இலங்கையில் தரையிறங்கியுள்ள உலகின் மிகப்பெரிய விமானம்

உலகின் மிகப்பெரிய விமானம் ஒன்று இலங்கையில் தரையிறக்கப்பட்டுள்ளது.  மிகப்பெரிய உக்ரைனிய சரக்கு விமானமான அன்டோனோவ் ஆன்-225  என்ற விமான வகையைச் சேர்ந்த, antonov An-124-100 என்ற  சரக்கு விமானமே இவ்வாறு இலங்கையில் தரையிறக்கப்பட்டுள்ளது.   மத்தள சர்வதேச விமான நிலையில் இன்று காலை 06.35 மணிக்கு குறித்த விமானம் தரையிறங்கியுள்ளது.   இன்று இரவு மீண்டும் புறப்படும் விமானம் விமானத்திற்கு எரிபொருள் நிரப்புவதற்கும் விமான ஊழியர்கள் ஓய்வெடுத்து செல்லவும் இவ்வாறு விமானம் தரையிறக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கையில் இருந்து இன்று இரவு இந்த … Read more

உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், விவசாயத் துறைக்குத் தேவையான உரங்கள்

உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் விவசாயத் துறைக்குத் தேவையான உரங்கள் மற்றும் விதைகளைப் போதியளவு பெற்றுக் கொடுக்க வேண்டியதன் அவசியம் குறித்து பொருளாதார ஸ்திரத்தன்மை தொடர்பிலான தேசிய பேரவையின் உப குழு கலந்துரையாடல் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் விவசாயத் துறைக்குத் தேவையான உரங்கள் மற்றும் விதைகளைப் போதியளவு பெற்றுக் கொடுக்க வேண்டியதன் அவசியம் குறித்து பொருளாதார ஸ்திரத்தன்மை தொடர்பிலான குறுகிய கால மற்றும் நடுத்தர கால நிகழ்ச்சித்திட்டங்களை அடையாளம் காணல் பற்றிய தேசிய பேரவையின் உப … Read more

நான்கு அமைச்சுக்களின் செயலாளர்கள், நிறுவனத் தலைவர் ஒருவர், தூதுவர் ஒருவரின் நியமனங்களுக்கு உயர் பதவிகள் பற்றிய குழு அனுமதி

நான்கு அமைச்சுக்களின் செயலாளர்கள், நிறுவனத்தின் தலைவர் மற்றும் தூதுவர் ஒருவரின் நியமனங்களுக்கு உயர் பதவிகள் பற்றிய குழுவில் அண்மையில் (22) அனுமதி வழங்கப்பட்டிருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக தெரிவித்தார். இதற்கமைய ஐக்கிய அரபு இராச்சியத்துக்கான புதிய இலங்கைத் தூதுவராக உதய இந்திர ரத்னவை நியமிப்பதற்கு உயர் பதவிகள் பற்றிய குழுவின் அனுமதி வழங்கப்பட்டது. அத்துடன், சுற்றுலாத்துறை மற்றும் காணி அமைச்சின் செயலாளராக சூலானந்த பெரேராவை நியமிப்பதற்கும், வெளிநாட்டு அமைச்சின் செயலாளராக திருமதி அருணி விஜேவர்தனவை … Read more

தங்க ஆபரண கடத்தல்காரர்களுக்கு எதிராக நடவடிக்கை-வர்த்தமானி அறிவிப்பும் வெளியிடப்படும்

விமான பயணிகளாக வருகை தரும் தங்க ஆபரண கடத்தல்காரர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு எதிர்வரும் வாரத்தில் வெளியிடப்படும் என்று நிதி ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலப்பிட்டிய தெரிவித்தார். ஏற்றுமதி இறக்குமதி கட்டுப்பாளர் நாயகத்தின் அனுமதியின்றி தங்க ஆபரணங்களை அணிந்து கொண்டு விமான பயணிகளாக வருகை தருபவர்களை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதே இதன் நோக்கமாகும். தங்க ஆபரணங்களின் தரம் மற்றும் அளவு பற்றி ஆராய்வதற்கு விசேட தொழில்நுட்ப முறையினை … Read more

முட்டையொன்றின் விற்பனை விலையை கணித்து ஒரு வாரத்துக்குள் அரசாங்க நிதி பற்றிய குழுவுக்கு அறிவிக்குமாறு பணிப்பு  

கோழிகளுக்கான உணவுகளை இந்நாட்டுக்கு இறக்குமதி செய்வது தொடர்பில் 1969 ஆம் ஆண்டு 1 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகளை கருத்தில் கொள்ளும் போது தற்போதைய விலைக்கு அமைய முட்டை ஒன்றை விற்பனை செய்யக்கூடிய சரியான விலையை ஒரு வாரத்துக்குள் வழங்குமாறு அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ (கலாநிதி) ஹர்ஷ டி சில்வாவினால் நிதி மற்றும் வர்த்தக அமைச்சின் அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கப்பட்டது. அரசாங்க நிதி … Read more

நிலுவையிலுள்ள 600 மில்லியன் ரூபா ஊழியர் சேமலாப நிதியக் கொடுப்பனவுகளை செலுத்தாமை

நிலுவையிலுள்ள 600 மில்லியன் ரூபா ஊழியர் சேமலாப நிதியக் கொடுப்பனவுகளை செலுத்தாமை மற்றும் 300 மில்லியன் ரூபா கடனை அறவிடுதல் தொடர்பில் விரைவில் திட்டமொன்றை பரிந்துரைக்குமாறு கோப் குழு, கடற்றொழில் கூட்டுத்தாபனத்துக்குப் பணிப்புரை… இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் 2019ஆம் ஆண்டு நிதியாண்டு மற்றும் தற்போதைய செயலாற்றுகை குறித்து ஆராயும் நோக்கில் கௌரவ (பேராசிரியர்) ரஞ்சித் பண்டார அவர்களின் தலைமையில் அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (கோப் குழு)  (25) கூடியது. இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தில் காணப்படும் பிரச்சினைகள் … Read more

அரச ஊழியர்கள் வசதியான உடையில் வரலாம் என்ற சுற்றறிக்கை ரத்து செய்யப்படும் – பிரதமர்

அரங்க ஊழியர்கள் வசதியான ஆடைகளை அணிந்து கடமைக்கு சமூகமளிக்குமாறு விடுக்கப்பட்ட சுற்றறிக்கை எதிர்வரும் காலங்களில் இரத்து செய்யப்படும் என பிரதமர் தினேஷ் குணவர்தன இன்று (26) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். வரவு செலவுத் திட்ட குழு நிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இந்த விடயத்தை குறிப்பிட்டார். ஆசிரியர்களின் ஆடை பிரச்சனைக்கும் இதன் மூலம் தீர்வு கிடைக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.  ஆசிரியர்கள் தங்களின் வீடுகளுக்கு அருகில் உள்ள பாடசாலைகளில் பணிபுரிய வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. பொருளாதார மற்றும் … Read more