ஆயுதப் போராட்டம் வெடிக்கும் சாத்தியம்: அடித்தளத்தை தயார் செய்யப்போகும் அரசியல் முக்கியஸ்தர்..!

நாட்டின் இன்றைய நிலையில் ஆயுதப் போராட்டம் நடக்கும் எனவும், அந்தப் போராட்டத்திற்கான அடித்தளத்தை தான் தயார் செய்வதாகவும் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், ஜனாதிபதி தலைமைமையிலான அரசாங்கம் முன்னெடுத்து வரும் அடக்குமுறை வேலைத்திட்டத்தை எதிர்கொண்டு மக்கள் போராட்டத்திற்கான ஆயுதம் ஏந்த வாய்ப்புள்ளது. முறையான தலைமை இல்லாத காரணத்தினால் கடந்த முறை அரசாங்கத்தால் போராட்டத்தை அடக்க முடிந்தது. ஆனால் இம்முறை அப்படி நடக்காமல் இருக்க எனது நேரத்தையும், உழைப்பையும், செல்வத்தையும் செலவழித்து … Read more

ரி 20 உலகக்கிண்ணம் – இலங்கைக்கு எதிரான போட்டியில் நமீபியா அணி வெற்றி

ரி20 உலக கிண்ண கிரிக்கெட்டில் இலங்கைக்கு எதிரான போட்டியில் நமீபியா அணி 55 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. 8 ஆவது ரி 20 உலக கிண்ண போட்டித் தொடர் அவுஸ்திரேலியாவில் நேற்று (16) ஆரம்பமாகியது. முதல் சுற்றின் முதலாவது ஆட்டத்தில் இலங்கை, நமிபியா அணிகள் களமிறங்கின. இதில் நாணய சுழற்சியை வென்ற இலங்கை அணி களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. இதற்கமைய துடுப்பாட்டத்jpy; MLgl;l நமீபியா அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 163 … Read more

களத்தில் மீண்டும் ராஜபக்சர்கள் – பரபரப்பாகும் அரசியல் களம்

கடந்த மே மாதம் 9 ஆம் திகதி தீயிட்டு எரிக்கப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் குருநாகல் மாவட்டத்தின் பிரதான அலுவலகம் மீண்டும் புனரமைக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. குருநாகல் மாநகரசபையின் மேயர் துஷார சஞ்சீவ உள்ளிட்ட பலரின் தலைமையில் இந்த நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. எரிந்த பொருட்கள் மற்றும் எரிந்த பஸ்ஸை அங்கிருந்துஅகற்றுவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பி்க்கப்பட்டுள்ளன. எதிர்வரும் நாட்களில் இந்த அலுவலகம் முழுமையாக புனரமைக்கப்படும் என கூறப்படுகின்றது. குருணாகலில் கூட்டம்  அதற்கமைய, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அடுத்தக்கட்ட கூட்டம் … Read more

அத்தியாவசியமான மருந்துகளை இனங்கண்டு கொள்வதற்கு உயர்மட்ட தொழில்நுட்பக் குழு

இந்நாட்டுக்கு இறக்குமதி செய்யப்படும் மருந்து வகைகளில் பெருந்தொகையானவை மக்களின் பாவனைக்கு அத்தியாவசியமற்றவை என்றும், ஒரு மருந்துக்குப் பல வர்த்தக நாமங்களில் மருந்துகள் இறக்குமதி செய்யப்படுவதால் முறையான கட்டுப்பாடுகள் இல்லாமை பாரிய பிரச்சினையாக மாறியுள்ளதாகவும் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கான குறுகிய மற்றும் நடுத்தர கால நிகழ்ச்சித்திட்டங்களை அடையாளம் காண்பதற்கான தேசிய பேரவையின் உப குழுவில் கலந்துரையாடப்பட்டது. எனவே, இந்நாட்டு மக்களின் மருந்துத் தேவை மற்றும் இதனைப் பூர்த்தி செய்வதற்கு அத்தியாவசியமான மருந்துப் பொருட்கள் யாவை என்பதை அடையாளம் காண்பதற்கு கொவிட் … Read more

கஸகஸ்தானில் நடைபெற்ற ஆசியாவில் ஊடாடல் , நம்பிக்கையை கட்டியெழுப்பும் நடவடிக்கைகள் குறித்த மாநாட்டின் ஆறாவது உச்சி மாநாட்டின் …..

கஸகஸ்தானில் நடைபெற்ற ஆசியாவில் ஊடாடல் மற்றும் நம்பிக்கையை கட்டியெழுப்பும் நடவடிக்கைகள் குறித்த மாநாட்டின் ஆறாவது உச்சி மாநாட்டிற்கான இலங்கைத் தூதுக்குழுவிற்கு தலைமை தாங்கிய வெளிநாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் தாரக்க பாலசூரிய, உச்சிமாநாட்டின் பக்க அம்சமாக, அஸர்பைஜான் குடியரசின் வெளிவிவகார அமைச்சர் ஜெய்{ஹன் பைரமோவ் மற்றும் கஸகஸ்தான் குடியரசின் வெளிவிவகார பிரதி அமைச்சர் அடில் துர்சுனோவ் ஆகியோருடன் 2022 அக்டோபர் 13ஆந் திகதி சந்திப்புக்களில் ஈடுபட்டார். கஸகஸ்தானின் வெளிவிவகார பிரதி அமைச்சருடனான சந்திப்பின் போது, இராஜாங்க அமைச்சர் … Read more

 கோடிக்கணக்கான பணத்தை மோசடி செய்த பெண் தொடர்பாக விரிவான விசாரணை

பணத்தை மோசடி செய்ததாக தெரிவிக்கப்படும்  திலினி பிரியமாலி என்ற பெண் தொடர்பாக விரிவான விசாரணைகள் தற்சமயம் இடம்பெற்று வருகின்றன. பெண்ணுக்கு சொந்தமான மற்றுமொரு அலுவலகம் நேற்று முன்தினம் (15) சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் நேற்று முன்தினம் காலை  காலை 10.00 மணியளவில் சிறைச்சாலையில் இருந்து இவரை அழைத்து சென்று ,அவரது அலுவலகத்தை கடுமையான சோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.அங்கு கிடைத்த பல ஆவணங்களையும், அந்த அலுவலகத்தில் அவரை சந்திக்க வந்தவர்கள், என்பது பற்றிய அறிந்துகொவதற்காக பாதுகாப்பு கேமரா … Read more

ரஷ்யாவிடமிருந்து எரிபொருளைப் பெற்றுக் கொள்வதற்கு பேச்சுவார்த்தை

ரஷ்யா – இலங்கைக்குநீண்டகாலமாக வழங்கி வரும் ஒத்துழைப்பிற்கு அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அந்நாட்டின் பிரதிப்பிரதமர் அலெக்ஸான்டர் நொவெக்கிற்கு நன்றி தெரிவித்துள்ளார். அமைச்சருக்கும் பிரதிப்பிரதமருக்கும் இடையிலான சந்திப்பு தலைநகர் மொஸ்கோவில் சமீபத்தில்இடம்பெற்றுள்ளது. அந்நாட்டிலிருந்து நேரடியாக எரிபொருளைப் பெற்றுக் கொள்வது தொடர்பிலும் விரிவாககலந்துரையாடப்பட்டுள்ளது. ரஷ்யாவில் உயர்கல்வியைத் தொடரும் மாணவர்களின் சேமநலன்கள்குறித்தும் அமைச்சர் இதன் போது பிரதிப் பிரதமருடன் கலந்துரையாடியுள்ளார்.