விடுதலைப்புலிகளுக்கு கிடைத்த வெளிப்படையான ஆதரவு: பகிரங்கப்படுத்திய முக்கியஸ்தர்

விடுதலைப்புலி இயக்கத்திற்கு தமிழ் நாட்டில் வெளிப்படையாக ஆதரவு வழங்கப்படுகின்றது.சில அமைப்புகளும் கட்சிகளும் அந்த பணியில் தீவிரமாக செயற்படுகின்றன அதற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான முயற்சியொன்று ராஜீவ் கொலை வழக்கில் மேற்கொள்ளப்பட்டது என உலகத்தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார். ஊடகமொன்றிற்கு வழங்கிய செவ்வியிலே அவர் இவ்வாறு கூறியுள்ளார். வெளிப்படையான ஆதரவு இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,“ஈழத் தமிழர் பிரச்சினைக்கு தமிழகத்தில் ஆதரவு வலுக்கிறது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அதற்கு மேலாக விடுதலைப்புலி இயக்கத்திற்கு தமிழ் நாட்டில் வெளிப்படையாக … Read more

அரச ஊழியர்களுக்கான சலுகை தொடர்பில் வெளியான அறிவிப்பு! அரசாங்கம் எடுத்துள்ள முடிவு

2023ஆம் ஆண்டில் அரச ஊழியர்களுக்கு எந்த விதமான சலுகைகளும் கிடைக்காது என்று ஜனாதிபதி தெளிவாகவே கூறியிருக்கிறார் என்று யாழ். பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி அகிலன் கதிர்காமர் தெரிவித்துள்ளார்.  பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.   நெருக்கடி நிலையில் முன்வைக்கப்பட்டுள்ள வரவு செலவுத் திட்டம்  அடுத்த வருடத்திற்கான வரவு செலவுத் திட்டம் ஜனாதிபதியும் நிதி அமைச்சருமான ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் அது குறித்து தொடர்ந்தும் விபரித்துள்ள விரிவுரையாளர் அகிலன் கதிர்காமர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,  இந்த … Read more

ஓமானில் இலங்கைப்பெண்கள்: பின்னணில் செயல்பட்டவர்கள் அடையாளங்காணப்பட்டுள்ளனர்

ஓமானில் பல்வேறு தொந்தரவுகளுக்கு உள்ளான இலங்கை பெண்கள் தொடர்பிலான சமபவங்களின் பின்னணில் செயல்பட்டவர்களுடன் தொடர்பு பட்ட வலைப்பின்னல் அடையாளங்காணப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்பு பணியகத்தின் முகாமையாளர் ஈ.டீ.பீ.சேனநாயக்கா தெரிவித்தார் இதேவேளை, வெளிநாட்டு தொழில் வாப்பை பெற்றுக்கொடுக்கும் முகவர் நிறுவனங்கள் குறித்து அடிக்கடி முறைப்பாடுகள் கிடைக்கின்றன. அனுமதி பத்திரத்தைக்கொண்ட அல்லது அனுமதிப்பத்திரம் அற்ற முகவர் நிலையங்கள் தொடர்பில் நாடு முழுவதும் விசாரணை அதிகாரிகள் .விசாரணைகளை நடத்தி வருவதாக வெளிநாட்டு வேலைவாய்பு பணியகத்தின் விசாரணை முகாமையாளர் கபில கருணாரத்ன கூறினார். ஓமான் … Read more

பசிலை வரவேற்க விமான நிலையத்திற்கு சென்ற ஆணைக்குழுவின் தலைவர்! எழுந்துள்ள சர்ச்சை

மக்கள் போராட்டத்தை அடுத்து வெளிநாடு சென்ற நிலையில் நாடு திரும்பிய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரை வரவேற்க தேசிய ஆணைக்குழுவின் தலைவர் பிரசன்னமாகியிருப்பது சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாகியுள்ளது. இரண்டு மாதங்களுக்கும் மேலாக அமெரிக்காவில் இருந்த பசில் ரோஹன ராஜபக்ச, டுபாயில் இருந்து இந்நாட்டிற்கு வந்த எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான E.K-650 என்ற விமானத்தில் நவம்பர் 20ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை இலங்கை வந்தடைந்தார். இதன்போது அவரை வரவேற்க விமான நிலையத்திற்கு வருகை தந்திருந்த ஸ்ரீலங்கா … Read more

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான, ஐயாயிரம் ரூபா கொடுப்பனவு குறித்து நிதி இராஜாங்க அமைச்சர்

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வழங்கப்படும் ஐயாயிரம் ரூபா கொடுப்பனவை, குறைக்கவோ அல்லது இரத்துசெய்யவில்லை என்று நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க நேற்று (21) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். வரவு செலவுத்திட்ட விவாதத்தின் போது கிழக்கு மாகாண பாராளுமன்ற உறுப்பினர் எஸ். இராசமாணிக்கம் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். குறித்த பிரதேசங்களில் இதற்காக காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களுக்கும் இந்த கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது. தற்போதைய பொருளாதார நெருக்க்கு மத்தியிலும் , இந்த கொடுப்பனவு தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருகின்றது. … Read more

