பாகிஸ்தானில் வெள்ளம் – 900 பேர் உயிரிழப்பு

பாகிஸ்தானில் பருவமழை மற்றும் வெள்ளப் பெருக்கால் ஜூன் மாதத்தில் இருந்து 326 குழந்தைகள் மற்றும் 191 பெண்கள் உட்பட 903 பேர் இறந்துள்ளதாக அந்நாட்டின் பருவநிலை மாற்றத்துறை அமைச்சர் ஷெர்ரி ரஹ்மான் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் முழுவதும் மழை பெய்து வருவதால், பல்வேறு சம்பங்களில் 1,293 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். பருவமழை மற்றும் வெள்ளத்திற்கு அதிக எண்ணிக்கையிலான இறப்புகள் சிந்து மற்றும் பலுசிஸ்தானில் மாகாணங்களில் பதிவாகியுள்ளன. ஒரு கோடி மக்கள் வீடுகளை இழந்து, இடம் … Read more

இலங்கைக்கு 04 மில்லியன் டொலர் பெறுமதியான அத்தியாவசிய மருத்துவப் பொருட்களை வழங்க உலக சுகாதார அமைப்பு உறுதி

இலங்கை மக்களின் அவசர சுகாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்ய 04 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான அத்தியாவசிய மருத்துவப் பொருட்கள் வழங்கப்படும் என உலக சுகாதார  அமைப்பின் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் டெட்ரோஸ் அதானம் கெப்ரேயஸஸ் (Tedros Adhanom Ghebreyesus) தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் ஜனாதிபதியாக பதவியேற்றதற்கு அனுப்பிவைத்துள்ள வாழ்த்துச் செய்தியில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இலங்கைக்கு வழங்கப்படும் அத்தியாவசிய மருத்துவப் பொருட்களை கொள்வனவு செய்யும் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், விநியோகிப்பதற்கான திகதிகள் மற்றும் … Read more

தீப்பிடித்த M.V X-Press Pearl கப்பல்:கரையோரத்தை முழுமையாக சுத்தப்படுத்த இன்னும்…..

இலங்கை கடற்பரப்பில் தீப்பிடித்த M.V X-Press Pearl கப்பலில் இருந்து வெளியாகும் பிளாஸ்டிக் மற்றும் கழிவுகளை அகற்றி மன்னார் முதல் ஹம்பாந்தோட்டை கிரிந்த வரையிலான கடற்கரையை சுத்தப்படுத்த இதுவரை 93.8 மில்லியன் ரூபா  செலவிடப்பட்டுள்ளது என கடல் மற்றும் சுற்றாடல் பாதுகாப்பு அதிகார சபையின் (MEPA)  தலைவி தர்ஷனி லஹந்தபுர தெரிவித்துள்ளார். பத்தரமுல்ல, செத்சிறிபாய வில் அமைந்துள்ள நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். கப்பலில் இருந்து … Read more

கைக்குண்டு , ஹெரோயினுடன் வத்தளையில் இரு இளைஞர்கள் கைது

கைக்குண்டு மற்றும் ஹெரோயின் போதைப்பொருளுடன் வத்தளையில் இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்படும் போது இருவரும் கைக்குண்டு மற்றும் கிட்டத்தட்ட 12 கிராம் ஹெரோயின் வைத்திருந்ததாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. சந்தேகநபர்கள் 20 மற்றும் 25 வயதுடைய நபர்கள் எனவும் , குறித்த சந்தேக நபர்கள் ஜா-எல மற்றும் கந்தானையை சேர்ந்தவர்கள் எனவும் தெரியவந்துள்ளது. மேலும் அவர்கள் இன்று வெலிசர நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர். சம்பவம் தொடர்பில் வத்தளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு … Read more

இலங்கையில் மீண்டும் எரிபொருள் வரிசைகள்! மூடப்படும் எரிபொருள் நிரப்பு நிலையங்கள்

பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திடம் டீசல் மற்றும் பெட்ரோல் ஆகிய இரண்டு இருப்பும் இல்லை என இலங்கை பெட்ரோலிய தனியார் கொள்கலன் உரிமையாளர்கள் சங்கத்தின் இணைச் செயலாளர் டி.வி.சாந்த சில்வா தெரிவித்துள்ளார். இதன் காரணமாக நாடு முழுவதும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பல எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. மீண்டும் வரிசைகள் இதன் காரணமாக எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் மீண்டும் நீண்ட வரிசைகள் உருவாகியுள்ளன. … Read more

