சர்வதேச தரத்தில் இலங்கையில் அறிமுகமாகும் இலத்திரனியல் அடையாள அட்டை (video)

2024 ஆம் ஆண்டு புதிய இலத்திரனியல் தேசிய அடையாள அட்டையை வழங்க ஆட்பதிவு திணைக்களம் திட்டமிட்டுள்ளது. இலங்கை பிரஜை ஒருவரை அடையாளம் காணும் வகையில் சர்வதேச தரத்திற்கமைய இந்த அடையாள அட்டை தயாரிக்கப்படவுள்ளது. இலங்கைப் பிரஜை ஒருவரை நம்பத்தகுந்த வகையில் அடையாளம் காணுவதற்காக 15 வயது அல்லது அதற்கு மேற்பட்ட குடிமக்களின் சுய விபரங்கள், அவர்களின் உயிரியல் பண்புகள், புகைப்படங்கள் ஆகியவற்றை உள்ளடக்கி இந்த அடையாள அட்டை தயாரிக்கப்படவுள்ளது. அனைத்து விபரங்களையும் உள்ளடக்கிய பின்னர் தேசிய தனிநபர் … Read more

சாமிக கருணாரத்ன தேசிய அணியில் உள்வாங்கப்படாமை தொடர்பில் எழுத்துமூல அறிக்கை ……..

கடந்த இரண்டு கிரிக்கட் போட்டிகளிலும் தொடரின் நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சாமிக கருணாரத்ன கிரிக்கட் தரப்படுத்தலில் இரண்டாவது இடத்தில் இருக்கும் நிலையில் அவரை தேசிய அணிக்கு தேர்ந்தெடுக்காமை தொடர்பில் கிரிக்கட் தேர்வுக்குழுவிடம் எழுத்துமூல விளக்கமொன்றை கோருமாறு விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகாரங்கள் அமைச்சர் கௌரவ ரொஷான் ரணசிங்க அமைச்சின் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். இலங்கை கிரிக்கட் அணிக்கு வீரர்களை தேர்ந்தெடுக்கும் போது மதசார் குழுவொன்றுக்கு சொந்தமான வீரர்களை மாத்திரம் தேர்ந்தெடுப்பதாக ஒரு கருத்துக் காணப்படுவதாகவும், கடந்த காலங்களில் திறமைகளை … Read more

நாடு குறித்து சிந்தித்து ,ஆர்பாட்டங்களை நிறுத்த வேண்டும்

நாடு குறித்து சிந்தித்து ஆர்பாட்டங்களை ஒருவருடத்திற்கு அல்லது இரண்டு வருடங்களுக்கு நிறுத்த வேண்டும். அனைத்து நாட்டு மக்களிடமும் இந்த வேண்டுகோளை முன்வைப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்தார். 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட குழு நிலை விவாதத்தின் முதல் நாளான நேற்று (23) விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம இவ்வாறு குறிப்பிட்டார். ஆர்ப்பாட்டம் நடத்தி நாடொன்றை அபிவிருத்தி செய்ய முடியாது. நாட்டுக்கு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்தால் மாத்திரமே … Read more

டுபாய் -கொழும்புக்கிடையிலான நேரடி விமான சேவைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

அடுத்த மாதம் 1 ஆம் திகதி தொடக்கம் நாளாந்தம் டுபாய் கொழும்புக்கிடையான நேரடி விமான சேவைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு எமிரேட்ஸ் நிறுவனம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இந்த நேரடி விமான சேவையில் 2 சேவைகள் மற்றும் மாலைத்தீவின் தலைநகரில் இருந்து ஒரு விமான சேவையும் உள்ளடங்கும். டிசம்பர் மாதம் 16 ஆம் திகதி தொடக்கம் 30 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியை தவிர்ந்த ஏனைய அனைத்து நாட்களிலும் இந்த விமான சேவை இடம்பெறும் என்று எமிரேட்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

ஓமான் தூதரகத்தின் அதிகாரிகள் தொடர்பில் இதற்கு முன்னர் தீர்மானம் எடுக்காமை தொடர்பில் அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு கேள்வியெழுப்பியது

ஓமான் தூதரகத்தில் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ள அதிகாரிக்கு எதிராக இவ்வருடம் பெப்ரவரி மாதம் முதல் முறைப்பாடுகள் செய்யப்பட்டிருந்தபோதும் அது தொடர்பில் தீர்மானம் எடுப்பதில் காலதாமதம் ஏற்பட்டிருந்தமை  நேற்று (22) நடைபெற்ற அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுக் கூட்டத்தில் புலப்பட்டது. வெளிநாட்டு வேலைவாய்ப்புக்குக் காணப்படும் கேள்விக்கு ஏற்ற வகையில் பயிற்சியளிக்கப்பட்ட பணியாளர்கள் இல்லாமை குறித்த பிரச்சினைக்குத் தீர்வு காண கோபா உபகுழு 2022.02.28ஆம் திகதி வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் முன்னாள் தலைவரினால் குறிப்பிட்ட அதிகாரி தொடர்பில் உள்ளகக் கணக்காய்வு … Read more

