேட நிகழ்வுகள் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தன. இந்தியா மற்றும் இலங்கையைச் சேர்ந்த இராணுவத்தினர் இடையிலான ஒத்துழைப்பு, தோழமை மற்றும் நட்புறவு ஆகியவற்றின் நிலைபேறான பிணைப்பினை கொண்டாடும் வகையில் இந்நிகழ்வு அமைந்திருந்தது. பாதுகாப்புச் செயலர், பாதுகாப்பு படைகளின் பிரதானி, இலங்கை கடற்படை மற்றும் விமானப்படை ஆகியவற்றின் தளபதிகள், தேசிய பாதுகாப்பு கல்லூரியில் … Read more

கொழும்பு அரசியலில் ஏற்படவுள்ள மாற்றம்! இரண்டாக பிளவுப்படும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயற்பாடுகளுக்கு அதே கட்சியின் உறுப்பினர்கள் குழுவொன்று எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எதிர்காலத்தில் கட்சியில் ஏற்பட வேண்டிய மாற்றங்கள் தொடர்பிலும் ஆலோசனைகளை முன்வைக்க இந்தக் குழு தயாராக இருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த யோசனைகள் ஏற்கப்படாவிட்டால், மாற்று நடவடிக்கையில் இறங்கி மற்றொரு அரசியல் பயணத்தை தொடங்க முடிவு செய்துள்ளனர். இந்தக் குழுவில் தற்போது அமைச்சர் பதவிகளை வகிக்கும் பல முதியவர்களும்,இளைஞர்,அமைச்சர்கள் குழுவும் உள்ளனர். Source link

செல்லக்கதிர்காம பிரதேச மக்களுக்கு விசேட அறிவிப்பு

மொனராகலை மாவட்டத்தில் பெய்து வரும் கடும் மழை காரணமாக வெஹெரகல நீர்த்தேக்கத்தின் ஆறு வான் கதவுகள் தலா ஒன்றரை அடி அகலத்தில் திறக்கப்பட்டுள்ளது. வான் கதவுகள் திறக்கப்பட்டதையடுத்து, மெனிக் ஆற்றின் நீர்மட்டமும் வேகமாக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக கதிர்காமம், செல்லக்கதிர்காம பிரதேச மக்களையும், மெனிக் ஆற்றை பயன்படுத்தும் பக்தர்களையும் அவதானமாக செயல்படுமாறு மொனராகலை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு அறிவித்துள்ளது. தொடர்ந்து மழை பெய்தால் ,வெஹெரகல நீர்த்தேக்கத்தின் வான்கதவுகளை மேலும் திறக்க வேண்டிய நிலை ஏற்படலாம் என … Read more

அரசியற் கைதிகளும் தமிழ் மக்களும்

Courtesy: நிலாந்தன் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவைக் கொலை செய்ய முயன்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு இருபத்தி மூன்று ஆண்டுகளாக சிறையில் வைக்கப்பட்டிருந்த இந்து மதகுருவான ரகுபதி சர்மா அண்மையில் பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்பட்டிருக்கிறார். அவரோடு சேர்ந்து கைது செய்யப்பட்ட அவருடைய மனைவி வசந்தி சுமார் 15 ஆண்டுகளின் பின் குற்றமற்றவர் என்று நீதிமன்றினால் ஏற்கனவே விடுதலை செய்யப்பட்டு விட்டார். ரகுபதி சர்மா இப்பொழுது இரத்மலானையில் உள்ள உள்ள இந்துமா மன்றத்துக்கு சொந்தமான ஒரு கட்டிடத்தில் தங்கியிருக்கிறார். … Read more

பதுளை மாவட்டத்தில் மண்சரிவு அனர்த்த நிலை

பதுளை மாவட்டத்தில் மண்சரிவு அனர்த்த நிலை இருப்பதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பு தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்தில், 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை பெய்துள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. பதுளை, ஹப்புத்தளை பிராந்திய பிரிவுக்கு இந்த அபாயம் இருப்பதாக மத்திய நிலையம் இன்று காலை வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.