தாய்நாட்டின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் வகையில் பேனாவை பயன்படுத்த வேண்டாம் – ஊடகத்துறை அமைச்சர்

இலங்கை பத்திரிகையாளர் பேரவையினால் நடத்தப்பட்ட ஊடகக் கற்கைகள் மற்றும் இதழியல் – டிப்ளோமா பாடநெறியின் 8ஆம் குழுவுக்கும் பத்திரிகை துறை தொடர்பான சான்றிதழ் பாடநெறியை பூர்த்தி செய்த மாணவர்களுக்கும் டிப்ளோமா சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நேற்று (22) ராஜகிரியவில் இடம்பெற்றது. இவ்விழாவின் பிரதம அதிதியாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன கலந்து கொண்டார். அங்கு அவர் கருத்து தெரிவிக்கையில்…. பத்திரிகை ஆசிரியர்களான மார்ட்டின் விக்கிரமசிங்க , சந்திரரத்ன மானவசிங்கன், மீமன பிரேமதிலக, டி.பி.தனபால  ஆகியோர் … Read more

நிலக்கரி பெறுகை குறித்து அமைச்சர் கருத்து

ஆகஸ்ட் மாதம் 25 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட நிலக்கரி பெறுகையை மின்சக்தி எரிசக்தி அமைச்சின் கோரிக்கைக்கு அமைவாக அமைச்சரவையினால் நேற்று (22) இடைநிறுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அமைச்சர் கஞ்சன விஜயசேகர தனது டுவிட்டர் பக்கத்தில் இதனை குறிப்பிட்டுள்ளார். தெரிவு செய்யப்பட்ட வழங்குநர்கள் இந்த பெறுகையை முன்னெடுக்க முடியாது என்று அமைச்சுக்கு அறிவித்துள்ளனர் என்றும் அமைச்சர் அதில் குறிப்பிட்டுள்ளார். சட்ட தலையீடு மற்றும் கொடுப்பனவு தொடர்பில் அவநம்பிக்கை காரணமாக தமது நிறுவனம் இதனை நடைமுறைப்படுத்தவில்லை என்று தெரிவித்துள்ளது. அமைச்சர் … Read more

திரிபோஷாவில் aflatoxin நச்சுத்தன்மை – விசாரணை

கர்ப்பிணி பெண்களுக்கும், பாலூட்டும் தாய்மார்களுக்கும் இலவசமாக வழங்கப்படும் திரிபோஷாவில் aflatoxin என்ற நச்சுத்தன்மை குறிப்பிட்ட அளவிலும் பார்க்க அதிகளவில் அடங்கியிருப்பதாக நாகொட தேசிய சுகாதார ஆய்வு நிலைய 6 அறிக்கையில் இதற்கு முன்னர் உறுதி செய்யப்பட்டிருந்தது. சுகாதார அமைச்சின் உணவு பாதுகாப்பு பிரிவின் பிரதி பணிப்பாளர் நாயகம் இந்த அறிக்கையை உறுதி செய்து தெரிவிக்கையில் திரிபோஷாவில் aflatoxin நச்சு அடங்கியிருப்பதாக சில மாதங்களுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் உறுதி செய்யப்பட்டது என்றார். இருப்பினும், இலங்கை திரிபோஷா நிறுவனம் தெரிவிக்கையில் aflatoxin அடங்கியிருப்பதாக அடையாளம் … Read more

ஐ.சி.சி உலகக் கிண்ண ரி20 போட்டிக்கான இலங்கை அணி அறிவிப்பு

2022  ஆம் ஆண்டு ஐ.சி.சி உலகக் கிண்ண ரி20 போட்டிக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஐ.சி.சி ஆடவர் ரி 20 உலகக் கிண்ண போட்டிகள் அவுஸ்திரேலியாவில் ஒக்டோபர் 16 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. அவுஸ்திரோலியா ஜீலோங் நகரில் நடைபெறும் உலகக் கிண்ண ரி20 ஆரம்ப ஆட்டத்தில் இலங்கை அணி நமீபியா அணியை எதிர்கொள்கிறது. 16 நாடுகள் பங்கேற்கும் இந்தப் போட்டியின் இறுதிப் போட்டி நவம்பர் 13 ஆம் திகதி மெல்போர்னில் நடைபெறவுள்ளது. ரி 20 போட்டிகளுக்காக அறிவிக்கப்பட்ட … Read more

கொரோனா தொற்று குணமடைந்தவர்களின் எண்ணிக்கை

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 59.89 கோடியாக அதிகரித்துள்ளது. சீனாவின் உகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 228 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் உருமாற்றமடைந்து வைரஸ் தொடர்ந்து பரவி வருகிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 61 கோடியே 89 இலட்சத்து … Read more

உள்நாட்டு சினிமாவின் விருத்தி: பாராளுமன்ற குழுவொன்றை ஸ்தாபிக்குமாறு உறுப்பினர்கள் கோரிக்கை

