இலங்கையில் (16.08.2022),கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை
இலங்கையில் (16.08.2022),கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 195
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
இலங்கையில் (16.08.2022),கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 195
சர்வதேச முதலீடுகளை எதிர்பார்த்து புலம்பெயர் தமிழ் அமைப்புகள் மீதான தடையை சமகால அரசாங்கம் நீக்கியது என்பது சிலரது தனிப்பட்ட கருத்தாகும் என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன விளக்கமளித்துள்ளார். சர்வதேசத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள கொள்கை மற்றும் விதிமுறைகளுக்கு அமைவாகவே அரசாங்கம் சில புலம்பெயர் அமைப்புகள் மீதான தடையை நீக்கியுள்ளது என்றும் அவர் கூறினார். அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நேற்று (16) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மகாநாட்டில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்வியொன்றுக்குப் … Read more
கிளிநொச்சியிலிருந்து இந்தியாவின் தமிழ்நாட்டிற்குச் சென்று அகதியாகக் காலத்தைக் கழித்த பெண்ணொருவர் மிகப்பெரிய லொத்தர் பரிசு ஒன்றை வென்றுள்ளார். அபுதாபியில் நடைபெற்ற லொத்தர் சீட்டிழுப்பின் மூலம் இலங்கை நாணயத்தில் 9 கோடியே 82 லட்சம் ரூபாய் ரூபா பரிசாக வென்றுள்ளார். லொத்தர் சீட்டில் வெற்றி தமிழ்நாட்டில் இருந்த அவர், திருமணத்திற்குப் பிறகு, அபுதாபியில் வேலைக்குச் சென்றார். அங்கு வாங்கிய லொத்தர்சீட்டுக்கு ஒரு மில்லியன் அபுதாபி திர்ஹம் (9,82,52,277.32 ரூபாய்) கிடைத்துள்ளது. 80 லொத்தர் சீட்டுகளை வாங்கிய அருள்சேகரம் செல்வராணி … Read more
அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, இலங்கையைச் சூழவுள்ள கடற்பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு 2022 ஓகஸ்ட் 17ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது. மழை நிலைமை: நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. காற்று : நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில்காற்றானதுதென்மேற்குதிசையிலிருந்து வீசக் கூடுவதுடன் காற்றின் வேகமானதுமணித்தியாலத்துக்கு 20-30 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டைஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில்காற்றின் வேகமானது அவ்வப்போதுமணித்தியாலத்துக்கு 40-45 கிலோ மீற்றர் வரைஅதிகரிக்கக்கூடியசாத்தியம் காணப்படுகின்றது. கடல் நிலை: மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டைஊடாக பொத்துவில் வரையானகரையோரத்திற்கு அப்பாற்பட்டகடற்பரப்புகள் … Read more
ஐக்கிய நாடுகள் சபையின் 2012 ஆம் ஆண்டு விதிமுறைகள் எண். 01 இன் பிரகாரம் பயங்கரவாதத்திற்கு நிதியுதவியளித்தல் தொடர்பில் 577 நபர்கள் மற்றும் 18 அமைப்புகள் 2021 ஆம் ஆண்டில் கருப்புப்பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். வெளிவிவகார அமைச்சு, சட்டமா அதிபர் திணைக்களம், புலனாய்வு பிரிவுகள், சட்ட அமலாக்கள் பிரிவினர் மற்றும் இலங்கை மத்திய வங்கியின் நிதிப் புலனாய்வுப் பிரிவு அடங்கிய குழுவொன்றினூடாக பயங்கரவாதத்திற்கு நிதியுதவியளித்தல் தொடர்பில் மேற்குறிப்பிடப்பட்ட நபர்கள் மற்றும் அமைப்புகளின் செயற்பாடுகள் குறித்து கடந்த சில ஆண்டுகளாக … Read more
புலம்பெயர் மக்களின் ஆதரவை இலங்கைக்கு பெற்றுக்கொள்ளும் வகையில் இலங்கையில் புலம்பெயர் அலுவலகமொன்றை அமைப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். இந்நிலையில், நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் வெற்றியடைய அனைத்து தரப்பினரின் ஆதரவும் அவசியமானது எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (16) பிற்பகல் நடைபெற்ற “அறிஞர்களின் சங்கம் – 2022” விருது வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். அவசரகாலச் சட்டம் இந்த … Read more
வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்காக சாரதி அனுமதிப்பத்திரத்திற்கு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையல் எதிர்வரும் காலங்களில் சாரதி அனுமதி பத்திரம் மற்றும் வாகன கைமாற்றங்கள் உள்ளிட்ட அனைத்து கட்டணங்களையும் மறுசீரமைப்பு செய்ய மோட்டார் போக்குவரத்து திணைக்களம் அனுமதி கோரியுள்ளது. திணைக்களம் அதன் அனைத்து சேவைகளுக்கான கட்டணங்களைத் மறுசீரமைப்பதற்கு அமைச்சரின் அங்கீகாரத்தை பெற்றுள்ளது. இது விரைவில் வர்த்தமானியில் வெளியிடப்படும். 2009ஆம் ஆண்டு இறுதித் திருத்தம் செய்யப்பட்டது. 13 வருடங்களின் பின்னர் இந்தக் கட்டணங்களுக்கான மறுசீரமைப்பு இடம்பெறவுள்ளதாக ஆணையாளர் வசந்த என். … Read more
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்கள் வெளிநாட்டில் செய்யும் எந்தவொரு செலவுக்கும் அரசாங்கம் பணத்தை செலவிடுவதில்லை. அவ்வாறான அனைத்து செலவுகளும் முன்னாள் ஜனாதிபதியவர்களின் தனிப்பட்ட பணத்திலிருந்தே செலவிடப்படுகின்றது. வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிப்பதற்காக அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் இன்று (16) நடைபெற்ற ஊடக சந்திப்பில், முன்னாள் ஜனாதிபதியவர்களின் வெளிநாட்டு செலவுகள் தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் கேள்வியொன்றை எழுப்பினார். முன்னாள் மற்றும் தற்போதைய ஜனாதிபதிகளுக்கு சட்டத்தின் மூலம் சில வரப்பிரசாதங்கள் கிடைக்கின்றது என வெகுசன ஊடக … Read more
இலங்கையிலுள்ள சிறுவர் அபிவிருத்தி நிலையங்களுக்கு தேசிய வழிகாட்டுதல் மற்றும் குறைந்தபட்ச நியமங்களை அறிமுகப்படுத்துவது குறித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் கவனம் செலுத்தியுள்ளார். இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன் அதற்கு அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது. இலங்கையில் சிறுவர் அபிவிருத்தி நிலையங்களுக்கான தேசிய வழிகாட்டல் மற்றும் குறைந்தபட்ச தரநிலைகளை அறிமுகப்படுத்த ஜனாதிபதி நடவடிக்கை! எதிர்கால சிறுவர்களுக்கான தரமான சேவைகளை வழங்குவதற்காக சிறுவர் அபிவிருத்தி நிலையங்களுக்கு, மாகாண மட்டத்தில் உருவாக்கப்பட்ட வழிகாட்டுதல்கள் … Read more