இலங்கையுடன் நெருக்கமான உறவுகளை வளர்த்துக் கொள்ள அர்ப்பணிப்பதாக தென்னாப்பிரிக்க ஜனாதிபதி தெரிவிப்பு

இலங்கையுடன் தற்போதுள்ள நெருக்கமான உறவுகளை மேலும் மேம்படுத்த அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக தென்னாபிரிக்க ஜனாதிபதி மதமெலா சிறில் ரமபோசா (Matamela Cyril Ramaphosa), ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கு அனுப்பிவைத்துள்ள வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கு தனது மனப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துள்ள தென்னாபிரிக்க ஜனாதிபதி, இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவை மேலும் வலுப்படுத்துவதே தமது எதிர்பார்ப்பு எனவும் தெரிவித்துள்ளார். தென்னாபிரிக்கா கடந்த காலங்களில் இலங்கையுடனான உறவு தொடர்பில் விசேட கவனம் செலுத்தியதாகவும் இரு … Read more

2022 ஆசிய வெற்றிக்கிண்ண தொடருக்கு ஹாங் காங் அணி தகுதி

2022 ஆசிய வெற்றிக்கிண்ண போட்டிக்கு ஹாங்காங் அணி தகுதிபெற்றுள்ளது. 2022 ஆசிய வெற்றிக்கிண்ண போட்டிக்கு ஹாங்காங் அணி மோதிய மூன்று ஆட்டங்களிலும் வெற்றி பெற்று ஆசிய வெற்றிக்கிண்ண தொடருக்கு தகுதி பெற்றது. இதன் மூலம் அந்த அணி ஆசிய வெற்றிக்கிண்ண போட்டிக்கு தகுதி பெற்றது. ஹாங்காங் ஏ பிரிவில் இந்தியா மற்றும் பாகிஸ்தானுடன் இடம் பெற்றுள்ளன. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்பட 6 அணிகள் பங்கேற்கும் 20 ஓவர் ஆசிய வெற்றிக்கிண்ண கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நாளை … Read more

கோட்டாபய தொடர்பில் பசில் போடும் திட்டம்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் உயர் பதவி வழங்கப்பட வேண்டும் எனவும் தேசியப்பட்டியல் உறுப்பினராக நியமிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச தலைமையில் நடைபெற்ற கூட்டத்திலேயே இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக மிகவும் நம்பகமான தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பசிலின் திட்டம் எப்படியிருப்பினும் பொதுஜன பெரமுனவில் இந்த யோசனைக்கு ஆதரவான குழுவும், எதிராக ஒரு குழுவும் உருவாகியுள்ளதென தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஜூலை மாதம் 13ஆம் திகதி … Read more

இந்திய அணியின் இடைக்கால பயிற்சியாளராக விவிஎஸ் லக்ஷ்மன் நியமனம்

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் 2022 ஆசிய வெற்றிக்கிண்ண இந்திய அணியின் இடைக்கால தலைமை பயிற்சியாளராக VVS லக்ஷ்மண் நியமிக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. ஆசிய வெற்றிக்கிண்ண கிரிக்கெட் போட்டி இம்மாதம் 27ஆம் திதி ஐக்கிய அரபு எமிரேட்ஸில் துவங்க உள்ளது. அதன் மறுநாள் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி நடைபெற உள்ளது. இந்த நிலையில் ஆசிய வெற்றிக்கிண்ண போட்டியில் பங்கேற்க உள்ள அணிகள் ஐக்கிய அரபு எமிரேட்ஸ்க்கு … Read more

பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக்கொள்ளுமாறு சுகாதார அமைச்சு வலியுறுத்தல்

கொரோனா வைரசினால் ஏற்படக்கூடிய இறப்புக்களை குறைக்க, Covid-19 க்கு எதிரான பூஸ்டர் தடுப்பூசிகளை பெறுவதன் முக்கியத்துவத்தை சுகாதார அமைச்சு மீண்டும் வலியுறுத்தியுள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று காலை (25) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது தலைமை தொற்றுநோயியல் நிபுணர் டொக்டர் சமித்த கினிகே தெரிவிக்கையில், கொவிட் -19 அபாயம் தற்போது அதிகரித்துள்ளதாகவும், பூஸ்டர் டோஸ்க்களை பெறாதவர்களை விரைவில் பெற்றுக் கொள்ளுமாறு பொதுமக்களை வலியுறுத்தியுள்ளார். Covid-19 பரவலால் நாட்டில் பாரிய பாதிப்பு ஏற்படவில்லை எனவும் எதிர்காலத்தில் புதிய வைரஸ் தொற்றுகளில் இருந்து … Read more