ஈரானில் முதல் முறையாக ஒருவருக்கு குரங்கு அம்மை

ஈரான் நாட்டில் முதல் முறையாக ஒருவருக்கு குரங்கு அம்மை நோய் பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக உலக நாடுகளை அச்சுறுத்தி வந்த கொரோனா தொற்று, தற்போது கட்டுக்குள் வந்துள்ளது. இந்நிலையில், ஆப்பிரிக்காவில் புதிதாக உருவான குரங்கம்மை நோய், தற்போது உலகம் முழுவதும் பரவி வருகிறது. இதன் காரணமாக பல நாடுகளில் தீவிர கண்காணிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இங்கிலாந்து, ஸ்பெயின், போர்ச்சுகல், கனடா, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் குரங்கு அம்மை … Read more

இந்திய பெருங்கடலில் ஏகபோக உரிமை கோர முடியாது: ஜெய்சங்கர் கருத்து

இந்திய பெருங்கடலில் இந்தியா தனது தேசிய நலன்களை பாதுகாக்க வேண்டும். எனினும் பிராந்தியத்தில் ஏகபோக உரிமை கோர முடியாது என்று வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ள சீன கப்பல் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இந்திய பெருங்கடலில்  செல்வாக்கை விரிவுபடுத்த முயற்சி இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “இந்திய பெருங்கடலில் தங்கள் செல்வாக்கை விரிவுபடுத்த பல நாடுகள் தீவிரமாக முயன்று வருகின்றன. இந்தியாவின் அண்டை நாடுகள் கலாசார ரீதியாக திடகாத்திரமாகவும், … Read more

பதுளையில் கைப்பை தயாரிப்புக்கு தொழில்நுட்ப பயிற்சி

தேசிய தொழில் முயற்சி அபிவிருத்தி அதிகார சபை மற்றும் கைத்தொழில் அமைச்சின் நிதியுதவியுடன் பதுளை ஊவபரணகம பிரதேச செயலகத்தில் கைப்பைகள் தயாரிப்பு தொடர்பான பயிற்சி பட்டறை அண்மையில் இடம்பெற்றது. இப்பயிற்சி மூன்று நாட்கள் இடம்பெற்றன. வங்கிக் கடன் பெறும் வசதியின் கீழ் சுய தொழிலில் ஈடுபட வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மாவட்ட தொழில் முனைவோர் அலுவலர் பி.வி.சி.எம். திருமதி வசந்தி மற்றும் ஊவபரணகம தொழில்முனைவோர் ஒருங்கிணைப்பு அதிகாரி ஈ.எம். திருமதி நிலாந்தி ஏக்கநாயக்கவின் ஒருங்கிணைப்பின் கீழ் இந்த பயிற்சி … Read more

இலங்கையில் பரந்துபட்டளவில் கொத்தடிமைத்தனம் : ஐ.நா ஆழ்ந்த கவலை

ஐக்கிய நாடுகள் சபையின் உயர்மட்ட அறிக்கையொன்று, இலங்கை அடிமைத்தனத்தை ஒழிக்கத் தவறியுள்ளதாகக் கண்டறிந்துள்ளது. சர்வதேச சட்டம் மற்றும் மனித உரிமைகள் பற்றிய ஜப்பானிய அறிஞரும் ஐ.நா வின் விசேட அறிக்கையாளர் டொமோயா ஒபோகாட்டா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.  அவரது அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டதாவது,  ”பெருந்தோட்டத் துறை, ஆடை உற்பத்தி ஆகிய தொழில்களில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு அப்பாற்பட்டு போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் குறிப்பாக வீட்டுப் பணியாளர்களாகவும் பணிப்பெண்களாகவும் பணிபுரியும் வறுமையில் வாடுபவர்கள் வரை பல மட்டங்களில் பரவலாக காணப்படுகின்றது. … Read more

தற்போதைய முன்னேற்றங்கள் குறித்து இராஜதந்திரிகளுக்கு வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் விளக்கம்

