3 இலட்சம் மெட்ரிக் தொன் நிலக்கரியை பெற விலைமனு

லக்விஜய மின் உற்பத்தி நிலையத்திற்கு தேவையான 3 இலட்சம் மெட்ரிக் தொன் நிலக்கரியை உடனடியாக பெறுவதற்கு உள்நாட்டு வெளிநாட்டு வழங்குனரிடம் இருந்து விலை மனுக்களை பெற விளம்பரம் செய்துள்ளதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. 900 மெகாவாட் கொள்ளளவு கொண்ட லக்விஜேயா நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்திற்கு தேவையான நிலக்கரியை பெறுவதற்கான ஏலத்தை நடாத்துவதற்கு அமைச்சகத்தினால் சிறப்பு குழு நியமிக்கப்பட்டு அக்குழுவினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இலங்கை நிலக்கரி நிறுவனத்தினால் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்கான காலவரை ஒக்டோபர் … Read more

தகவல் அறியும் உரிமைச் சட்டம் நிறைவேற்றப்பட்டு 06 வருடங்கள்

2016 ஆம் ஆண்டு 12 ஆம் இலக்க தகவல் அறியும் உரிமைச் சட்டம் இலங்கையில் நிறைவேற்றப்பட்டு 6 வருடங்கள் நிறைவடைந்துள்ளன. சர்வதேச தகவல் அறியும் உரிமைகள் தினம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் 28 ஆம் திகதி வெகுஜன ஊடக அமைச்சால் கொண்டாடப்படுகிறது. இதற்கமைய வெகுஜன ஊடக அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று (28) அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது.    இந் நிகழ்வின் பிரதம அதிதியாக, தகவல் அறியும் உரிமைகள் தொடர்பான ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் நாயகமும் … Read more

எரிவாயுக்கான தொகையை செலுத்துவதற்கான திட்டமிட்ட நடவடிக்கை

எரிவாயு விநியோகத்தை தடை இன்றி மேற்கொள்வதற்காக உலக வங்கியினால் கிடைத்த கடன் தொகையில் ஒரு பகுதியை திறைசேறிக்கு செலுத்த முடிந்துள்ளது என்று லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், அந்த முழு கடன் தொகையையும் எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்குள் திறைசேரிக்கு செலுத்தப்படும் என்று அதன் தலைவர் முதித பீரிஸ் குறிப்பிட்டுள்ளார். அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்…. உலக வங்கியிடமிருந்து பெறப்பட்ட 70 மில்லியன் டொலர்களை மீண்டும் திறைசேரிக்கு செலுத்த ஆரம்பித்துள்ளோம். நாம் ஜூலை மாதம் உலக வங்கியிடம் … Read more

உலகளவில் கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 60.16 கோடியாக உயர்வு

உலகளவில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 60.16 கோடியாக உயர்ந்துள்ளது. சீனாவின் உகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 228 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 62 கோடியே 15 இலட்சத்து 55 ஆயிரத்து 558 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 39 ஆயிரத்து 721 பேர் கவலைக்கிடமாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இருப்பினும், … Read more

முதல் ரி20 போட்டியில் இந்திய அணி வெற்றி

தென்னாப்பிரிக்கா மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகளுக்கிடையில் நடைபெற்ற ரி 20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. இந்திய சுற்றுப்பயணத்தில் ஈடுப்பட்டுள்ள தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி மூன்று ரி20 மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. இதன்படி இந்தியா- தென்னாப்பிரிக்கா  அணிகளுக்கிடையிலான முதலாவது ரி20 போட்டி கேரள தலைநகரம் திருவனந்தபுரத்தில் உள்ள கிரீன்பீல்ட் சர்வதேச ஸ்டேடியத்தில் நேற்று (28) இடம்பெற்றது.   இந்த போட்டியில் நாணய சுழற்சியை வென்ற இந்திய அணியின் தலைவர் ரோகித் சர்மா … Read more

