வரவு செலவுத்திட்டத்தின் பின்னர் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண இணையுங்கள்! அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் ஜனாதிபதி அழைப்பு.

வரவு செலவுத்திட்டத்தின் பின்னர் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண இணையுங்கள்! அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் ஜனாதிபதி அழைப்பு. • Din Diem பாணியிலான நிர்வாகத்திற்கு அனுமதி இல்லை அதிகாரப் பகிர்வு உள்ளிட்ட இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண்பதற்காக அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார். இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான இணக்கப்பாட்டுக்கு வருவதற்கு டிசம்பர் 11ஆம் திகதிக்குப் பின்னர் கலந்துரையாடல் நடத்தப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார். பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் … Read more

ரணிலின் சூழ்ச்சியே அதிகார பகிர்வு! அநுர குமார வெளியிட்ட தகவல்

தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் மனங்களை வெற்றிக் கொள்ளும் ஒரு சூழ்ச்சியையே, ரணில் விக்ரமசிங்க, அதிகார பகிர்வு விடயத்தின் ஊடாக முன்னெடுக்க முயற்சிப்பதாகவும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க தெரிவிக்கின்றார்.  கொழும்பில் நேற்று (23.11.2022) தமிழ் புத்திஜீவிகளை சந்தித்து கலந்துரையாடல்களை நடத்திய போது, ஊடகவியலாளர்களினால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.  இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,  “அடுத்த ஜனாதிபதித் தேர்தலை இலக்காக கொண்டே, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதிகார பகிர்வை … Read more

வரவு செலவு திட்டத்திற்கு எதிராக வாக்களிக்காத காரணம் என்ன? சுமந்திரன் விளக்கம்

வரவு செலவு திட்டத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிராக வாக்களிக்க இருந்தது. இருப்பினும் ஜனாதிபதி வடக்கு கிழக்கு பிரச்சினைக்கு தீர்வை பெற்று தருவதற்காக அழைப்பு விடுத்துள்ளதினால், வரவு செலவு திட்ட வாக்கெடுப்பில் இருந்து விலகியிருக்க தீர்மானம் மேற்கொண்டதாக யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்  எம். சுமந்திரன் இன்று (23) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். தமிழ் தேசிய பிரச்சினைக்கு தீர்வை வழங்குவதற்காக அழைப்பு விடுக்கப்பட்டுள்ள இந்த சந்தர்ப்பத்தில், வரவு செலவு திட்டத்திற்கு எதிராக வாக்களிப்பது சிறப்பானது அல்ல என்று சிந்தித்தே வாக்கெடுப்பில் இருந்து … Read more

உக்ரைன் மகப்பேற்று வைத்தியசாலை மீது ரஷ்யா தாக்குதல்

உக்ரைன் தென்பகுதியில் உள்ள வைத்தியசாலை மீது ரஷ்யா இன்று(23.11.2022) தாக்குதல் மேற்கொண்டுள்ளது. சபோரிஜியா பகுதியில் உள்ள வில்னியான்ஸ் என்ற நகரின் மகப்பேற்று வைத்தியசாலை மீது ரஷ்யா தாக்குதலை மேற்கொண்டது என உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதலில் குழந்தையொன்று உயிரிழந்துள்ளதுடன், தாய் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார். மக்களுக்கு சேதம் தாய் குழந்தையை பிரசவித்து ஒரு சில நிமிடங்களில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது வைத்தியர் ஒருவரும் கட்டிட இடிபாடுகளிற்குள் இருந்து மீட்கப்பட்டுள்ளார் என  உக்ரைன் தெரிவித்துள்ளது. உக்ரைன் ஜனாதிபதியின் … Read more

தேசிய பிரச்சினைக்குத் தீர்வு! நாடாளுமன்றத்தில் எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானம்

தேசிய பிரச்சினைக்குத் தீர்வு காணும் பேச்சுக்களை தற்போதைய வரவு – செலவுத் திட்டம் முடிந்த கையோடு, டிசம்பர் 11ஆம் திகதி தொடங்கும் வாரத்தில் நாடாளுமன்றத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளின் பங்குபற்றுதல்களுடன் விரைந்து நடத்தி முடிக்க இன்று நாடாளுமன்றத்தில் தீர்மானிக்கப்பட்டது. சபையில் இன்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உரையாற்றிய சமயம் எழுந்த குறுக்கீடுகளை அடுத்து, இது தொடர்பில் ஆக்கபூர்வமான வாதப் பிரதிவாதங்களும், கருத்துப் பரிமாற்றங்களும் இடம்பெற்று தீர்மானம் எட்டப்பட்டது என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவித்தார். வரவு – … Read more

