Foreign Minister briefs the Diplomatic Corps on current developments

Minister of Foreign Affairs Ali Sabry met the Colombo-based Ambassadors and High Commissioners on Monday 15 August, 2022 at the Ministry of Foreign Affairs for a briefing on current developments ahead of the 51st session of the Human Rights Council in Geneva. Attorney General Sanjay Rajaratnam, Foreign Secretary Aruni Wijewardane and Finance Secretary Mahinda Siriwardana … Read more

திருத்தி அமைக்கப்பட்ட  வரவு செலவுத் திட்டம் : பொது மக்களுக்கு நிவாரண பொதி

நிவாரண பொதியொன்று எதிர்வரும் திருத்தி அமைக்கப்பட்ட  வரவு செலவுத் திட்ட முன்மொழிவு மூலம் பொது மக்களுக்கு வழங்கப்படும் என அரசாங்கம் உறுதியளித்துள்ளது. அமைச்சரவைப் பேச்சாளரான அமைச்சர் பந்துல குணவர்தன ,அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த  ஊடகவியலாளர் மாநாட்டில் பேசுகையில் இதுதொடர்பாக அறிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் இன்று (16) நடைபெற்ற இந்த நிகழ்வில் , உருளைக்கிழங்கு, வெங்காயம் மற்றும் பருப்பு போன்ற இறக்குமதி செய்யப்படும் உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிப்புக்கு ,ரூபாவிற்கு ஈடாக டொலரின் மதிப்பு … Read more

புலம்பெயர்ந்தவர்கள் என்றால் தமிழர்கள் மாத்திரமா..! சீன கப்பல் விவகாரம் மிகப் பெரிய ராஜதந்திர சிக்கல்

சீன கப்பலுக்கு இலங்கைக்குள் பிரவேசிக்க இடமளித்தமை சம்பந்தமாக மிகப் பெரிய ராஜதந்திர சிக்கலை எதிர்நோக்க நேரிடும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ச டி சில்வா தெரிவித்துள்ளார். இந்த சிக்கல் ஊடாக சர்வதேச தொடர்புகள் அழிந்து போகும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நேற்று இட்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். சீனாவின் கப்பல் தொடர்பான விவகாரம் – தீர்க்க முடியாத ராஜதந்திர சிக்கல் எதிர்காலத்தில் ஜெனிவா … Read more

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரியுடன் ஈரான் தூதுவர் ஹஷேம் அஷ்ஜசாதே சந்திப்பு

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரியை ஈரான் தூதுவர் ஹஷேம் அஷ்ஜசாதே 2022 ஆகஸ்ட் 15ஆந் திகதி வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் வைத்து சந்தித்தார். இரு நாடுகளுக்குமிடையிலான நீண்ட காலம் நீடித்த சுமுகமான உறவுகள் குறித்து குறிப்பிட்ட வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர், இலங்கை தற்போது எதிர்நோக்கி வரும் பொருளாதார வீழ்ச்சி மற்றும் நிலைமையை ஸ்திரப்படுத்துவதற்காக அரசாங்கம் இதுவரை முன்னெடுத்துள்ள உறுதியான நடவடிக்கைகள் குறித்து தூதுவருக்கு விளக்கினார். இலங்கை – ஈரான் இருதரப்பு உறவின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய தூதுவர் … Read more

75ஆவது சுதந்திர தின விழா: ஏற்பாடு செய்வதற்கு அமைச்சரவை உபகுழு நியமனம்

அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி இடம்பெறவுள்ள இலங்கையின் 75ஆவது சுதந்திர தின விழாவை ஏற்பாடு செய்வதற்கும், கண்காணிப்பதற்கும் அமைச்சரவை உபகுழு ஒன்று நியமிக்கப்படவுள்ளது. அரசாஙங்க தகவல் திணைக்களத்தில் இன்று (16) நடைபெற் அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான் கலாநிதி பந்துல குணவர்தன இது குறித்து விளக்கமளித்தார். அமைச்சரவை உப குழு தொடர்பாக நேற்று(15) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் பின்வருமாறு: 02. 2023 பெப்ரவரி மாதம் 04 … Read more

சர்ச்சைக்குரிய யுவான் வாங் கப்பலை வரவேற்கச் சென்ற முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர உள்ளிட்டவர்களுக்கு நேர்ந்த நிலை