ரணிலுக்கு அடித்த அதிஷ்டம்(Video)

சமகாலத்தில் இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி காரணமாக ராஜபக்ஷ சகோதர்களுக்கு இடையில் முரண்பாடுகள் தீவிரம் அடைந்துள்ளதாக தெரியவருகிறது. ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதியாக கொண்டு வந்த, ராஜபக்ஷர்கள் தமக்கான ஆபத்தினை அவர்களை தேடிக் கொண்டுள்ளனர். ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க பொறுப்பேற்ற பின்னர், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தினை கொண்டிருந்த பொதுஜன பெரமுன கட்சியை தொடர் சரிவுகளை சந்தித்து வருகிறது. ரணிலின் ராஜதந்திர நகர்வுகளில் ராஜபக்ஷர்கள் சிக்கித் தவித்து வருவதுடன், மூன்று பிரிவுகளாக உடைந்து செயற்படும் நிலையும் ஏற்பட்டுள்ளது.  இந்த செய்தி … Read more

நாட்டின் பொருளாதார நெருக்கடி: தீவிரமடையும் பேச்சுவார்த்தைகள்

இலங்கை, மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில், இயற்கைக்கான கடனுக்கான பரிமாற்றத் திட்டத்திற்காக ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டம் மற்றும் பிற நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவது உறுதிச்செய்யப்பட்டுள்ளது. எகிப்தின் ஷர்ம் எல்-ஷேக்கில் நடக்கும் COP27 காலநிலைப் பேச்சுவார்த்தையின், ஒரு கட்டமாக, இது அமைந்துள்ளது. ஆரம்ப கட்டம் இந்தநிலையில் நாடு ஒரு ஒப்பந்தத்தை உருவாக்குவதற்கான ஆரம்ப கட்டத்தில் உள்ளது என்று சுற்றுச்சூழல் அமைச்சின் செயலாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். 1 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என்பது … Read more

கொட்டகலை பாடசாலைகளில் போதைப்பொருள் பாவனை அதிகரிப்பு – மருந்தகங்ளிலும் விற்பனை

கொட்டகலை பிரதான பாடசாலைகளில் ,கல்வி பயிலும் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருளை விற்பனை செய்யும் வர்த்தகர்கள் மற்றும் சம்மந்தப்பட்டவர்களை கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதே போன்று போதைக்கு அடிமையாகும் பாடசாலை மாணவர்களை மீட்கும் வேலைத்திட்டமும்  ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கொட்டகலை ஐக்கிய வர்த்தக சங்கத்தின் தலைவர் புஷ்பா விஸ்வநாதன் மற்றும் நுவரெலியா மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோரின் தலைமையில் ,கொட்டகலை ஸ்ரீ முத்து விநாயகர் இந்து ஆலய மண்டபத்தில் நேற்று (20) மாலை இந்த வேலைத்திட்டத்தை … Read more

இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: உயிரிழந்தோரின் எண்ணிக்கை 162 ஆக அதிகரிப்பு

இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 162 ஆக அதிகரித்துள்ளது. இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா மாகாணத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தினால் குழந்தைகள் பெண்கள் உட்பட 162 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தோனேசியாவின் ஜாவா தீவில் அமைந்துள்ள மேற்கு ஜாவா மாகாணத்தில் நண்பகல் 12 மணி அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அங்குள்ள சிலாங்கூர் நகரில் பூமிக்கடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் உலுக்கிய நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 5.6ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு நிலையம் தெரிவித்தது . … Read more

குறைவடைந்துள்ள சம்பளம்! வெளியான அறிவிப்பு

பணவீக்கம் அதிகரித்து செல்வதால் மக்கள் உழைக்கும் சம்பளங்களின் பெறுமதிகள் குறைந்துவிட்டன  என்று  யாழ். பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி அகிலன் கதிர்காமர் தெரிவித்துள்ளார்.  ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.  தொடர்ந்தும் தெரிவிக்கையில்,  நீண்ட காலத்திட்டங்கள் என்று பார்க்கும்போது கடந்த நான்கு தசாப்தகாலமாக பேசப்பட்டு வருகின்ற ஏற்றுமதியை அதிகரிக்கின்ற ஏற்றுமதியை திசைமுகப்படுத்திய ஒரு முறையைத்தான் தற்போது முன்வைக்கப்பட்டுள்ள  பட்ஜெட்டில் முன்வைத்திருக்கின்றனர். குறைவடைந்த சம்பளம் இலங்கை ஒரு பக்கம் உணவு நெருக்கடி, உணவு உற்பத்தி வீழ்ச்சி, … Read more