உலக சிறுவர் தினம் , முதியோர் தினம் இன்று

உலக சிறுவர் தினம் மற்றும் முதியோர் தினம் இன்று கொண்டாடப்படுகின்றது. இதனை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 1954ம் ஆண்டு டிசம்பர் மாதம் 14 ஆம் திகதி ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட ஆலோசனைக்கமைய உலக சிறுவர் தினத்தைக் கொண்டாடும் நிகழ்வு ஆரம்பமானது. சிறுவர் உரிமைகளைப் பாதுகாத்து அவர்களுக்கு மிகவும் சிறந்த வாழ்க்கையை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக 1989 ஆம் ஆண்டு நவம்பர் 29 ஆம் திகதி சிறுவர் உரிமைகள் தொடர்பான சாசனம் … Read more

சிறுவர்களையும் முதியவர்களையும் நம் அன்புக்குரியவர்களாக கருதி, அவர்களை அன்புடன் பராமரிக்கும் ஒரு சகாப்தத்தை உருவாக்க நாம் அனைவரும் உறுதிபூணுவோம் – ஜனாதிபதி

ஒக்டேன் 92 பெற்றோல் விநியோகிக்கும் இரண்டு இயந்திரங்களுக்கு சீல்

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையத்தில். இரண்டு ஒக்டேன் 92 பெற்றோல் விநியோகிக்கும் இயந்திரங்களுக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு நேற்று (29) சீல் வைத்துள்ளது. நாடளாவிய ரீதியில் கிடைத்த புகார்களின் அடிப்படையில் அனைத்து எரிபொருள் நிலையங்களில் இருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு தகவல் தொழில்நுட்பம் , எடை மற்றும் அளவீட்டுத்துறை ஆகியவற்றின் ஒத்துழைப்புடன்  நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில் விநியோகிக்கப்படும் பெட்ரோல் மற்றும் டீசல் தரம் குறைந்த மட்டத்தில் … Read more

கொழும்பு கோட்டைக்கும் – கண்டிக்கும் இடையில் வார இறுதி நாட்களில் சொகுசு ரயில் சேவை

வார இறுதி நாட்களில் கொழும்பு முதல் கண்டி வரையிலான சொகுசு ரயில் சேவை ஒன்று ஆரம்பிக்கப்பட உள்ளது. இதற்கான ஆசன முன்பதிவுகளை முற்கூட்டியே பதிவு செய்து கொள்ள முடியும். கொழும்பு முதல் கண்டி வரையிலான ஒரு வழிப்பயண முதலாம் வகுப்பு ஆசனத்திற்கு 2000 ரூபாய் அறவிடப்படும் என்று போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். ‘ரயில்வே எதிர்காலத் திட்டங்கள் மற்றும் புதிய புகையிரத பாதைகளை ஆரம்பித்தல்’ என்ற தலைப்பில் அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று … Read more

கல்வி , திறன் விருத்தி பயிற்சிகளில் ஒத்துழைப்பினை வலுவாக்க இந்தியா – இலங்கை திடசங்கற்பம்

இந்திய தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு திட்டத்தின் (ITEC) அடிப்படையில் இந்தியா மற்றும் இலங்கை இடையில் காணப்படும் 58 ஆண்டுகால ஆளுமை விருத்தி பங்குடைமையைக் கொண்டாடும் ITEC தினநிகழ்வுகள் 2022 செப்டெம்பர் 28 ஆம் திகதி கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தால் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தன. 2. கல்வி அமைச்சர் கௌரவ சுசில் பிரேமஜயந்த அவர்கள் பிரதம விருந்தினராகவும், கல்வி அமைச்சின் செயலாளர் திரு.நிஹால் ரணசிங்ஹ, அவர்கள் கௌரவ விருந்தினராகவும் இந்நிகழ்வுகளில் கலந்து சிறப்பித்திருந்தனர்.  ITEC திட்டத்தின்கீழ் இந்தியாவில் பல்வேறு … Read more