இலங்கையை வந்தடைந்துள்ள சீனாவின் யுவான் வாங் – 5 கப்பலின் கப்டன் இலங்கை பிரதிநிதிகளை அவமதித்ததாக கருத்துக்கள் வெளியாகியுள்ளன.  கடந்த நாட்களில் சர்ச்சைக்குரிய விடயமாக பரவலாக பேசப்பட்ட இந்த கப்பல் இன்று இலங்கையின் அம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்தது.  கப்பலை வரவேற்பதற்கென்று முன்னாள் பொதுப் பாதுகாப்பு அமைச்சர்  ரியர் அட்மிரல் சரத் வீரசேகர உள்ளிட்ட குழுவினர் சென்றிருந்தனர்.  இதன்போது, அவரும் அவருடன் சென்ற குழுவினரும் அவமதிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.  இலங்கை பிரதிநிதிகள் அவமதிக்கப்பட்டனரா.. சரத் வீரசேகர, சீன கப்பலின் … Read more

இலங்கையில் உற்பத்தி செய்யப்பட்ட மூன்று மருந்து வகைகள் சந்தைக்கு

அரச மருந்து உற்பத்தி கூட்டுத்தாபனத்தினால் உற்பத்தி செய்யப்பட்ட மூன்று புதிய மருந்துகள் சந்தைக்கு விநியோகிக்கப்பட்டுள்ளன. தைரொக்ஸின் குறைபாட்டிற்கான மருந்து, வாயு அமிலத்தன்மைக்கான மருந்து மற்றும் வலி நிவாரணி மருந்தும் சந்தையில் விநியோகிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. நேற்று (15) இரத்மலானை அரச மருந்து உற்பத்திக் கூட்டுத்தாபன வளாகத்தில் இடம்பெற்ற விழிப்புணர்வு நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இதனைத் தெரிவித்தார்.

உள்நாட்டு மதுபான போதல்களுக்கான புதிய செயலி (App)

உள்நாட்டு மதுபான போத்தல்கள் சிறந்த தரத்தில் உள்ளதா என்பதை அறிந்து கொள்வதற்கான விசேட கணனி செயலி ஒன்றை (App) அடுத்த இரண்டு வாரங்களில் பாவனையாளர்களுக்கு அறிமுகப்படுத்த இலங்கை மதுவரி திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த கணனி செயலி (App) இதற்கு முன்னர் அறிமுகப்படுத்தப்படவிருந்த போதிலும், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அந்த செயற்பாடு தாமதமாdjhf என்று திணைக்களத்தின் ஆணையாளர் ஜே. குணசிறி தெரிவித்துள்ளார். இதன் மூலம், அதனை உற்பத்தி செய்த உற்பத்தியாளர் முதல், அனைத்து தகவல்களையும் வாடிக்கையாளர்களுக்கு அறிந்து … Read more

கொவிடை மிஞ்சும் டெங்கு…..

கடந்த சில ஆண்டுகளை விட இந்த ஆண்டு டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மூன்று மடங்கு அதிகரித்துள்ளதாக ரிட்ஜ்வே சிறுவர்கள் வைத்தியசாலையின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் ஜி. விஜேசூரிய குறிப்பிட்டுள்ளார். தற்போது டெங்கு நோயால் பாதிக்கப்பட்ட 50க்கும் மேற்பட்ட பிள்ளைகள் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன், டெங்கு இரத்தக்கசிவு நிலையில் உள்ள 8- 10 பிள்ளைகள் நாளாந்தம் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன், டெங்கு, கொவிட் மற்றும் வைரஸ் காய்ச்சல்கள் இந்த நாட்களில் பரவி … Read more

காலி முகத்திடலில் பொது நிகழ்வுகளை நடாத்துவதற்கு அனுமதி பெற வேண்டும்

நான்கு மாதங்களுக்கும் மேலாக போராட்டக்காரர்களால் பயன்படுத்தப்பட்ட காலி முகத்திடல் பகுதியை ,நகர அபிவிருத்தி அதிகார சபையின் அனுமதியுடன் மாத்திரமே பொது நிகழ்வுகளுக்கு பயன்படுத்த முடியும் என்று அதிகார சபை அறிவித்துள்ளது. அறிவிக்கப்பட்ட “போராட்ட மைதானம்” இனிமேல் இருக்காது. நகர அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் பிரசாத் ரணவீர இது குறித்து தெரிவிக்கையில்… “இந்த நிலம் நகர அபிவிருத்தி அதிகார சபைக்கும், அரசாங்கத்துக்கும் சொந்தமானது. இந்தப் பகுதியில் புட்களை நட்டி இருந்தோம். ஆனால் இந்தப் பகுதி மீண்டும் … Read more