இமாச்சலப்பிரதேசத்தில், பலத்த மழை, வெள்ளப்பெருக்கு

இந்திய மாநிலங்களான உத்தரகாண்ட், ஹிமாச்சல் பிரதேசம், ஜம்மு காஷ்மீர், அஸ்ஸாம் முதலான வட மாநிலங்களில் கனமழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மலைப் பிரதேச மாநிலமான ஹிமாச்சல் பிரதேசத்தில் சம்பா மாவட்டத்தில் பனெட் என்ற கிராமத்தில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் இன்று அதிகாலை 4.30 மணி அளவில் வீடு ஒன்று இடிந்து விழுந்தது. இதில் வீட்டிற்குள் இருந்த 3 பேர் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, மாநில … Read more

அனைவரையும் ஒன்றிணைத்து நாட்டைக் கட்டியெழுப்புவதே எனது நோக்கம் – ஜனாதிபதி தெரிவிப்பு

உலகில் ஏனைய நாடுகள் வெற்றிகளுடன் நாளுக்கு நாள் முன்னோக்கிச் செல்லும் போது, ​​நாம் ஒன்றிணைந்து செயற்படாததால் எமது நாடு பின்னோக்கிச் செல்வதாகவும், அந்த வரலாற்றுத் தவறை திருத்தி நாட்டின் முன்னேற்றத்திற்காக அனைவரையும் ஒன்றிணைப்பதே எனது நோக்கமாகும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் தெரிவித்தார். இன்று (20) வரலாற்று சிறப்புமிக்க அனுராதபுரத்துக்குச் சென்று சமய வழிபாடுகளில் ஈடுபட்ட ஜனாதிபதி அவர்கள், பிற்பகல் அனுராதபுரம் சம்புத்த ஜயந்தி மகா விகாரைக்கு சென்று வடமத்திய மாகாண பிரதம சங்கநாயக கலாநிதி … Read more

விவசாயத்தில் அதிக கவனம் செலுத்தி பொருளாதார பிரச்சனைகளக்குத் தீர்வு காணவேண்டும் – ஜனாதிபதி அனுராதபுரத்தில் தெரிவிப்பு  

பெரும்போகத்திற்குத் தேவையான உரங்களை எந்தத் தாமதமும் இன்றி விவசாயிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் தெரிவித்தார். வடமத்திய மாகாண பிரதம சங்கநாயக கலாநிதி வண. பல்லேகம சிறினிவாச  தேரருடன் இன்று (20) முற்பகல் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி அவர்கள் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் இன்று வரலாற்று சிறப்புமிக்க ஜய ஸ்ரீ மஹா போதியை வழிபட்டு ஆசி பெற்றதோடு, வடமத்திய மாகாண பிரதம சங்கநாயக கலாநிதி அதி வணக்கத்திற்குரிய பல்லேகம … Read more

ஜப்பான் தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் மரியாதை நிமித்தம் இராணுவத் தளபதியை சந்திப்பு

இலங்கைக்கான ஜப்பான் தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கெப்டன் யுயுகி யோகோஹரி நேற்று (19) இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களை இராணுவத் தலைமையகத்தில் மரியாதை நிமித்தம் சந்தித்தார். சுமுகமான சந்திப்பின் போது பல கருத்துக்களை பரிமாறிக்கொண்டதுடன் பிரச்சினைக்குரிய பொதுவான விடயங்கள் விவாதிக்கப்பட்டது. மேலும் லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் மற்றும் பாதுகாப்பு ஆலோசகர் கெப்டன் யுயுகி யோகோஹாரி ஆகியோர் இந்த சுமூக சந்திப்பின் போது இரு நாட்டு இராணுவத்திற்கும் இடையில் நிலவும் நீண்டகால … Read more

நாடு எதிர்கொண்டுள்ள சவாலை அச்சமின்றி ஏற்றுக்கொண்ட ஜனாதிபதிக்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் – மகா சங்கத்தினர் வலியுறுத்தல்  

நாட்டைப் பற்றிய பொறுப்பில் இருந்து அனைவரும் விலகியிருந்த வேளையில், நாட்டைப் பற்றி சிந்தித்து, அதன் பாரிய பொறுப்பை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கு,  மகா சங்கத்தினரின் முழுமையான ஆசிர்வாதம் நிச்சயமாகக் கிடைக்குமென்று, ருவன்வெலி சேய விகாரை, சியாமோபாலி மகா நிகாயவின் மல்வத்து தரப்பு, ரஜரட்ட நுவர கலாவியே பிரதான சங்கநாயக்க  வண. பல்லேகம ஹேமரதன தேரர் தெரிவித்தார். இன்று (20) முற்பகல் வரலாற்று சிறப்புமிக்க அனுராதபுர ருவன்வெலி மஹா சேய விகாரைக்குச் சென்று சமய வழிபாடுகளில் … Read more

பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கும் பாகிஸ்தான்உயர்ஸ்தானிகருக்கிடையில் சந்திப்பு

பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கும் பாகிஸ்தான்  உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் உமர் பாரூக் புர்க்கிக்கும் இடையிலான சந்திப்பு 17.08.2022 அன்று கொழும்பில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றது. நீண்ட மற்றும் வலுவான நட்புறவைக் கொண்ட தனது நாட்டின் ஒத்துழைப்பை இலங்கை தொடர்ந்தும் பெறும் என உயர்ஸ்தானிகர் உறுதிப்படுத்தினார். இலங்கையின் இறையாண்மையைப் பாதுகாப்பதற்காக சர்வதேச மேடைகளில் பாகிஸ்தான் தொடர்ந்து பிரசன்னமாகியமைக்கு பிரதமர் தனது நன்றியைத் தெரிவித்தார். வர்த்தகம், முதலீடு, கல்வி, தொழில்நுட்பம், சுற்றுலா மற்றும் கால்நடைப் பண்ணைகள் மற்றும் பால் பண்ணைகள் … Read more

இலங்கை வரும் வெளிநாட்டவர்களுக்கு புதிய விசா நடைமுறை

சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் நோக்கத்துடன், சுற்றுலாப் பயணிகளுக்கு ஓராண்டு விசா வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. அத்துடன் வெளிநாட்டவர்கள் இலங்கையில் சொத்துக்களில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகளை வழங்கவும், 250,000 அமெரிக்க டொலர்களை முதலீடு செய்தால் 10 ஆண்டு விசா வழங்கவும் அரசாங்கம் முடிவு செய்துள்ளது. புதிய விசா நடைமுறை 150,000 அமெரிக்க டொலர் முதலீட்டாளருக்கு 5 வருட விசா வழங்கப்படும், மேலும் கொழும்பிற்கு வெளியே உள்ள சொத்துக்களை முதலீடு செய்பவருக்கு 75,000 அமெரிக்க டொலர்களுக்கு 5 ஆண்டுகள் வரை … Read more

அரசியல் ரீதியாக நாமலுக்கு ஏற்பட்டுள்ள கடும் எதிர்ப்பு

நாமல் ராஜபக்சவுக்கு எதிராக அரசியல் ரீதியாக கடும் எதிர்ப்பு எழுந்துள்ளதாக, பொதுஜன பெரமுன கட்சியின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன. நாமல் ராஜபக்ச, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, சனத் நிஷாந்த, ரோஹித அபேகுணவர்தன ஆகியோருக்கு அமைச்சுப் பதவிகள் வழங்குவது தொடர்பில் யோசனைகள் முன்வைக்கப்பட்டதற்கு அரசாங்கத்துக்குள் எதிர்ப்பு எழுந்துள்ளது. நாமலுக்கு எதிர்ப்பு பொதுஜன பெரமுன கட்சிக்குள் இருந்தே எதிர்ப்பு வெளியிடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்க விடயமாகியுள்ளது. மக்களின் கோபத்திற்குள்ளான நபர்களின் திருப்திக்காக மீண்டும் அமைச்சு பதவிகள் வழங்கப்படவுள்ளது. இந்த செயற்பாடு  மீண்டும் மக்களின் கோபத்தை … Read more

கொழும்பில் சில பகுதிகளில், இன்று நீர் விநியோகம் இடைநிறுத்தம்

கொழும்பு மா நகர சபை எல்லைக்கு உட்பட்ட சில பகுதிகளில், இன்று (20) நீர் விநியோகம் இடைநிறுத்தப்படவுள்ளதாக , தேசிய நீர் வழங்கல், வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. அத்தியவசிய மேம்படுத்தல் பணிகளுக்காக, இவ்வாறு நீர் விநியோகத் தடை மேற்கொள்ளப்படவுள்ளதாக, சபை குறிப்பிட்டுள்ளது. அதற்கமைய, கொழும்பு – 05 மற்றும் 06 ஆகிய பகுதிகளில், இன்று சனிக்கிழமை (20) இரவு 11 மணி முதல், ஞாயிற்றுக்கிழமை (21) காலை 9 மணி வரை, 10 மணித்தியால நீர் விநியோகத் … Read more

மூவரை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ள பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் கூட்டமைப்பின் 3 பேரை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இது தொடர்பாக பொலிஸ் ஊடக பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் நேற்று முன்தினம் (18) மாலை கொழும்பில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது கைது செய்யப்பட்ட 16 பேர் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் நேற்று (19) ஆஜார் படுத்தப்பட்டனர். இதன் போது 15 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டனர். ஒருவர் 2022.08.26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் … Read more