ரி20 உலகக்கிண்ணத்தை வெல்லும் அணிக்கான பரிசுத்தொகை

அவுஸ்திரேலியாவில் ஆரம்பமாகவுள்ள ஐ.சி.சி ரி20 உலகக்கிண்ணத்தை வெல்லும் அணிக்கான பரிசுத்தொகைகளை சர்வதேச கிரிக்கெட் பேரவை உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளது. இதன்படி நவம்பர் 13 ஆம் திகதி மெல்போர்னில் நடைபெறும் இறுதிப் போட்டியில் வெல்லும் அணிக்கு 1.6 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பரிசு தொகையாக வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. உலகக்கிண்ண சம்பியன்களுக்கு வழங்கப்படவுள்ள இந்த தொகையானது இலங்கை ரூபாயில் சுமார் 56 கோடி 87 இலட்சத்து 51 ஆயிரம் என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டாவது இடத்தை பிடிக்கும் அணிக்கு சம்பியன்களுக்கு … Read more

புகையிரத கட்டுப்பாட்டாளர்கள் முன்னெடுத்த திடீர் பணிப் பகிஷ்கரிப்பு நிறைவு

புகையிரத கட்டுப்பாட்டாளர்கள் இன்று (30) காலை திடீர் பணிப் பிஷ்கரிப்பை முன்னெடுத்தனர். இதனால் இன்று காலை சேவையில் ஈடுபடவிருந்த அனைத்து ரயில்களும் தாமதமாவதற்கு அல்லது பயணிக்காமல் இருப்பதற்கு இடமுண்டு என்று புகையிரத திணைக்களம் தெரிவித்திருந்தது. புகையிரத கட்டுப்பாட்டாளர்களின் மேலதிக நேர கொடுப்பனவு தொடர்பான பிரச்சினையே இதற்குக் காரணம் என்று தெரிய வந்துள்ளது. இதேவேளை, சற்று முன்னர் இந்த பணிப் பிஷ்கரிப்பு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக திணைக்களம் அறிவித்துள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிலிப்பைன்ஸ் ஜனாதிபதியை சந்தித்தார்.

ஆசிய பிராந்திய ஒத்துழைப்பை மேம்படுத்துவதன் மூலம் இலங்கைக்கும் பிலிப்பைன்ஸிற்கும் இடையிலுள்ள நீண்டகால நட்புறவை மேலும் வலுப்படுத்த முடியுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் தெரிவித்தார். உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு பிலிப்பைன்ஸ் சென்றுள்ள ஜனாதிபதி, அந்நாட்டு ஜனாதிபதி பேர்டினன்ட் ஆர். மார்க்கஸ்ஸை ( Ferdinand R. Marcos Jr.) நேற்று (29) காலை மணிலாவில் சந்தித்தபோது மேற்கண்டவாறு தெரிவித்தார்.மணிலாவில் உள்ள மலாக்கனங் மாளிகைக்கு வருகை தந்த ஜனாதிபதி விக்ரமசிங்க அவர்களுக்கு பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி மகத்தான வரவேற்பு அளித்தார். இருநாட்டுத் தலைவர்களும் … Read more

பூகோள அரசியல் போக்குகள்,பொருளாதார நெருக்கடியை மேலும் மோசமடைச் செய்துள்ளதாக ஜனாதிபதி தெரிவிப்பு

கொவிட் தொற்றுநோய் மற்றும் உக்ரேன் யுத்தம் காரணமாக ஏற்பட்ட உலகப் பொருளாதார ஸ்திரமின்மையின் பாதகமான விளைவுகள், உணவு, எரிபொருள் மற்றும் உரம் என்பவற்றின் விலைகள் அதிகரித்து, பாரிய சுமையாக மாறியுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளார். உலகளாவிய அரசியல் போக்குகள் பொருளாதார நெருக்கடியை மேலும் மோசமாக்கியுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். பிலிப்பைன்ஸின் மணிலா நகரிலுள்ள ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைமையகத்தில் நேற்று (29) காலை நடைபெற்ற ஆசிய அபிவிருத்தி வங்கி ஆளுநர்களின் 55 ஆவது வருடாந்த கூட்டத்தின் பிரதான … Read more

தென்மேற்கு பகுதியில் மழை நிலைமை அதிகரிக்கும்

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2022 செப்டம்பர்30ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2022 செப்டம்பர்30ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது இன்றும் அடுத்த சில நாட்களிலும் நாட்டின் தென்மேற்கு பகுதியில் மழை நிலைமை சற்று அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் மேல்மற்றும்சப்ரகமுவமாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடமேல் மாகாணத்தில் பல தடவைகள்மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. … Read more