P 627 கப்பல் “விஜயபாகு” என்ற பெயரில் துறைமுக அதிகார சபைக்கு ஜனாதிபதி கையளித்தார்.
அமெரிக்க கடலோரப் பாதுகாப்பு திணைக்களத்தினால் இலங்கை கடற்படைக்கு வழங்கப்பட்ட P 627 ஆழ்கடல் பாதுகாப்புக் கப்பல் ‘விஜயபாகு” என்ற பெயரில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் தலைமையில் அதிகார சபைக்கு கையளிக்கும் நிகழ்வு, நேற்று (22) மாலை கொழும்புத் துறைமுக கிழக்கு முனையத்தில் இடம்பெற்றது. கடல் பிராந்தியத்தில் காணப்படும் பொதுவான கடல்சார் சவால்களை முறியடிக்கும் வகையில் கூட்டாண்மையை வலுப்படுத்தவும், மேம்படுத்தவும் இந்தக் கப்பல் அமெரிக்க கடலோரப் பாதுகாப்புத் திணைக்களத்தினால் இலங்கைக் கடற்படைக்கு வழங்கப்பட்டது. விசேட கடற்படை வாகனத் … Read more