உதைபந்தாட்டடப் போட்டியில்  தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரி சம்பியன்

அகில இலங்கைப் பாடசாலைகளுக்கிடையிலான 20 வயதுப் பெண்கள் உதைபந்தாட்டடப் போட்டியில்  தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரி சம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளது.. கொழும்பு றேஸ் ஹோர்ஸ் மைதானத்தில் (25.11.2022) நடைபெற்ற  இறுதிப்போட்டியில் ,குருநாகல் பெண்கள் மலியதேவ மகா வித்தியாலயத்துடன் மோதிய மகாஜனா கல்லூரி 3 : 0என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது. முதல் இரண்டு கோல்களையும் அணி உபதலைவி கிரிசாந்தினி(றோஸ்) முதல்பாதி ஆட்டநேரத்தில் சிறப்பாக விளையாடி வெற்றியை முன்னோக்கி நகர்த்தினார். இரண்டாவது பாதியாட்டத்தில் கிரிசாந்தினி மேலும் ஒரு கோலை அடித்து ஆட்டநேர … Read more

முகநூல் நண்பனினால் பணம், நகை திருட்டு

கண்டி, கட்டுகஸ்தொட்டயில் உள்ள வீடொன்றின் கூரை திருத்தவேலைக்குச் சென்ற ஒருவர் வீட்டில் இருந்த பணம் மற்றும் நகை எனபவற்றை திருடிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளதாக கட்டுகஸ்தொட்ட பொலிஸார் தெரிவித்துள்ளனர். கட்டுகஸ்தொட்ட, ஹல்ஒலுவ பிரதேசத்தில் அமைந்துள்ள இந்த வீட்டின் உரிமையாளர் அண்மையில் வெளிநாட்டில் இருந்து நாட்டிற்கு வந்துள்ளார். சில காலமாக தனது முகநூல் நண்பராக இருந்த ஒருவரை, வீட்டின் மேற்கூரை திருத்தவேலைக்காக வரவழைத்துள்ளார். குறித்த நபர் வீட்டின் கூரையில் திருத்தவேலை செய்துகொண்டிருந்த போது, அவர் மீதுள்ள நம்பிக்கையின் காரணமாக … Read more

தேசிய உதைபந்தாட்டத்தில், மகாஜனா கல்லூரி 17 வயது பெண்கள் அணி சாதனை

அகில இலங்கைப் பாடசாலைகளுக்கிடையிலான 17 வயது பெண்கள் உதைபந்தாட்டடப் போட்டியில் மகாஜனக் கல்லூரி சாம்பியனாகியுள்ளது. இப்போட்டி  கொழும்பு களனி பிரதேசசபை (24)மைதானத்தில் நடைபெற்றது. இறுதிப்போட்டியில் பொலனறுவை பன்டிவெவ மகா வித்தியாலய அணியை எதிர்கொண்ட மகாஜனக் கல்லூரி அணி 2:0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று சாம்பியன் பட்டத்தை தனதாக்கியது. இந்த போட்டியில் இரண்டு கோல்களையும் அணித்தலைவி லயன்சிகா முதல்பாதி ஆட்டநேரத்தில் அடித்து வெற்றியை உறுதிப்படுத்தினார்.

QR முறைமை தொடர்பில் தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட தகவல்

அடுத்த மாதத்தில் இருந்து எரிபொருள் விநியோகத்துக்கான QR முறைமை இரத்து செய்யப்படும் என வெளியாகியுள்ள செய்தி பொய்யானது என மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றும் போதே இவ்விடயத்தை தெரிவித்துள்ளார்.  மிகவும் நெருக்கடியான நிலை “மிகவும் நெருக்கடியான நிலையில் தான் எரிபொருள்,எரிவாயு இறக்குமதி செய்யப்படுகிறது. அமைச்சு மட்டத்திலான முறையான முகாமைத்துவத்தினால் தற்போது எரிபொருள் விநியோகம் சீரமைக்கப்பட்டுள்ளது. There’s No Decision to remove the fuel management QR system … Read more

