பொருளாதார ஸ்திரத்தன்மையுடன் தொடர்புடைய சட்டங்களை மறுசீரமைப்பது தொடர்பான பிரேரணைகள்

பொருளாதார ஸ்திரத்தன்மை குறித்த குறுகிய மற்றும் நடுத்தரகால நிகழ்ச்சித்திட்டங்களை அடையாளம் காண்பதற்கான தேசிய பேரவை உப குழுவில் கலந்துரையாடல் நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மையுடன் தொடர்புடைய சட்ட மறுசீரமைப்பு சம்பந்தமான பிரேரணைகளை எதிர்வரும் டிசம்பர் மாதத்தில் நாட்டுக்கு முன்வைக்க நடவடிக்கை எடுப்பதாக பொருளாதார ஸ்திரத்தன்மை குறித்த குறுகிய மற்றும் நடுத்தரகால நிகழ்ச்சித்திட்டங்களை அடையாளம் காண்பதற்கான தேசிய பேரவை உபகுழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மையுடன் தொடர்புடைய புதிய சட்டங்கள் தொடர்பில் … Read more

வெளிநாட்டு சேவைகளுக்கு ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட நாற்பது பேர் யூலை மாதத்தில் உள்ளீர்க்கப்படுவர்

2018ஆம் ஆண்டு முதல் வெளிநாட்டு சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்யப்படாமையால் வெளிநாட்டு சேவைத் துறையில் குறைபாடுகள் காணப்படுகின்றமை வெளிநாட்டு அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் தெரியவந்தது. இந்த நிலையில் வெளிநாட்டு சேவைக்கு நாற்பது பேர் கொண்ட குழுவை யூலை முதல் ஆட்சேர்ப்புச் செய்ய எதிர்பார்த்திருப்பதாக வெளிவிவகார அமைச்சர் கௌரவ அலி சப்ரி தெரிவித்தார். வெளிவிவகார அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் முதலாவது கூட்டம் அண்மையில் (10) அதன் தலைவர் அமைச்சர் கௌரவ அலி சப்ரி தலைமையில் நடைபெற்றது. இதன்போது … Read more

ஒதுக்கீட்டுச் சட்டமூலம் தொடர்பில் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கவேண்டிய இரு அறிக்கைகள்…

பாராளுமன்ற நிலையியற் கட்டளைகளுக்கு அமைய ஒதுக்கீட்டுச் சட்டமூலம் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டதை அடுத்து அரசாங்க நிதி பற்றிய குழுவினால் பாராளுமன்றத்துக்கு சமர்பிக்கவேண்டிய இரு அறிக்கைகள் தொடர்பில் அக்குழுவில் கலந்துரையாடப்பட்டது. அரசங்க நிதி பற்றிய குழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ (கலாநிதி) ஹர்ஷ டி. சில்வா தலைமையில் பாராளுமன்றத்தில் அன்மையில் (15) கூடிய போதே இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. நிலையியற் கட்டளை 121க்கு அமைய ஒவ்வோர் ஆண்டும் ஒதுக்கீட்டுச் சட்டமூலம் முன்வைக்கப்பட்டதை அடுத்து அரசாங்க நிதி ஒதுக்கீடு … Read more

யானைகள் தொடர்பான கணக்கெடுப்பு அடுத்த வருடம் நடத்தப்படும்

நாட்டிலுள்ள யானைகள் தொடர்பான கணக்கெடுப்பு இறுதியாக 2011ஆம் ஆண்டே நடத்தப்பட்டது, புதிய கணக்கெடுப்பை அடுத்த வருடம் நடத்துவதற்கு எதிர்பார்த்திருப்பதாக கமத்தொழில் அமைச்சர் மற்றும் வனசீவராசிகள் மற்றும் வனவளங்கள் பாதுகாப்பு அமைச்சர் கௌரவ மஹிந்த அமரவீர  (15) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். யானை மனித மோதல்களால் ஏற்படும் பாதிப்புக்களைக் குறைப்பதற்கு நீண்டகால வேலைத்திட்டமொன்று விரைவில் தயாரிக்கப்படவிருப்பதாவும், இதன் ஒரு அங்கமாக யானைகள் குறித்த கணக்கெடுப்பு நடத்தப்படவிருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார். ஒன்பதாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத்தொடருக்கான வனஜீவராசிகள் மற்றும் வனவளங்கள் பாதுகாப்பு … Read more

1.4 மில்லியன் டொலர் பெறுமதியான வாகனங்கள் திருட்டு! கனடா பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை

ஒன்ராறியோ முழுவதும் கார் திருட்டு சம்பவங்கள் பல பதிவாகி வருகின்றன.  இது தொடர்பில் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைக்குப் பிறகு, திருடப்பட்ட வாகனங்களில் 1.4 மில்லியன் டொலர் பெறுமதியான வாகனங்களை யார்க் பொலிஸார் மீட்டுள்ளனர்.  வாகனத் திருட்டு கோவிட் தொற்றுநோய்களின் போது கார் கடத்தல்கள் ஒன்ராறியோவில்  அதிகரித்துள்ளன.  கார் கடத்தல்களின் அதிகரிப்பு பற்றிய விசாரணையின் பின்னர், பொலிஸார் பலரை கைது செய்து 100 க்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளனர். இந்த மே மாதம், 2017 ஆம் ஆண்டிலிருந்து வாகனத் … Read more