தொழிலாளர் சட்டங்களை மாற்றும் ஜனாதிபதியின் திட்டத்திற்கு எச்சரிக்கை

தொழிலாளர்களின் உழைப்பைச் சுரண்ட முதலீட்டாளர்களுக்கு வழி வகுக்கும் வகையில் தொழிலாளர் சட்டங்களைத் திருத்தும் அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அடுத்த வருடத்திற்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளை சமர்ப்பித்ததுடன் காலாவதியான தொழிலாளர் சட்டங்களுக்குப் பதிலாக ஒரேயொரு புதுப்பிக்கப்பட்ட சட்டம் கொண்டுவரப்படும் என தெரிவித்துள்ளார்.  தொழிலாளர் சட்டங்கள் “தொழிலாளர் சட்டங்கள், கொள்கைகள் மற்றும் நிறுவன ஏற்பாடுகள், தொழில் முனைவோர் மற்றும் வணிக வளர்ச்சிக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் செயல்படக்கூடாது. … Read more

ஜனநாயக தேர்தல் முறைக்கு தேவையான மாற்றங்களை மேற்கொள்ள அரசாங்கம் நடவடிக்கை

ஜனநாயக ரீதியிலான தேர்தல் முறைமையை உருவாக்குவதற்கு தேவையான மாற்றங்களைச் செய்வதற்கு அரசாங்கம் செயற்பட்டு வருவதாக பிரதமர் தினேஷ் குணவர்தன இன்று (23) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். அந்த மாற்றங்கள் தேர்தலை  எந்த வகையிலும் பாதிக்காது என்றும் பிரதமர் வலியுறுத்தினார்.   உள்ளுராட்சித் தேர்தல்கள் தொடர்பாக தேர்தல்கள் ஆணைக்குழுவுக்குக் காணப்படும் உரிமைகள் தொடர்பில் ஏதேனும் தடைகள் காணப்படின் அவற்றை நிவர்த்தி செய்வதாகவும் பிரதமார் சுட்டிக்காட்டினார்.   உள்ளுராட்சித் தேர்தல்கள் தொடர்பான வாக்கெடுப்பு கட்டளைச் சட்டத்திருத்திற்காக அமைச்சரவை அனுமதித்துள்ளமை தொடர்பாக எதிர்க் … Read more

பாராளுமன்றத்தில் ஏற்பட்ட அமைதியற்ற நிலை

பாராளுமன்றத்தில் ஏற்பட்ட அமைதியற்ற நிலையின் காரணமாக சபாநாயகர் பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜே சிரியை பாராளுமன்றத்தில் இருந்து வெளியேறுமாறு அறிவித்தார். பாராளுமன்ற அலுவல்கள் இன்று (23)காலை ஆரம்பமானதை தொடர்ந்து பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா வரவு செலவு திட்ட குழு நிலை விவாதத்தில் உரையாற்றினார். இதன்போது அமைதியற்ற நிலை ஏற்பட்டது. அப்பொழுது பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிரி நிமல் லான்சவை தாக்க முயற்சித்துள்ளார். இதன்போது சபாநாயகர் விஜேயசிரியை சபையில் இருந்து வெளியேறுமாறு அறிவித்தார்.   … Read more

முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பாடசாலைகளில் போதைப் பொருள் பாவனையை தடுப்பது தொடர்பான விழிப்புணர்வு

போதைப் பொருள் பாவனை மாணவர்கள் மத்தியில் அதிகரித்துவருவதை முற்றாக இல்லாதொழிக்கும் நோக்கில் முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பாலிநகர் மகா வித்தியாலயத்திலும், துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட ஐயன்குளம் மகா வித்தியாலயத்திலும் இன்று (23) விசேட விழிப்புணர்வு செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டது. வட மாகாணத்தில் மாணவர்கள் மத்தியில் போதைப் பொருள் பாவனை சடுதியான அதிகரித்துவருவதாக புள்ளிவிபர தகவல்கள் தெரிவிக்கின்றன.அதற்கிணங்க முல்லைத்தீவு மாவட்ட செயலக சிறுவர் பிரிவினரின் ஏற்பாட்டில் மாவட்டத்திலுள்ள பாடசாலைகளில் தொடர்ச்சியாக விசேட விழிப்புணர்வு செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டு … Read more

ஆயிரக்கணக்கான இலங்கையர்களுக்கு சிங்கப்பூர் வழங்கும் மிகப்பெரிய வாய்ப்பு

இலங்கையர்கள் நான்காயிரம் பேருக்கு சிங்கப்பூரில் இருக்கும் தொழில்வாய்ப்பு தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.  இதன்படி, சிங்கப்பூரில் அடுத்த வருடம் 4000 இலங்கை தாதியர்களுக்கு தொழில் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சுகாதார சேவைப் பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த ஹேரத் இதனை குறிப்பிட்டார். இலங்கை வந்துள்ள அதிகாரிகள்  இது தொடர்பில் அவர் மேலும்  தெரிவிக்கையில், இருபது ஆண்டுகளுக்குப் பிறகு சிங்கப்பூர் சுகாதாரத் துறையில் பணியாற்றும் வாய்ப்பு இலங்கையர்களுக்கு கிடைத்துள்ளது. இங்குள்ள அடிப்படை செயற்பாடுகள் குறித்து ஆராய சிங்கப்பூர் சுகாதார அமைச்சின் 10 அதிகாரிகள் … Read more