பல இடங்களில் , இடியுடன் கூடிய மழை

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு ,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்பு பிரிவால் வெளியிடப்பட்டது. 2022 நவம்பர்28ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2022 நவம்பர் 28ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது ஊவா, சப்ரகமுவ, மத்திய மற்றும் தென்மாகாணங்களில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடியசாத்தியம் காணப்படுகின்றது. மேல்,வடமேல், வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம்காணப்படுகின்றது. … Read more

கொழும்பிற்கு வந்துள்ள றோ தலைவர்! பசிலுடன் தனியாக சந்திப்பு

இலங்கை அரசாங்கத்தின் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக கடந்த திங்கட்கிழமை இந்தியாவின் புலனாய்வு மற்றும் ஆராய்ச்சிக்கான முகவரமைப்பின் றோ தலைவர் சமந்த் குமார் கோயல், கொழும்பிற்கு வருகை தந்திருந்ததுடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவைச் சந்தித்து விரிவான முறையில் பேச்சுக்களை நடத்தியுள்ளார். இச்சந்திப்பின் போது ஜனாதிபதியின் சிரேஷ்ட தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சாகல ரத்நாயக்க மற்றும் இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட ஆகியோரும் இணைந்திருந்தனர். பாரம்பரியமாக, இந்தியாவின் வெளிப்புற புலனாய்வு முகவரமைப்பின் தலைவர் அமைச்சரவை செயலகத்தில் செயலாளராக (ஆய்வு) … Read more

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி அமெரிக்காவிற்கு விஜயம்

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி அமெரிக்காவிற்கு விஜயம் செய்ய உள்ளார். அமைச்சர் அலி சப்ரி, நாளை அமெரிக்கா நோக்கிப் புறப்பட்டுச் செல்வார் என வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. பொருளாதார நெருக்கடி ஐக்கிய அமெரிக்காவின் இராஜாங்கச் செயலாளர் அன்தனி பிலின்கன் உள்ளிட்ட பல முக்கியஸ்தர்களுடன் சப்ரி பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலமை மற்றும் கடன் மறுசீரமைப்பு போன்றன தொடர்பில் இந்த விஜயத்தில் விசேட கவனம் செலுத்தப்பட உள்ளது. சர்வதேச நாணய நிதியம் மற்றும் … Read more

இலங்கைக்கு வரவுள்ள மற்றுமொரு உல்லாச கப்பல்

‘மீன் ஷ்சிப் 5’ என்ற பாரிய பயணிகள் உல்லாச கப்பல் எதிர்வரும் 29ஆம் திகதி இலங்கை வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  இலங்கை வரும் இந்தக் கப்பல் முதலில் கொழும்பு கிழக்கு கொள்கலன் முனையத்தில் நங்கூரமிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹம்பாந்தோட்டை துறைமுகம் கொழும்பு துறைமுகத்தின் பயணிகள் இறங்குத்துறைக்கு இந்த கப்பலை நங்கூரமிட இடவசதி செய்யப்பட்டுள்ளது. இதன்பின்னர், எதிர்வரும் 30ஆம் திகதி குறித்த கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சென்றடைந்து அன்றைய தினமே சுற்றுலா பயணிகளுடன் புறப்படவுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.  சுற்றுலாப் பயணிகள் … Read more

ருஹுனு கல்லூரியில் மோதல்! 12 மாணவர்கள் வைத்தியசாலையில்

ருஹுனு தேசிய கல்வி கல்லூரியில் ஏற்பட்ட மோதலில் மாணவர்கள் குழுவொன்று தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விஞ்ஞான பீடத்தில் கல்வி கற்று தற்போது பயிற்சி பெற்ற ஆசிரியர்களாக கடமையாற்றும் மாணவர்கள் குழுவொன்று விஞ்ஞான பீடத்தில் தங்கியிருந்த மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. சிகிச்சை பெறும் மாணவர்கள் நேற்றிரவு (26) சிரேஷ்ட மாணவர்கள் குழு விருந்து நடத்தியதாகவும், பின்னர் அவர்களில் 50 பேர் கொண்ட குழுவொன்று விஞ்ஞான பீட வளாகத்திற்கு வந்து தாக்குதலை … Read more

2022 ஆண்டு சாதாரண தர பரீட்சை குறித்து கல்வி அமைச்சர்…

2022 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொது சாதாரண தர பரீட்சையை ,ஏப்ரல் மாத இறுதியில் அல்லது 2023 மே மாத தொடக்கத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (27) இடம்பெற்ற ஊடகவியலளார் சந்திப்பில் அமைச்சர் இதுதொடர்பாக மேலும் தெரிவிக்கையில், .இந்த பரீட்வையை ; நடத்துவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வதாகவும் தெரிவித்தார். இதேவேளை, பாடசாலை மாணவர்கள் மத்தியில் காணப்படுவதாக தெரிவிக்கப்படும் போதைப்பொருள் பாவனை குறித்து அமைச்சர் தெரிவிக்கையில் ,இதனை இல்லாது ஒழிப்பதற்கு விசேட … Read more

தெற்காசிய கராத்தே சம்பியன்ஷிப் போட்டி நாளை கொழும்பில் ஆரம்பம்

ஆறாவது தெற்காசிய கராத்தே சம்பியன்ஷிப் போட்டித் தொடர் கொழும்பு சுகததாஸ உள்ளக விளையாட்டரங்கில் நாளை திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளது. இந்த போட்டித் தொடரில் ஆறு நாடுகளைச் சேர்ந்த 280க்கும் அதிகமான விளையாட்டு வீரர்கள் போட்டியிடவுள்ளனர்.  இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி சுமார் 86 கராத்தே விளையாட்டு வீரர்கள் பங்கேற்கவுள்ளனர். போட்டித் தொடரை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தெற்காசிய கராத்தே சம்மேளனமும், இலங்கை கராத்தே சம்மேளனமும் இணைந்து இதனை ஏற்பாடு செய்துள்ளன.

பெரிய வெங்காய விலைக்கு நிவாரணம்

விசேட வர்த்தக பொருட்களுக்கான வரி விகிதத்தை குறைப்பதற்கு உணவு கொள்கைகள் குழு கடந்த 24ஆம் தேதி கூடிய போது பரிந்துரை செய்தது. அதற்கமைய, சந்தையில் பெரிய வெங்காயத்தை விலைக்கு வாங்குவதை அதிகரிப்பதற்கும் அதன் விலையை குறைப்பதற்கும் ஏதுவாக அமைந்தது. வெங்காயத்துக்கான மொத்த தேவை ஆண்டுக்கு சுமார் 300,000 மெட்ரிக் டொன்னாகும். அத்தேவையானது முக்கியமாக (86%) இறக்குமதி மூலமே நிறைவேற்றப்படுகின்றது. அதன்படி வெங்காயத்தின் தன்னிறைவு விகிதம் ஒரு ஆண்டுக்கான தேவையில் 14% வீதமாகும். நவம்பர் மாத மூன்றாவது வாரம் … Read more