உள்நாட்டு திரைப்பட கைத்தொழில் முகண்கொடுத்துள்ள நிலைமை மற்றும் அதன் வர்த்தகக் கொள்கைகளை மீள நிறுவுதல், முன்னுரிமை அவனமொன்றை தயாரித்தல், பார்வையாளர்களின் ஈர்ப்பை 1971 – 1979 காலப்பகுதி காலப்பகுதியைப் போன்று மீண்டும் ஸ்தாபிப்பது போன்ற விடயங்களை கருத்தில்கொள்வதற்கு பாராளுமன்ற விசேட குழுவொன்றை நிறுவுமாறு கோரிக்கை விடுத்து சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்த்தனவுக்கு கடிதமொன்று இன்று (23) கையளிக்கப்பட்டது. பாரம்பரியமான திரைப்பட முறைகளுக்குப் பதிலாக டிஜிட்டல் முறைமையினால் கிடைக்கும் முன்னேற்றங்களுக்கு அமைய உள்நாட்டு திரைப்படத் தயாரிப்பு மற்றும் … Read more

ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் பற்றிய குழுவின் தலைவராக அமைச்சர் (கலாநிதி) விஜயதாச ராஜபக்ஷ தெரிவு

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத்தொடருக்கான பாராளுமன்ற ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் பற்றிய குழுவின் தலைவராக நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் (கலாநிதி) விஜயதாச ராஜபக்ஷ அண்மையில் (21) ஏகமனதாக தெரிவுசெய்யப்பட்டார். பாராளுமன்றத்தின் 118 ஆம் இலக்க நிலையியற் கட்டளையின் ஏற்பாடுகள் மற்றும் 2022 ஆகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி பாராளுமன்றத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரேரணை என்பனவற்றிற்கு அமைவாக ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் பற்றிய குழுவில் பணியாற்றுவதற்காக உறுப்பினர்கள் தெரிவுக் குழுவினால் பெயர்குறித்து நியமிக்கப்பட்டிருந்தனர். … Read more

பிரதமரின் பிரேரணைக்கு அமைய ஸ்தாபிக்கப்பட்ட தேசிய பேரவைக்கு உறுப்பினர்கள் பெயரிடப்பட்டனர்

பிரதமர் தினேஷ் குணவர்த்தன அவர்களின் பிரேரணைக்கு அமைய ஸ்தாபிக்கப்பட்டுள்ள ஏற்றுக்கொள்ளப்பட்ட அரசியல் கட்சிகளில் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சகல கட்சிகளின் பிரதிநிதிகளையும் உள்ளடக்கிய ‘தேசிய பேரவை’க்கு பெயரிடப்பட்டுள்ள உறுப்பினர்களின் பட்டியலை சபாநாயகர் பாராளுமன்றத்தில் இன்று (23) முன்வைத்தார். அத்துடன், திருத்தத்தை முன்வைத்த ஆளும் கட்சியின் முதற்கோலாசான் குறிப்பிடுகையில், சபாநாயரைத் தவிசாளராகக் கொண்டு, பிரதமர், பாராளுமன்ற சபை முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர், அரசாங்கக் கட்சி முதற்கோலாசான், எதிர்க்கட்சியின் முதற்கோலாசான் மற்றும் இலங்கையில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளிலிருந்து ஒன்பதாவது பாராளுமன்றத்தைப் … Read more

கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சியை ஜனாதிபதி பார்வையிட்டார்

இலங்கையில் இருந்து வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ள அரிய மற்றும் வரலாற்று மதிப்புமிக்க புத்தகங்கள் மற்றும் ஆவணங்கள் உள்ளடங்கிய விசேட புத்தகக் கண்காட்சியொன்றை இலங்கையின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நடத்த ஏற்பாடு செய்திருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் தெரிவித்தார். ஜனாதிபதி அவர்கள் நேற்று (22) முற்பகல் பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மாநாட்டு மண்டப வளாகத்தில் நடைபெற்று வரும் 23 ஆவது கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சியை பார்வையிடுவதற்காக சென்றிருந்தார். இதன்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். சுதந்திர தினத்தை … Read more

பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள இலங்கைக்கு உதவுவதாக வெளிநாட்டுத் தூதுவர்கள் ஜனாதிபதியிடம் உறுதி

பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் உதவிகளைப் பெற்றுக்கொள்ள இலங்கைக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாக வெளிநாட்டு தூதவர்கள் ஜனாதிபதியிடம் உறுதியளித்துள்ளனர். கடன் மறுசீரமைப்பு மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் கடன் உதவியைப் பெறுவது தொடர்பில் ஜனாதிபதி வெளிநாட்டுத் தூதுவர்களுக்கு விளக்கமளித்தார்.   ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (22) பிற்பகல் நடைபெற்ற இச்சந்திப்பின் போது, சர்வதேச நாணய நிதியத்தின் உதவிகளைப் பெறுவதற்கும், கடன் மறுசீரமைப்பிற்கும் தமது ஒத்துழைப்பை வழங்குவதாக வெளிநாட்டுத் தூதுவர்கள் ஜனாதிபதியிடம் உறுதியளித்தனர்.   • நெருக்கடியில் … Read more