உலகின் மிகப் பெரிய பெஷன் சந்தையான மெஜிக் லாஸ் வேகாஸ் அமெரிக்காவில் இலங்கையின் ஆடை ஏற்றுமதியாளர்கள் வெற்றிகரமாக பங்கேற்பு  

2022 ஆகஸ்ட் 7 முதல் 10 வரை அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் மாநாட்டு மையத்தில் நடைபெற்ற ‘மெஜிக் லொஸ் வேகாஸ்’ ஆடை விற்பனை வர்த்தகக் கண்காட்சியில் ஒன்பது இலங்கை ஆடை ஏற்றுமதி நிறுவனங்கள் பங்கேற்றன. அமெரிக்கா மற்றும் வடக்கு மற்றும் தென் அமெரிக்க சந்தைகளை அணுகும் நிகழ்வில் உருவாக்கப்பட்ட ஏராளமான வணிக வாய்ப்புகளை நிறுவனங்கள் வெற்றிகரமாக பயன்படுத்தின. இது பல மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான நேரடியான சந்தை வாய்ப்புக்களைப் பெறுவதற்கு வழிவகுத்ததுடன், அமெரிக்காவை தளமாகக் கொண்ட … Read more

ஒதுக்கீட்டு (திருத்தச்) சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீடு மீதான ஆரம்ப உரை ஓகஸ்ட் 30ஆம் திகதி

ஜனாதிபதி கௌரவ ரணில் விக்ரமசிங்க அவர்கள் நிதி, பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சர் என்ற ரீதியில் 2021ஆம் ஆண்டு 30ஆம் இலக்க ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தைத் திருத்துவதற்கான ஒதுக்கீட்டு (திருத்தச்) சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீடு தொடர்பான ஆரம்ப உரை எதிர்வரும் 30ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவிருப்பதாக பாராளுமன்றத்தின் பதில் செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர தெரிவித்தார். அடுத்தவாரத்துக்கான பாராளுமன்ற அலுவலல்கள் குறித்துக் கலந்துரையாடுவதற்காக இன்றையதினம் (24) முற்பகல் பிரதி சபாநாயகர் கௌரவ அஜித் ராஜபக்ஷ தலைமையில் … Read more

தண்டனை சட்டக்கோவை திருத்தத்திற்கான சட்டமூலம் ஜனாதிபதியிடம் கையளிப்பு

இலங்கையில் உள்ள LGBTQ+ சமூகங்களின் உரிமைகளை பாதுகாக்கும் நோக்கில் தண்டனை சட்டக்கோவை திருத்தத்திற்கான சட்டமூலம் இன்று (24) பாராளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான திரு.பிரேமநாத் சி.தொலவத்தவினால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களிடம் கையளிக்கப்பட்டது. தண்டனை சட்டக்கோவை (திருத்தம்) (19வது சட்டம்) தண்டனை சட்டக்கோவையில் திருத்தம் செய்வதற்கான இந்த சட்டமூலம் நேற்று (23) சட்டத்தரணி பிரேமநாத் சி தொலவத்தவினால் தனிநபர்  பிரேரணையாக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. LGBTQ + சமூகம் தொடர்பாக இந்நாட்டில் மிகவும் பின்தங்கிய சிந்தனை காணப்படுவதோடு, இதன் காரணமாக, … Read more

பாரா மெய்வல்லுனர் போட்டியில் இலங்கைக்கு 11 பதக்கங்கள்

இந்தியாவில் நடைபெற்ற 4 ஆவது இந்திய பகிரங்க தேசிய பாரா மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டியில் இலங்கை அணி 11 பதக்கங்களை வென்றுள்ளது. இந்திய பாரா ஒலிம்பிக் சங்கத்தினால் 4 ஆவது முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட தேசிய பாரா மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடர் 18 ஆம், 19 ஆம் திகதிகளில் பெங்களூருவில் நடைபெற்றது. இப்போட்டியில் இலங்கையிலிருந்து 9 வீர, வீராங்கனைகள் பங்குகொண்டனர். இதில் பெண்களுக்கான T47 நீளம் பாய்தல் போட்டியில் பங்குகொண்ட ஜனனி தனங்ஜனி, 5.01 மீட்டர் தூரம் … Read more