கைதடி, முதியோர் இல்ல முதியோர்களுக்கு மதிய உணவு

யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 52 வது காலாட் படைப்பிரிவினர் யாழ்ப்பாணம், கைதடியில் அமைந்துள்ள ‘முதியோர் இல்ல’ முதியோர்களுக்கு, செவ்வாய்க்கிழமை (22) சிவில்-இராணுவ ஒத்துழைப்பின் ஒரு அங்கமாக மதிய விருந்து அளித்தனர். 52 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் சஞ்சீவ பெர்னாண்டோ அவர்களின் பணிப்புரையின் பேரின் 52 வது காலாட் படைபிரிவின் கேணல் பொதுப்பணி கேணல் பிரியந்த ரணதுங்க அவர்கள் 523 வது காலாட் பிரிகேடின் ஒத்துழைப்புடன் இத்திட்டத்தை மேற்பார்வையிட்டார். இந் நிகழ்வில் கட்டளை … Read more

எதிர்பாராத தனயோகம் கிட்டப்போகும் மூன்று ராசிக்காரர்கள்-நாளைய ராசிபலன்கள்

பொதுவாக நமது வாழ்க்கையில் நாளை என்ன நடக்கும் என்பது நம்மால் அறிந்துகொள்ள முடியாத விடயம். இருப்பினும் வேதங்களில் கண்ணாக விளங்கும் ஜோதிடத்தின் மூலம் நாளைய பொழுது எப்படி இருக்கும் என்று நம்மால் ஓரளவு தெரிந்துக்கொள்ள முடியும். இதற்கமைய நாளொன்றுக்கான ராசி பலனை நாம் முன்னரே அறிந்து கொண்டு அதற்கேற்றாற் போல் முன்னெச்சரிக்கையாக சில செயல்களை திட்டமிட்டு நடந்து கொள்ள நினைத்த காரியங்கள் வெற்றி பெறும். கிரக நிலைக்கு ஏற்ப ராசிபலன் கணிக்கப்படுவதால், நாம் எப்படி நடந்து கொள்ள … Read more

க.பொ.த சாதாரணதரப் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியானது!

க.பொ.த சாதாரணதரப் பரீட்சை பெறுபேறுகளை தற்போது எந்த தடையுமின்றி பார்வையிட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழிநுட்ப கோளாறு காரணமாக பெறுபேறுகளை பெற முடியாத நிலை காணப்பட்டது. தற்போது அவை சரி செய்யப்பட்டு பெறுபேறுகளை பார்வையிட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய பரீட்சைப் பெறுபேறுகளை www.doenets.lk என்ற இணையத்தளத்தில் பார்வையிட முடியும்.  மூன்றாம் இணைப்பு க.பொ.த சாதாரணதரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளதாகவும், எனினும் பெறுபேறுகளை பெற முடியாதுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார். எமது செய்திப்பிரிவு … Read more

2021 கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள்

2021 கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் இன்று (25) வெளியிடப்பட்டுள்ளது. www.results.exams.gov.lk அல்லது www.doenets.lk/examresults இணையத்தளத்திற்குள் பிரவேசித்து பெறுபேறுகளை அறிந்துகொள்ள முடியும் என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. 2021 கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சை, கடந்த மே மாதம் 23 ஆம் திகதியிலிருந்து ஜூன் மாதம் முதலாம் திகதி வரை இடம்பெற்றது.

இன்றும் 2 மணி நேர மின் துண்டிப்பு

நாடு முழுவதும்  இன்று (25)  2 மணி நேரம் வரை மின் துண்டிப்பு இடம்பெறும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இன்று பி.ப. 3.00 முதல் இரவு 9.00 மணிக்கு இடையில் 2 கட்டங்களில் 2 மணித்தியாலங்களுக்கு மின் துண்டிப்பை அமுல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.  இதற்கமைய, நாட்டை 20 வலயங்களாக (A,B,C,D,E,F,G,H,I,J,K,L | P,Q,R,S,T,U,V,W) பிரித்து ஒவ்வொரு வலயத்திலும் உள்ள பிரதேசங்களில், 2 கட்டங்களில் 2 மணித்தியாலங்கள்  ABCDEFGHIJKL | PQRSTUVW : – பி.ப. 3.00 … Read more