இலங்கையில் வீட்டுக்கடன் தொடர்பில் அமைச்சர் பிறப்பித்துள்ள உத்தரவு

நாட்டில் இதுவரை வசூலிக்கப்படாத வீட்டுக்கடன்களை வசூலிக்க முறையான வேலைத்திட்டம் ஒன்றை தயாரிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவை நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகளுக்கு வழங்கியுள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் (22.11.2022) இடம்பெற்ற நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் ஆலோசனைக் குழுவின் முதலாவது கூட்டத்தின் போது இந்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.  முறையான வேலைத்திட்டம் அத்துடன் இதேவேலைத்திட்டத்தை நாடாளுமன்றத்தின் அடுத்த ஆலோசனைக் குழுக் கூட்டத்திலும் … Read more

நிலுவை பணத்தை செலுத்தாத வீட்டு கடனை அறவிடுவதற்கான வேலைத்திட்டம்

இதுவரையில் அறவிடப்பட வேண்டிய வீட்டு கடனை அறவிடுவதற்கான முறையான வேலைத்திட்டம் ஒன்றை வகுக்குமாறு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தேசிய வீடமைப்பு அதிகார சபையின் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். அதிகார சபையின் குறைந்த வட்டிக்கு வீட்டு கடனை பெற்றுக்கொண்ட சிலர் அவற்றை வீடுகளை நிர்மாணிப்பதற்கு பயன்படுத்தவில்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது. இவ்வாறான கடன்களை பெற்றோர் முதல் தவணை பணத்தை மாத்திரம் செலுத்தியுள்ளனர். இதுதொடர்பாக கொள்கை ரீதியான தீர்மானம் மேற்கொள்ளப்பட வேண்டும் என அமைச்சர் தெரிவித்தார்

தீவிரமடையும் போர் பதற்றம்! உக்ரைனுக்கு ஹெலிகாப்டர்களை அனுப்பிய பிரித்தானியா

உக்ரைனுக்கு ஆதரவாக முதல் முறையாக பிரித்தானியா ஹெலிகாப்டர்களை வழங்கியுள்ளது. பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்கின் உக்ரைன் சுற்றுப்பயணத்தை தொடர்ந்து இந்த ஹெலிகாப்டர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சகத்தின் தலைவர் தெரிவித்துள்ள தகவலில், உக்ரைனுக்கு மூன்று “சீ கிங்”( Sea King) ஹெலிகாப்டர்களை பிரித்தானியா அனுப்ப இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும், AFU 10,000 பீரங்கி குண்டுகளும் உக்ரைனுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். Britain to send helicopters to Ukraine for the first … Read more

நாட்டின் நிதி ஸ்திரத்தன்மையை நிலைநாட்டுவதற்காக வங்கி முறையை வலுப்படுத்தும் முறையான வேலைத்திட்டத்தை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது

நாட்டின் நிதி ஸ்திரத்தன்மையை நிலைநாட்டுவதற்காக வங்கி முறையை வலுப்படுத்தும் முறையான வேலைத்திட்டத்தை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது – மறைந்த அமைச்சர் லலித் அத்துலத்முதலியின் பிறந்தநாள் விழாவில் ஜனாதிபதி தெரிவிப்பு. நாட்டின் நிதி ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்காக வங்கி முறையை வலுப்படுத்தும் முறையான வேலைத்திட்டத்தை அரசாங்கம் முன்னெடுத்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் தெரிவித்தார். இலங்கையை பிச்சை பெறும் நாடாக மாற்றுவதற்கு தாம் எந்த வகையிலும் தயாரில்லை என வலியுறுத்திய ஜனாதிபதி, இலங்கையர்களாகிய நாம் சுய முயற்சியில் எழுந்து நிற்க வேண்டும் … Read more

நாட்டிலுள்ள சகல போக்குவரத்து சேவைகளையும் ஒரு டிஜிட்டல் தளத்துக்குக் கொண்டுவருவதன்…….

புகையிரதம், பஸ், பாடசாலை வாகன சேவை மற்றும் டக்சி சேவை போன்ற நாட்டில் உள்ள சகல போக்குவரத்து சேவைகளையும் ஒரே டிஜிட்டல் தளத்திற்குக் கொண்டு வருவதனூடாக பயணிகளுக்கு வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது தொடர்பில் பொருளாதார ஸ்திரத்தன்மை தொடர்பிலான குறுகிய கால மற்றும் நடுத்தர கால நிகழ்ச்சித்திட்டங்களை அடையாளம் காணல் பற்றிய தேசிய பேரவையின் உப குழுவில் கலந்துரையாடப்பட்டது. பொருளாதார ஸ்திரத்தன்மை தொடர்பிலான குறுகிய கால மற்றும் நடுத்தர கால நிகழ்ச்சித்திட்டங்களை அடையாளம் காணல் பற்றிய தேசிய பேரவையின் … Read more