ஜப்பானியத் தூதுவர் ஜனாதிபதியை சந்தித்தார்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கும் ஜப்பானிய தூதுவர் மிசுகோஷி ஹிடேகிக்கும் (Mizukoshi Hideaki) இடையிலான சந்திப்பொன்று, இன்று (24) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. ஜப்பானியப் பேரரசர் ஹிரோனோமியா நரஹிட்டோவின் (Hironomia Narahito) வாழ்த்துகளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்குத் தெரிவித்த ஜப்பானியத் தூதுவர், ஜனாதிபதியுடன் சிநேகபூர்வ உரையாடலில் ஈடுபட்டார். முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தன அவர்கள், “சென்பிரான்சிஸ்கோ சமாதான மாநாட்டில்” உரையாற்றி, 70 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு ஜப்பான் தூதரகமும் இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனமும் இணைந்து … Read more

4 பொலிஸார் கைது

கொள்ளைச் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 4 பொலிஸார் தற்காலிகமாக பதவில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர். கையடக்கத் தொலைபேசி மற்றும் தங்கச் சங்கிலியை திருடிய குற்றச்சாட்டில் நேற்று முன்தினம் (22) கொட்டாவ பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த 4 பொலிஸ் உத்தியோகத்தர்களையும் பொலிஸார் கைது செய்துள்ளனர் . இந்த நான்கு பேரையும் நுகேகொட மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் பணியிடை நீக்கம் செய்துள்ளது.

கோட்டாபயவின் வருகையால் ரணிலுக்கு ஏற்படும் கடும் நெருக்கடி

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் வருகை, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு மிகவும் நெருக்கடியான நிலையினையே ஏற்படுத்தும் செயலாகவே இருக்கும் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. சீர்குலைந்துள்ள இலங்கையின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் கடினமான பணியை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஏற்கனவே எதிர்கொண்டுள்ளார். இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் வருகை, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு மிகவும் நெருக்கடியான நிலையினையே ஏற்படுத்தும். சர்வதேச நாணய நிதியம் “சர்வதேச நாணய நிதியத்தின் பிணை எடுப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதற்குச் சில காலங்கள் எடுக்கலாம். … Read more

இந்தியாவில் ,புதிதாக 10,649 பேருக்கு கொரோனா பாதிப்பு

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 10,649 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில் இன்று மீண்டும் 10 ஆயிரத்திற்கு மேல் பதிவாகியுள்ளது.இது தொடர்பாக இந்திய மத்திய சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 10 ஆயிரத்து 649 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதன் மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4 கோடியே … Read more

சம்பளம் இல்லா விடுமுறை! அரச ஊழியர்கள் தொடர்பில் வெளியான சுற்றறிக்கை

அரச நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு சம்பளமில்லாத வெளிநாடு செல்வதற்கான விடுமுறையை பெற்றுக் கொள்வது தொடர்பான சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பான சுற்றறிக்கை திறைசேரி செயலாளர் மஹிந்த சிறிவர்தனவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ளது. அரச ஊழியர்கள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம் இதேவேளை அரச ஊழியர்களை இன்று முதல் வழமை போன்று பணிக்கு அழைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கான சுற்றறிக்கை திறைசேரியின் செயலாளரால் அரச நிறுவனங்களின் பிரதானிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. எரிபொருள் நெருக்கடி காரணமாக சில மாதங்களாக அரச ஊழியர்கள் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் … Read more

வெளிநாட்டு தொழிலுக்காக செல்வோருக்கு கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ள விசேட கருமபீடம்

வெளிநாட்டு தொழிலுக்காக செல்வோர் விரைவில் தமது கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ள வசதியாக குடிவரவு திணைக்களத்தில் விசேட கருமபீடம் திறக்கப்பட்டுள்ளது. இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மற்றும் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளுடன் கடந்த வாரம் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து இந்த விசேட விசேட கருமபீடத்தை திறப்பதற்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார அங்கீகாரம் அளித்திருந்தார் முன்னேடி திட்ட நடவடிக்கைகளில் இருந்து பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில், வேலைவாய்ப்புக்காக வெளிநாடு செல்ல விரும்பும் அனைத்து இலங்கையர்களுக்கும் வசதியாக நேற்று … Read more