மேலுமொரு மசகு எண்ணெய் கப்பல்…..

இறக்குமதி செய்யப்பட்ட மசகு எண்ணெய் கப்பலில் மசகு எண்ணெய் தரையிறக்கும் பணி இன்று (18) ஆரம்பிக்கப்பட உள்ளது என்று மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. 100,000 மெட்ரிக் டொன் மசகு எண்ணெ அடங்கிய குறித்த கப்பல் கடந்த 13ஆம் திகதி இரவு நாட்டை வந்தடைந்தது. அதன் ஆய்வக பரிசோதனையின் பின்னர், இன்று முதல் மசகு எண்ணெய் தரையிறக்கும் பணி ஆரம்பிக்கப்பட உள்ளது. இதன்படி, தற்போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் பணிகளையும் … Read more

ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகள் ஜனாதிபதியை சந்தித்தனர்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (18) பிற்பகல் இடம்பெற்றது. ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பில் ஐக்கிய நாடுகளின் ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியத்திற்கான அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்கான பெங்கொக் அலுவலகத்தின் பணிப்பாளர் டேவிட் மஸ்னெக்யன் கார் (David Mclachlan-Karr), ஐக்கிய நாடுகளின் நிரந்தர பிரதிநிதி ஹெனா சிங்கர் (Hanaa Singer) மற்றும் ஐக்கிய நாடுகளின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் அலுவலகத்தின் பிரதானி ஆண்ட்ரியாஸ் கர்பாதி (Andreas Karpati) ஆகியோர் கலந்து … Read more

பாராளுமன்ற உறுப்பினர் வீட்டுக்குள் நுழைந்த நபர் கைது

பாராளுமன்ற உறுப்பினர் கோகிலா ஹர்ஷனி குணவர்தனவின் வீட்டிற்குள் நுழைந்து அவரது வீடு மற்றும் அலுவலகத்திற்கு தீ வைத்த குற்றச்சாட்டில் 25 வயதுடைய இளைஞரை கம்பஹா நள்ள பொலிஸார் கைது செய்துள்ளனர். கடந்த மே மாதம் 9 ஆம் திகதி பாராளுமன்ற உறுப்பினரின் வீடு, அவரது அலுவலகம் மற்றும் அவரது சகோதரரின் வீடுகளுக்குள் நுழைந்து சொத்துக்கள் மற்றும் வாகனங்களுக்கு தீ வைத்த சந்தேக நபர் (16.08.2022) லொலுவாகொடவில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கோட்டாபயவுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை

மக்கள் எதிர்ப்பின் காரணமாக நாட்டை விட்டு வெளியேறிய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மீண்டும் அமெரிக்காவில் வசிப்பதற்கு முயற்சித்து வருகின்றார். அதற்கமைய, அவர் அமெரிக்க கிரீன் கார்ட் லொத்தர் மூலம் வாய்ப்பு பெற முயற்சித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அமெரிக்க குடியுரிமை கோட்டாபயவின் மனைவியான அயோமா ராஜபக்ஷ இன்னும் அமெரிக்க குடியுரிமையுடன் இருப்பதால், முன்னாள் ஜனாதிபதி கிரீன் கார்ட் லொட்டரிக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர். இந்நிலையில் அமெரிக்காவில் உள்ள அவரது சட்டத்தரணிகள் இதற்கான விண்ணப்ப நடைமுறையை கடந்த … Read more

வட்டி வீத அதிகரிப்பு தொடர்பில் இலங்கை மத்திய வங்கி எடுத்துள்ள தீர்மானம்

நிலையான வைப்பு வசதி வீதம் மற்றும் நிலையான கடன் வசதி வீத அதிகரிப்பு தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இலங்கை மத்திய வங்கியின் கொள்கை வட்டி வீதங்களின் தற்போதுள்ள மட்டத்தை அதிகரிக்காமல் அல்லது மாற்றியமைக்காமல் பேண தீர்மானிக்கப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை கூட்டம் நேற்றைய தினம் இடம்பெற்றிருந்தது. இதன்போது குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது. மாற்றியமைக்காது பேண தீர்மானம் இதன்படி, நிலையான வைப்பு வசதி வீதம் (SDFR) மற்றும் நிலையான கடன் … Read more

இலட்சக்கணக்கான வெளிநாட்டவர்கள் இலங்கைக்கு வரலாம்! வெளியான அறிவிப்பு

இந்த வருடம் 10 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.  சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் தம்மிக்க விஜேசிங்க இதனை தெரிவித்துள்ளார். டிஜிட்டல் முறையில் ஊக்குவிப்பு வேலைத்திட்டம் நேற்று (17) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்காக டிஜிட்டல் முறைகளைப் பயன்படுத்தி ஊக்குவிப்பு வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்தார். இதேவேளை, இலங்கைக்கு மீ்ண்டும் அதிகளவான சுற்றுலாப் பயணிகள் வருகைத் தருவதாக … Read more

வரலாற்றில் முன்னொருபோதும் இல்லாதவாறு தேசிய பாதுகாப்புக்கு அதிக கவனம் செலுத்தப்படுகிறது – பாதுகாப்பு செயலாளர்

இலங்கையின் தேசிய பாதுகாப்பு என்பது சுதந்திரத்திற்குப் பின்னர் நாட்டின் வரலாற்றில் முன்னொருபோதும் இல்லாதவாறு அதிக கவனத்தை கொண்டதாக காணப்படுவதாக பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன நேற்று (ஆகஸ்ட் 17) தெரிவித்தார். நாட்டில் காணப்படும் சகல விதமான அச்சுறுத்தல்களுக்கு முகங்கொடுக்க வேண்டி அவதானத்துடன் இருக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார். தேசிய பாதுகாப்பு கல்லூரி (NDC) ஆரம்பிக்கப்பட்ட பின்னர் முதன் முறையாக நடத்தப்படும் “ஆராய்ச்சிக் கருத்தரங்கம் – 2022′ வின் அங்குரார்ப்பண நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துக்கொண்டு பாதுகாப்புச் … Read more

இலங்கையில் வீடுகளின் விலைகள் வரலாறு காணாத அளவில் உயர்வு

இலங்கையில் அடுக்கு மாடி குடியிருப்பு வீடுகளில் விலை 45.17 வீதம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. LankaPropertyWeb ஆல் சமீபத்தில் வெளியிடப்பட்ட வீட்டு விலைச் சுட்டெண்ணின் இரண்டாம் காலாண்டு (2Q) தரவுகளில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இதே காலப்பகுதியுடன் ஒப்பிடும் போது இந்த விலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பணவீக்கம், மூலப்பொருட்களின் பற்றாக்குறை மற்றும் அதிகரித்த கட்டுமான செலவுகளே இவ்வாறு விலை அதிகரிப்புக்கு பங்களிப்பு செய்துள்ளதாக அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மூலப்பொருட்களின் விலை உயர்வு அமெரிக்க டொலருக்கு நிகரான … Read more