பிறப்பு, இறப்பு, திருமண சான்றிதழ் பிரதிகளுக்கு செல்லுபடியாகும் காலவரை நீக்கம்

பதிவாளர் நாயகம் திணைக்களத்தினால் வழங்கப்படும் அனைத்து சான்றிதழ்களின் பிரதிகளின் செல்லுபடியாகும் காலம் எந்தவித காலவரையறையும் இன்றி ஏற்றுக் கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக பிறப்பு சான்றிதழ்கள், மரண மற்றும் திருமண சான்றிதழ்களின் செல்லுப்படியாகும் காலத்தினை வரையறைக்கு உட்படுத்தாமல் ஏற்றுக்கொள்வதாக அறிக்கை ஒன்றை விடுத்து திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. சம்பந்தப்பட்ட பிரதி உறுதி செய்யப்பட்டு வழங்கப்பட்ட காலம் 6 மாத காலத்துக்கு மாத்திரம் செல்லுபடியாகும் என இதற்கு முன்னர் வரையறுக்கப்பட்டிருந்தது. இருப்பினும் இந்த நிலையின் காரணமாக துணை பிரதியை பெற்றுக்கொள்வதில் பொதுமக்கள் … Read more

பிரிட்டன் அமைச்சரவையில் இலங்கையை பூர்விகமாகக்கொண்டவர்

இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட  கன்சர்வேடிவ பாராளுமன்ற உறுப்பினர் ரணில் ஜெயவர்தன பிரிட்டனில் சுற்றாடல் உணவு மற்றும் கிராமிய அலுவல்கள் தொடர்பான இராஜாங்க செயலாளர்களாக நியமிக்கப்படுவார் என பிரிட்டிஷ் அரசாங்கம் அறிவிப்பு ஒன்றை விடுத்து தெரிவித்துள்ளது. 2020 ஆம் ஆண்டு தொடக்கம் 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரையில்,ரணில் மெல்கம் ஜெயவர்தன பிரிட்டனில் சர்வதேச வர்த்தகம் தொடர்பான அமைச்சராக பணியாற்றினார். 2015 ஆம் ஆண்டு மே மாதம் 8 ஆம் திகதி நடைபெற்ற பிரிட்டன் பாராளுமன்ற தேர்தலில் … Read more

தரம் 1 தொடக்கம் ஆங்கில மொழி செயல்முறைக்கு நடவடிக்கை

2023 ஆம் ஆண்டு தொடக்கம் புதிய கல்வி மறுசீரமைப்பின் கீழ்,தரம் 1 தொடக்கம் ஆங்கில மொழியை செயல்முறையில் முன்னெடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். கல்வி அமைச்சில் இதுதொடர்பாக அவர் தெரிவிக்கையில் பாடசாலை மாணவர்களின் ஆங்கில மொழி ஆற்றலை மேம்படுத்துவதற்காக கல்வி அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. ”English is simple” என்ற தலைப்பில் ஆங்கில மொழி ஆற்றலை மேம்படுத்துவதற்கான வேலைத் திட்டத்தில் கலந்து கொண்ட போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டார். … Read more

சமூக பாதுகாப்பு உதவுதொகை அறவீட்டுச் சட்டமூலம் மேலதிக வாக்குகளால் பாராளுமன்றத்தில் நிறைவேற்றம்

சமூக பாதுகாப்பு உதவுதொகை அறவீட்டுச் சட்டமூலம் 81 மேலதிக வாக்குகளால் திருத்தங்களுடன் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக இரண்டாவது மதிப்பீடு மீதான விவாதம் முடிவடைந்த பின்னர் வாக்கெடுப்புக் கோரியிருந்தார். இதற்கமைய நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் குறித்த சட்டமூலத்துக்கு ஆதரவாக 91 வாக்குகளும், எதிராக 10 வாக்குகளும் அளிக்கப்பட்டன. குழுநிலை அமர்வின்போது சட்டமூலத்தில் திருத்தங்கள் இணைத்துக்கொள்ளப்பட்டதுடன், மூன்றாவது மதிப்பீடு வாக்கெடுப்பு இன்றி நிறைவேற்றப்பட்டது. அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரிப்பதற்கும் கொவிட் 19 தொற்றுநோயினால் பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தை … Read more