ஜெனிவாவில் இடம்பெறவுள்ள மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது கூட்டத் தொடருக்கு முன்னதாக தற்போதைய அபிவிருத்திகள் குறித்து விளக்கமளிக்கும் முகமாக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி, 2022 ஆகஸ்ட் 15, திங்கட்கிழமை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் வைத்து கொழும்பை தளமாகக் கொண்ட தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்களை சந்தித்தார். சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்தினம், வெளியுறவுச் செயலாளர் அருணி விஜேவர்தன மற்றும் நிதிச் செயலாளர் மஹிந்த சிறிவர்தன ஆகியோரும் இந்த விளக்கமளிக்கும் நிகழ்வில் பங்கேற்றனர். அரசியலமைப்புக்கு அமைவாக … Read more

ரணில் அரசாங்கத்திற்கு நிம்மதியளிக்கும் தகவல் வெளியானது! பெருகும் அந்நிய செலாவணி

இலங்கைக்கு மீ்ண்டும் அதிகளவான சுற்றுலாப் பயணிகள் வருகைத் தருவதாக  அறிவிக்கப்பட்டுள்ளது.  சுற்றுலா மேம்பாட்டு ஆணையம் இதனை தெரிவித்துள்ளது. இதனால் இம்மாதம் முதல் இரண்டு வாரங்களில் இலங்கைக்கு வந்துள்ள சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 17000ஐத் தாண்டியுள்ளது. மே 9 கலவரம்! இராணுவத்திற்கு உத்தரவிட விரும்பாத கோட்டாபய  நாட்டில் நிலவும் பொருளாதார மற்றும் அரசியல் ஸ்திரமின்மை காரணமாக சுற்றுலாப் பயணிகளின் வருகை படிப்படியாகக் குறைந்தது. சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு ஆனால் நாடு மீண்டும் நிலைபெறத் தொடங்கியதால், சுற்றுலாப் பயணிகளின் … Read more

ஆழமாக ஆய்வு செய்து பாதுகாப்பு அமைச்சின் அனுமதியுடனேயே தடைகள் நீக்கப்பட்டன!

அண்மையில் சர்ச்சையை ஏற்படுத்திய 2022-08-01 திகதியிடப்பட்ட 2291/02 இலக்க வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்ட 2012 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க ஐக்கிய நாடுகளின் 04 (7) விதிமுறையின் கீழ் பெயர் குறிப்பிடப்பட்ட நபர்கள் மற்றும் அமைப்புக்களின் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட நடைமுறைகள் தொடர்பான பின்னணி மற்றும் தெளிவுபடுத்தல். தடை நீக்கத்தின் சட்ட ஏற்பாடுகளும் பின்னணியும் ஐக்கிய நாடுகளின் சாசனத்தின் VII அத்தியாயத்தின் கீழ் செயல்படும் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு பேரவை 2001 செப்டம்பர் … Read more

வேலை நிமித்தம் தென் கொரியா செல்லவுள்ள இலங்கையர்களுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் அறிவிப்பு

தென் கொரியாவிற்கு வேலைவாய்ப்பிற்காக செல்லவுள்ளோருக்கு விசேட  அறிவித்தல் ஒன்றை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம்  வெளியிட்டுள்ளது. இதன்படி, தென் கொரியாவில் மீன்பிடித் துறையில் உள்ள  வேலை  வாய்ப்புகளுக்கான கொரிய மொழிப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் ஒன்லைனில் ஏற்றுக்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  மே 9 கலவரம்! இராணுவத்திற்கு உத்தரவிட விரும்பாத கோட்டாபய  எதிர்வரும் 22.08.2022 முதல் 26.08.2022 வரை  இதற்கான விண்ணப்பங்கள் இணையம் மூலமாக பெற்றுக்கொள்ளப்படும் என்று வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது. கடவுச்சீட்டு கட்டாயம்  இந்தப் பரீட்சைக்கு விண்ணப்பிப்பதற்கு கடவுச்சீட்டு … Read more