இலங்கைக்கான புதிய ஓமான் தூதுவர் சபாநாயகரை சந்தித்தார்

புதிதாக நியமிக்கப்பட்ட இலங்கைக்கான ஓமானியத் தூதுவர் அஹமட் அலி ஸைத் அல் ரஷ்டி  (25) சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தனவை பாராளுமன்றத்தில் சந்தித்தார். இரு நாடுகளுக்குமிடையில் காணப்படும் இரு தரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதன் அவசியம் குறித்துக் கருத்துத் தெரிவித்த ஓமான் தூதுவர் இலங்கை – ஓமான் பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தை புதுப்பிப்பதன் முக்கியத்துவம் குறித்தும் கவனம் செலுத்தினார். முதலீட்டு ஊக்குவிப்பு சந்தர்ப்பங்கள் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டதுடன் இரு நாடுகளினதும் வர்த்தகக் குழுக்கள் விஜயங்களை மேற்கொள்வதற்கான … Read more

தேசிய கொள்கைத் தயாரிப்பின் போது பல்கலைக்கழகங்களை இணைத்துக் கொள்வது தொடர்பில் கொள்கை தயாரிப்பு தொடர்பான தேசிய பேரவையின் உபகுழுவில் கலந்துரையாடல்

தேசிய கொள்கைத் தயாரிப்பு தொடர்பில் துணைவேந்தர்கள்  ஊடாக பல்கலைக்கழக கல்விசார் ஊழியர்களின் ஒத்துழைப்பைப் பெற்றுக் கொள்ளும் எதிர்காலத் திட்டம் குறித்த ஆரம்பகட்ட கலந்துரையாடல்கள் அண்மையில் பாராளுமன்றத்தில் இடம்பெற்றது. குறுகிய, நடுத்தர மற்றும் நீண்டகால கொள்கைத் தயாரிப்புக்கான முன்னுரிமைகளை அடையாளம் காண்பதற்கான தேசிய பேரவையின் உப குழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ நாமல் ராஜபக்ஷ தலைமையில் பாராளுமன்றத்தில் அண்மையில்  கூடிய போதே இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க, … Read more

சேர்றுமதி வரி (திருத்தச்) சட்டமூலம் மற்றும் உண்ணாட்டரசிறை (திருத்தச்) சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீட்டை……….

சேர்பெறுமதி வரி (திருத்தச்) சட்டமூலம் மற்றும் உண்ணாட்டரசிறை (திருத்தச்) சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீட்டை டிசம்பர் 09ஆம் திகதி நடத்துவதற்கு பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் தீர்மானம் சேர்பெறுமதி வரி (திருத்தச்) சட்டமூலம் மற்றும் உண்ணாட்டரசிறை (திருத்தச்) சட்டமூலம் ஆகியவற்றின் மீதான இரண்டாவது மதிப்பீட்டை எதிர்வரும் டிசம்பர் 09ஆம் திகதி நடத்துவதற்கு சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன தலைலமையில்  (25) நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாகப் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக … Read more

கடும் மன அழுத்தம்-இரவில் உறங்க முடியாது தவிக்கும் அமைச்சர்

அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர் ஒருவர் கடும் மன அழுத்தத்தில் இருப்பதாகவும் இரவில் உறங்குவதற்காக தூக்க மாத்திரைகளை பயன்படுத்துவதாகவும் சிங்கள வார பத்திரிகையான ஞாயிறு மௌபிம தகவல் வெளியிட்டுள்ளது. சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவேவுக்கே இந்த நிலைமையேற்பட்டுள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது. தான் கடும் மன அழுத்தத்தில் இருப்பதாகவும் இதன் காரணமாக இரவில் உறங்க தூக்க மாத்திரைகளை உட்கொள்வதாகவும் அமைச்சர் கெஹெலிய தனக்கு நெருக்கமான நண்பர்கள் சிலரிடம் கூறியுள்ளார். ஓயாத தொலைபேசி அழைப்புகள் காலையில் இருந்து இரவு வரை தனக்கு … Read more

அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! அரசாங்கம் எடுத்துள்ள அதிரடி தீர்மானம்

அரசாங்க ஊழியரகள் தொடர்பில் முக்கிய அறிவிப்பொன்று வெளியிடப்பட்டுள்ளது.  இதன்படி,  அதிகரித்துள்ள போக்குவரத்துச் செலவுகளைக் கருத்திற் கொண்டு வீட்டுக்கு அருகாமையில் உள்ள அலுவலகங்களில் பணி செய்வதற்கான வாய்ப்பு வழங்கப்படுகின்றது.  இடமாற்றம் செய்யும் முறை இது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு வருவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.   இதன்படி, வீட்டுக்கு அண்மித்த பிரதேசங்களில் உள்ள அரச அலுவலகங்களுக்கு அரச ஊழியர்களை இடமாற்றம் செய்யும் முறைமை ஏற்படுத்தப்படவுள்ளது. போக்குவரத்துக் கட்டணங்கள் உயர்வால்  பேருந்துகளில் கடமைக்குச் செல்ல முடியாமல் அரச ஊழியர்கள் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.   … Read more

வரவுசெலவுத் திட்ட குழுநிலை விவாதத்தின் நான்காவது நாள் இன்று

பாராளுமன்றத்தில் நடைபெறும் வரவுசெலவுத் திட்ட குழுநிலை விவாதத்தின் நான்காவது நாள் இன்றாகும்.  அரச நிர்வாகம், உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி மன்றம், இளைஞர் விவகார மற்றும்விளையாட்டுத் துறை அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் பற்றி இன்று விவாதிக்கப்படுகிறது.

சீனாவின் காய் நகர்த்தல்: பிரித்தானியாவிற்கு ஏற்பட்டுள்ள பெரும் சிக்கல்

சீனா தனது விமானப்படைக்கு பயிற்சி வழங்க பிரித்தானியாவில் உள்ள ஓய்வுபெற்ற விமானப்படை வீரர்களை பணியமர்த்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரித்தானிய நாட்டின் ஓய்வு பெற்ற விமானப்படை வீரர்களை பணிக்கு அமர்த்தியுள்ளதன் மூலம் சீனா, அமெரிக்காவுடனான மோதலுக்கு தயாராகிறதா, என்கிற கேள்வியை எழுப்புவதாக சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.  தைவான் –  சீனா சில நாட்களுக்கு முன்னர்தான் தைவான் விவகாரத்தில் சீனா தனது விமானப்படைகளை கொண்டு அதிரடியான போர் பயிற்சிகளை மேற்கொண்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.  2019 முதல் பிரித்தானியாவில் முன்னாள் … Read more