அச்சமின்றி திரிபோஷாவை பயன்படுத்துமாறு அன்னையருக்கு அறிவுறுத்தல்

Aflatoxin அடங்கியுள்ள திரிபோஷா அழிக்கப்பட்டுள்ளதனால் ,அரசாங்கத்தினால் விநியோகிக்கப்பட்டுள்ள திரிபோஷா தொடர்பில் எந்தவித சந்தேகமும் இன்றி இன்று முதல் அதனை பயன்படுத்த முடியும் என கர்ப்பிணி தாய்மார் உள்ளிட்ட அன்னையருக்கு சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. திரிபோஷாவை உணவாக கொள்வதற்கு தேவையற்ற அச்சத்தை கொண்டிருக்க வேண்டாம் என்றும் இது தொடர்பான உண்மைக்கு புறம்பான தகவல்கள் வெளியிடப்படுவதாகவும் குடும்ப சுகாதார சேவை அலுவலகத்தின் பணிப்பாளர் விசேட வைத்தியர் சித்ரமாலி டி சில்வா தெரிவித்துள்ளார். Aflatoxin அடங்கியிருப்பதாக பரிசோதனையின் மூலம் உறுதி செய்யப்பட்ட திரிபோஷா … Read more

திரிபுபடுத்தப்பட்ட தகவல்களின் உண்மைத்தன்மையைக் கண்டறியும் நோக்கில் ஜனாதிபதி ஊடகப் பிரிவில் புதிய பிரிவு

திட்டமிட்டு பரப்பப்படும், திரிபுபடுத்தப்பட்ட தகவல்களின் உண்மைத் தன்மையை மக்கள் மயப்படுத்தும் நோக்கில் ஜனாதிபதி ஊடகப் பிரிவில் புதிய பிரிவொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. சர்வதேச தகவல் அறியும் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க தலைமையில் இன்று (28) ஜனாதிபதி அலுவலகத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றது. இதேவேளை, ஊடகங்களில் வெளிவரும் மக்களின் பொதுப் பிரச்சினைகள் குறித்த தகவல்களை அடிப்படையாகக் கொண்டு, மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் பணியும் இந்தப் பிரிவின் ஊடாக முன்னெடுக்கப்படவுள்ளது.இந்நிகழ்வில் மக்களின் பொதுப் பிரச்சினைகளை துரிதமாகத் தீர்க்கும் … Read more

கஜீமா தோட்ட தீ :ஒரு வாரத்திற்குள் முறையான விசாரணை; ஒன்றரை வருடத்திற்குள் மூன்று முறை தீ

மோதர, கஜீமா தோட்டத்தில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து ஒரு வாரத்திற்குள் முறையான விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு பிரதமர் தினேஷ் குணவர்தன கொழும்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கூட்டத்தில் இன்று (28) அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். இந்த தோட்ட வீடுகள் தொடர்ந்தும் தீப்பிடிப்பது குறித்து முறையான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க விடுத்த கோரிக்கைக்கு பதிலளிக்கும் போதே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார். கொழும்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், குழுவின் … Read more

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி பங்களாதேஷ் பயணம்

ஆசிய வெற்றிக் கிண்ண மகளிர் கிரிக்கெட் போட்டியில் கலந்து கொள்ளும் இலங்கை மகளிர் அணி நேற்று (28) காலை பங்களாதேஷ் பயணமானது. பங்களாதேஷில் நடைபெறும் இந்த போட்டியில் சமரி அதபத்து தலைமை தாங்குகிறார். அணியின் தலைவர் சமரி அதபத்து அங்கே செல்வதற்கு முன்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், தமது அணி போட்டிகளை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக கூறினார். ஆசிய வெற்றிக்கிண்ண மகளிர் போட்டி தொடர் அக்டோபர் மாதம் 1 ஆம் திகதி தொடக்கம் 16 ஆம் திகதி வரை … Read more

நாவலப்பிட்டியில் 24 மணிநேர நீர் விநியோகத்தடை

தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் நாவலப்பிட்டி நீர் வழங்கல் திட்டத்தின் பிரதான நீர்க்குழாயில் திருத்த வேலைகள் காரணமாக இன்று (29.09.2022) மு.ப. 8 மணி முதல் நாளை 30ஆம் திகதி  மு.ப. 8 மணி வரையிலான 24 மணிநேர நீர் விநியோகத்தடை பின்வரும் பகுதிகளில் அமுலாகும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது. நாவலப்பிட்டி நகர எல்லை, பெளவாகம, மல்லந்த, இம்புல்பிட்டிய, ஹதுன்கலவத்த, தொலஸ்பாகே வீதி, பெனித்திமுல்ல உட்பட நாவலப்பிட்டி நீர் வழங்கல் … Read more