இலங்கை
சுற்றாடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வாகனங்கள் பரிசோதனை
நெடுஞ்சாலைகளில் அதிக புகையை வெளியேற்றும் வாகனங்களை பரிசோதனை செய்ய மோட்டார் வாகனப் போக்குவரத்து திணைக்களத்தின் புகைப் பரிசோதனைப் பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது. இவ்வாறு, கொழும்பு – கண்டி வீதியின் கடவத்த பகுதியில் வீதியில் பயணித்த 65 வாகனங்களை பரிசோதித்த போது கடும் கரும் புகையுடன் கூடிய 20 வாகனங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அதிக புகையினால் ஏற்படும் சூழல் பாதிப்பை தடுப்பதும், அதிக எரிபொருள் பயன்பாட்டால் பொருளாதாரத்தில் ஏற்படும் பாதிப்பை குறைப்பதும் இந்த ஆய்வின் நோக்கம் என்று புகைப் … Read more
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சீன மக்கள் சங்கத்தின் தலைவர்
வெளிநாட்டு நட்புறவுக்கான சீன மக்கள் சங்கத்தின் (CPAFFC) தலைவர் லின் சொங்டியன் ( Lin Songtian) இலங்கைக்கு நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ளார். இவர் நேற்று (12.11.2022) இலங்கை வந்தடைந்துள்ளார். லின் சொங்டியனின் இலங்கை விஜயம் அவர் இலங்கையில் பிரதமர் மற்றும் கிழக்கு மாகாண ஆளுநரைச் சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் அவரின் பயண நோக்கம் இன்னும் தெரியவரவில்லை. லின் சொங்டியன் 1986 இல் சீனாவின் வெளிநாட்டு சேவையில் பிரவேசித்தார். இந்நிலையில், 2020 முதல், தூதர் … Read more
திலினி பிரியமாலியிடம் பணம் முதலீடு செய்தவர்களுக்கு சிக்கல்
உலக வர்த்தக மையத்தில் அலுவலகம் நடத்தி மோசடி செய்த திலினி பிரியமாலியிடம் பணம் முதலீடு செய்தவர்களிடம் வாக்குமூலம் பெற குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தீர்மானித்துள்ளனர். திலினி பிரியமாலி மற்றும் சந்தேகநபர்கள் வழங்கிய சாட்சியங்கள் மற்றும் அவரது அலுவலகத்திலிருந்து பெறப்பட்ட தகவல்களுக்கமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. சம்பந்தப்பட்டவர்கள் முறைப்பாடு செய்வதற்கு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் காத்திருப்பதாகவும், ஆனால் அது நடக்காததால், இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் உண்மைகளை அறிக்கை செய்த பின்னர் இந்த வாக்குமூலங்கள் பெறப்படும் என்றும் பொலிஸ் … Read more
கடற்பரப்புகளில் மாறுபட்ட திசைகளிலிருந்து காற்று வீசக்கூடும்
இலங்கையைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல் நிலை,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு 2022நவம்பர் 13ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது. மழை நிலைமை: நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடியசாத்தியம் காணப்படுகின்றது. காற்று : நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு திசையிலிருந்து அல்லது மாறுபட்ட திசைகளிலிருந்து வீசக் கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 20-30 கிலோ மீற்றர் … Read more
2022 டி20 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியின் இறுதி போட்டி இன்று
2022 டி20 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியின் இறுதி போட்டி இன்று (13) மெல்போர்னில் நடைபெறுகிறது. இதில் பாகிஸ்தான்-இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி இன்று பிற்பகல் 1.30 மணிக்கு மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற உள்ளது. 8-வது டி20 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி அவுஸ்திரேலியாவில் கடந்த மாதம் 16-ஆம் திகதி ஆரம்பமானது. 16 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் ‘சூப்பர்12’ சுற்று முடிவில் நியூசிலாந்து, இங்கிலாந்து, இந்தியா, பாகிஸ்தான் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெற்றன. இதில் முன்னாள் சாம்பியன்களான … Read more
பிரதான நகரங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு 13.11.2022
பிரதான நகரங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு 13.11.2022
கிழக்கு மாகாணத்திலும் 100 மி.மீ மழை
இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு இதேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்பு பிரிவால் வெளியிடப்பட்டது. நவம்பர்13ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2022 நவம்பர்13ஆம் திகதிஅதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடியசாத்தியம் காணப்படுகின்றது. மேல்,சப்ரகமுவ,மத்திய, தென்,ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் 100 மி.மீ அளவானபலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. மேல் மற்றும் கிழக்குமாகாணங்களிலும் முல்லைத்தீவு, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் … Read more
டெல்லி ,அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நிலநடுக்கம்
இந்தியாவில் டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று (12) நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இது 5.4ஆக ரிக்டர் அளவு பதிவாகியுள்ளது. இன்று இரவு 8 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் வீட்டில் இருந்த பொருட்கள் கீழே விழுந்து உருண்டன. இதனால் சத்தம் கேட்டு அலறி அடித்து வீடுகளில் இருந்து வெளியேறினர். கதவுகள், ஜன்னல்கள் ஆடியது தொடர்பான வீடியோக்களை பொதுமக்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். டெல்லி, நொய்டா, குருகிராம், பரிதாபாத்தில் 54 நொடிகள் நிலநடுக்கம் உணரப்பட்டதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர் என்று … Read more
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை: 6 பேர் விடுதலைக்கு காங், எதிர்ப்பு
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், சிறை தண்டனை அனுபவித்த நளினி உள்ளிட்ட 6 பேரையும் விடுதலை செய்து இந்தியாவின் உச்சநீதிமன்றம் நேற்று (11) உத்தரவிட்டது இந்நிலையில் திமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள், பாமக ஆகியவை வரவேற்பு தெரிவித்துள்ளன. அதேநேரத்தில் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக நளினி, ஜெயக்குமார், ரவிச்சந்திரன், முருகன், ,சாந்தன், ராபர்ட் பயஸ், பேரறிவாளன் ஆகிய 7 பேரும் … Read more