இந்தியாவில் கொரோனா தொற்றாளர்களுக்கு மூக்கு வழி தடுப்பு மருந்து

கொரோனா தொற்றாளர்களுக்கு பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள மூக்கு வழியாக செலுத்தக்கூடிய தடுப்பு மருந்துக்கு இந்தியாவில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு எதிராக ஐதராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் மூக்கு வழியாக செலுத்தக்கூடிய தடுப்பு மருந்தை உருவாக்கி உள்ளது. இந்த தடுப்பு மருந்து சுமார் 4 ஆயிரம் தன்னார்வலர்களுக்கு செலுத்தி பரிசோதிக்கப்பட்டது. அதில் பக்க விளைவுகளோ, விரும்பத்தகாத பிற விளைவுகளோ ஏற்படவில்லை. இந்த தடுப்பு மருந்து 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு பயன்படுத்தப்படவுள்ளது. இந்த தடுப்பு … Read more

மாணவர்களின் புத்தகப் பைகளை பரிசோதிக்கும் நடைமுறை

பாடசாலை மாணவர்களின் புத்தகப் பைகளை பரிசோதிக்கும் நடைமுறை மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதுடன்இ எதிர்காலத்தில் இது தொடர்பான சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்படும் என்று கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் நேற்று (07) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். தற்போதுஇ பாடசாலை மாணவர்கள் மத்தியில் நுட்பமான வழிகளில் பல்வேறு போதைப் பொருட்கள் பரிமாற்றப்படுகின்றன. எனவே இது தொடர்பில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டிய தருணம் வந்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்;. பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரதன தேரர் எழுப்பிய வாய்மூல கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் … Read more

சர்வதேச சிவப்பு பிடியாணை ஊடாக ஹரக் கட்டா உள்ளிட்ட 8 பேரை நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை

சர்வதேச போதைப்பொருள் வலையமைப்பின் பலமானவரும், பாதாள உலகக் கும்பலின் முக்கிய தலைவருமான ‘ஹரக் கட்டா‘ துபாய் விமான நிலையத்தில் குடிவரவுத் திணைக்கள அதிகாரிகளால் அண்மையில் கைது செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில், ”ஹரக் கட்டா” என்றழைக்கப்படும் நதுன் சிந்தக உள்ளிட்ட 08 பேரை துபாயிலிருந்து நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை எடுப்பதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. சர்வதேச சிவப்பு பிடியாணை இந்த நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் … Read more

அரசாங்க தகவல் திணைக்களத்திற்கு புதிய பணிப்பாளர் நாயகம் நியமனம்

சிரேஷ்ட ஊடகவியலாளர் தினித் சிந்தக கருணாரத்ன (Dinith Chinthaka Karunaratne) அரசாங்க தகவல் திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இன்று (8) அரசாங்க தகவல் திணைக்களத்தில் தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார். இந்நிகழ்வில் வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளர் அனுஸ பெல்பிட மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். முன்னணி பத்திரிக்கை ஆசிரிய  பீடத்தின் அங்கத்தவராகவும் பணியாற்றியதோடு, ஜனாதிபதியின் ஊடக ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

பொருளாதார நெருக்கடி தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களைத் தெளிவுபடுத்தும் தொடர் நிகழ்ச்சித்திட்டங்களை….

நாட்டில் காணப்படும் பொருளாதார நெருக்கடியின் பாரதூரமான நிலைமை தொடர்பில் சகல பாராளுமன்ற உறுப்பினர்களையும் தெளிவுபடுத்த அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைமையின் கீழ் தொடர் நிகழ்ச்சித்திட்டங்கள் தயாரிக்கப்பட வேண்டும் என குழுவின் உறுப்பினர்களால் முன்மொழியப்பட்டுள்ளது. அரசாங்க நிதி பற்றிய குழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ (கலாநிதி) ஹர்ஷ த சில்வா தலைமையில் நேற்றுக் (06) கூடியபோதே இவ்வாறு முன்மொழியப்பட்டது. இதில் கடந்த யூலை 27ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட “ 2022ஆம் ஆண்டின் அரையாண்டு … Read more