சாரதி அனுமதிப்பத்திரம் செல்லுபடியாகும் கால எல்லையை  தற்காலிகமாக நீடிக்க முடிவு

சாரதி அனுமதிப்பத்திரம் செல்லுபடியாகும் கால எல்லையை  தற்காலிகமாக நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. மோட்டார் வாகன சட்டத்தின் கீழான கட்டளைகளுக்கு அமைவாக,போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் ஆலோசனைக் குழு இதற்கு அனுமதி வழங்கியுள்ளது.   இந்த கட்டளைகளின் ஊடாக சாரதி அனுமதிப்பத்திரங்களின் செல்லுபடியாகும் காலம் தற்காலிகமாக நீடிக்கப்படும்.   அதன்படி, இந்த கட்டளைகள், எதிர்காலத்தில் பாராளுமன்ற அனுமதிக்கு முன்வைக்கப்பட உள்ளன.   மேலும், இந்த குழுவில், உள்நாட்டு கார் உற்பத்தியை மேம்படுத்துவது குறித்து ஆராயுமாறும் அதிகாரிகளுக்கு அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.

2022 ஆகஸ்ட் மாத பணவீக்கம் 70.2 %

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (தேநுவிசு, 2013=100)1 ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம், 2022 யூலையின் 66.7 சதவீதத்திலிருந்து 2022 ஓகத்தில் 70.2 சதவீதத்திற்கு அதிகரித்தது. ஆண்டிற்கு ஆண்டு பணவீக்கத்தின் இத்தகைய அதிகரிப்பு உணவு மற்றும் உணவல்லா வகைகள் இரண்டிலும் ஏற்பட்ட மாதாந்த அதிகரிப்பினால் பிரதானமாகத் தூண்டப்பட்டிருந்தது. அதற்கமைய, உணவுப் பணவீக்கம், (ஆண்டிற்கு ஆண்டு) 2022 யூலையின் 82.5 சதவீதத்திலிருந்து 2022 ஓகத்தில் 84.6 சதவீதத்திற்கு அதிகரித்த அதேவேளை, உணவல்லாப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு) … Read more

5 வயதுக்கு குறைந்த பிள்ளைகளின் வளர்ச்சியை மதிப்பீடு செய்ய நடவடிக்கை

நாட்டில் போசாக்கு வேலைத்திட்டத்தை மிகவும் வலுவுள்ளதாக முன்னெடுக்கும் நோக்கில் ,ஒக்டோபர் மாதத்தில் இடம்பெற்றுள்ள போசாக்கு மாதத்தை முன்னிட்டு ,முழு நாட்டையும் உள்ளடக்கிய 5 வயதுக்கு குறைந்த பிள்ளைகளின் எடை மற்றும் உயரம் ஆகிய இரண்டிற்கும் அமைவாக வளர்ச்சியை மதிப்பீடு செய்வதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என்று குடும்ப சுகாதார அலுவலகத்தின் பணிப்பாளர் விசேட வைத்தியர் திருமதி. சித்ரமாலி டி சில்வா தெரிவித்தார். சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நேற்று (21) நடைபெற்ற போசாக்கு மாதம் தொடர்பில் தெளிவுப்படுத்தும் விசேட ஊடக … Read more

சில இடங்களில் மாலையில் இடியுடன் கூடிய மழை

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2022 செப்டம்பர் 22ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2022 செப்டம்பர்22ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது நாட்டின் மேல்மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோபெய்யக் கூடியசாத்தியம் காணப்படுகின்றது நாட்டின் … Read more

கொத்மலையில் ஜப்பான் மொழி: இளைஞர்களுக்கு விழிப்புணர்வு

ஜப்பானில் தொழில் வாய்ப்புகளைப் பெறுவதற்கு தேவையான ஜப்பான் மொழிப் பயிற்சித் திட்டம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் விசேட நிகழ்வு கொத்மலை பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது. நுவரெலியா மாவட்ட செயலகத்தின் வேலைவாய்ப்பு நிலையம், கொத்மலை பிரதேச செயலகத்தின் மனிதவளப் பிரிவு மற்றும் Benkyo Nihongo Gakko நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த விசேட நிகழ்வு நேற்று முன்தினம் (20) இடம்பெற்றது..

இலங்கையில் முதலீடு செய்யுமாறு கல்வி அமைச்சர் கேட்ஸ் அறக்கட்டளைக்கு அழைப்பு

இலங்கையிலுள்ள அரச பாடசாலைகளில் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய கல்வி நடவடிக்கைகளுக்கு உதவுமாறும் கேட்ஸ்  அறக்கட்டளையிடம் கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த கோரிக்கை விடுத்துள்ளார். கல்வி உச்சி மாநாட்டிற்க்காக அமெரிக்காவிற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள கல்வி அமைச்சர் இ கேட்ஸ் அறக்கட்டளையின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடலை மேற்கொண்ட போதே இவ்வாறு அழைப்புவிடுத்தார். இதன் போது வளர்ந்து வரும் நாடுகளில் கல்வி துறையை அபிவிருத்தி செய்வதற்காக கேட்ஸ் அறக்கட்டளையினால் நடைமுறைப்படுத்தப்படும் உலகளாவிய அபிவிருத்தி வேலைத் திட்டத்திற்கு அமைச்சர் பிரேமஜயந்த தனது … Read more

இந்தியா – அவுஸ்திரேலியா T20 கிரிக்கெட் தொடர்: மற்றுமொரு போட்டி நாளை

இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான T20 கிரிக்கெட் தொடரின் மற்றுமொரு போட்டி நாளை இந்தியாவில் நாக்பூ (Nagpu) ரில் நாளை நடைபெறவுள்ளது. இதேவேளை இந்திய அணிக்கு எதிரான முதல் 20 ஓவர் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மொகாலியில் நடந்த இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 208 ஓட்டங்கள் பெற்றது. இந்திய அணி சார்பில் ஹர்திக் பாண்டியா 30 … Read more

இந்தியாவில் இந்தி மொழி: 18 மாணவர்களுக்கு புலமைப்பரிசில்

இந்தியாவில் இந்தி மொழிக்கற்கைநெறியினை தொடர்வதற்காக இலங்கையின் பல்வேறு பாகங்களையும் சேர்ந்த 18 மாணவர்களுக்கு இந்திய அரசாங்கத்தினால் புலமைப் பரிசில் வழங்கப்பட்டுள்ளது. இந்த புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ், அம்மாணவர்களின் இந்திய பயணத்துக்கான செலவீனம், கல்விசார் கட்டணங்கள், ஆக்ராவில் உள்ள கேந்திரிய ஹிந்தி சன்ஸ்தானில் (இந்தி மத்திய நிலையம்) ஒருவருட கற்கை நெறிக்கான விருந்தோம்பல் செலவீனம் ஆகியவையும் வழங்கப்படும். 2. இக்கற்கைநெறிக்காக தெரிவுசெய்யப்பட்ட மாணவர்கள் இந்தியாவுக்கான பயணத்தை மேற்கொள்வதற்கு முன்னர், 2022 செப்டெம்பர் 14ஆம் திகதி அம்மாணவர்களைச் சந்தித்து உரையாடியிருந்த … Read more