பலப்படுத்தப்பட்ட பாதுகாப்புடன் வன்னி கூட்டுப்படை தலைமையகத்தில் ஜனாதிபதி (Video)

ஜனாதிபதி அலுவலகத்தின் வடக்கு மாகாண அபிவிருத்தி விசேட பிரிவு உப அலுவலகம் வவுனியாவில் இன்று (19.11.2022) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது. வவுனியா, வைரவபுளியங்குளம், புகையிரத வீதியில் குறித்த அலுவலகம் திறந்து வைக்கப்பட்டதுடன், குறித்த அலுவலகத்தில் ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் எஸ்.இளங்கோபன் பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ளார். அலுவலகம்  திறந்து வைப்பு போரால் பாதிக்கப்பட்டுள்ள வடக்கு மாகாணத்தில் அபிவிருத்தி நடவடிக்கைளையும், மக்களது பிரச்சினைகளையும் விரைவாக தீர்க்கும் பொருட்டு ஜனாதிபதியின் பணிப்பின் பேரில் குறித்த அலுவலகம் செயற்படவுள்ளது. இதன்போது, … Read more

ஐந்தாண்டுத் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தை வலுப்படுத்த இம்முறை வரவு செலவுத் திட்டத்தின் மூலம் நடவடிக்கை எடுத்துள்ளதாக ஜனாதிபதி தெரிவிப்பு.

ஐந்தாண்டுத் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தை வலுப்படுத்த இம்முறை வரவு செலவுத் திட்டத்தின் மூலம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், இதன் மூலம் 2023 முதல் 2027 வரை பொருளாதாரத்தில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய சாத்தியம் இருப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் தெரிவித்தார்.  வவுனியா நகர மண்டபத்தில் இன்று (19) நடைபெற்ற மாவட்ட அபிவிருத்தி முன்னேற்ற மீளாய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள், வவுனியா, மன்னார் … Read more

நாட்டின் அனைத்து மக்களும் ஒரு தாயின் பிள்ளைகளாக வாழ்வதைக் காண்பதே எதிர்பார்ப்பாகும்.

  வடக்கின் பிரச்சினைக்குத் தீர்வு காணும்போது சிங்கள, தமிழ், முஸ்லிம் உள்ளிட்ட அனைத்து மக்களையும் ஒன்றிணைத்து அதற்கான தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்க தயார் என்றும் 75வது சுதந்திர தின விழாவின்போதாவது இந்நாட்டின் அனைத்து மக்களும் ஒரு தாயின் பிள்ளைகளாக வாழக்கூடியதாக இருக்க வேண்டுமென தான் பிரார்த்திப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் தெரிவித்தார். ஜனாதிபதி அலுவலகத்தின் கீழ் செயற்படும், வடமாகாண அபிவிருத்தி விசேட பிரிவின் உப அலுவலகத்தை இன்று (19) வவுனியாவில் திறந்து வைத்து உரையாற்றும் போதே ஜனாதிபதி … Read more

காணி பிரச்சினைகளை தீர்ப்பதற்கு மாகாண மட்டத்தில் 08 குழுக்கள்

வட மாகாணத்தின் காணி, வீடு, சுகாதாரம், நீர்ப்பாசனம் மற்றும் விவசாயப் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வுகளை வழங்குவதாக ஜனாதிபதி தெரிவிப்பு.   காணிப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு மாகாண மட்டத்தில் 08 குழுக்களை நியமிக்கவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் தெரிவித்துள்ளார். இதன்படி வடக்கு மற்றும் தெற்கில் நிலவும் காணிப்பிரச்சினைகள் அனைத்தும் தீர்க்கப்படும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று (19) முற்பகல் நடைபெற்ற மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே ஜனாதிபதி ரணில் … Read more

சட்ட நடவடிக்கையில் இறங்கும் மகிந்த

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு எதிராக முகநூல் உட்பட சமூக வலைத்தளங்கள் ஊடாக மேற்கொள்ளப்படும் சேறுபூசும் பிரசாரங்களுக்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுக்க அந்த கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மகிந்த ராஜபக்ச ஆலோசனை வழங்கியுள்ளார். வேறு பெயர்களில் சேறுபூசும் பிரசாரங்களில் ஈடுபடும் நபர்கள் சமூக வலைத்தளங்கள் வழியாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு எதிராக சேறுபூசும் பிரசாரங்களை மேற்கொண்டு வரும் சிலர் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களுக்கு எதிராக நடவடிக்கைகளை எடுப்பதற்காக கட்சியின் சட்டத்தரணிகளுக்கு அவற்றின் தகவல்களை … Read more