இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசியப் பொருட்கள் பலவற்றின் விலை குறைந்தது

இறக்குமதி செய்யப்படும்  அத்தியாவசிய உணவுப் பொருட்கள் பலவற்றின் மொத்த விலை  குறைந்துள்ளது. புறக்கோட்டை மொத்த வியாபாரிகள் இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டனர்.   ஆனால் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் அரிசி உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலை உயர்ந்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளனர். உருளைக்கிழங்கு, பருப்பு, சீனி, செத்தல் மிளகாய், வெங்காயம் போன்ற இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் மொத்த விலை இன்றும்  குறைந்துள்ளதாக புறக்கோட்டை மொத்த விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர். இன்றைய விலைப் பட்டியல்.. இதன்படி, இறக்குமதி செய்யப்படும் ஒரு … Read more

இலங்கையிடம் டோனியர் விமானத்தை கையளித்த இந்தியா(Photos)

இந்தியாவுடனான ஒத்துழைப்பினால் ஏனைய துறைகளில் கிடைக்கப்பெற்ற பலன்களைப் போலவே, இலங்கை விமானப்படைக்கு டோனியர் பரிசளிக்கப்பட்டமையும் முக்கியமானதாக காணப்படுகின்றது  என இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே  தெரிவித்துள்ளார்.  கடல் பாதுகாப்பு குறித்த தேவைகளை இலங்கை நிவர்த்தி செய்வதற்கான ஒரு படியாகவும் இது கருதப்படுகின்றது எனவும் அவர் கூறினார்.  கையளிக்கப்பட்ட டோனியர் விமானம் இந்திய அரசாங்கத்தினால் இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட Dornier 228 விமானம் உத்தியோகபூர்வமாக இலங்கையிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இந்திய உயர்ஸ்தானிகரும் ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்க இன்று பிற்பகல் கட்டுநாயக்கவில் … Read more

ஒரு ஏக்கர் வயல் காணியில் 180 புசல் அறுவடை செய்யக்கூடிய புதிய வகை நெல்

ஒரு ஏக்கர் வயல் காணியில் 180 புசல் நெல்லை அறுவடை செய்யக்கூடிய புதிய வகை நெல் இனம் அம்பலாந்தொட்ட அரச நெல் ஆய்வுப்பிரிவினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அம்பலாந்தோட்டை நெல் ஆய்வு நிறுவனத்தின் பிரதிப் பணிப்பாளர் ஹர்ஷினி சிறிவர்தன இதுதொடர்பாக தெரிவிக்கையில்,இது AT-378 என அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. இது பச்சை அரிசி வகையைச் சேர்ந்ததாகும். மூன்றரை மாதங்களில் அறுவடை செய்யக்கூடியது. ஹம்பாந்தோட்டை, அனுராதபுரம்,பொலன்னறுவை, காலி, மாத்தறை, இரத்தினபுரி மாவட்டங்களில் இந்த ரக நெல்லை உற்பத்தி செய்ய முடியும் என்றார்.

நிபந்தனை அடிப்படையில் சீனக் கப்பலுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தகவல்

நிபந்தனை அடிப்படையில் சீனக் கப்பலுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  சீனாவின் யுவான் வாங் 5 ஆய்வு கப்பல் நாளைய தினம் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த கப்பல் எதிர்வரும் 22ம் திகதி வரையில் துறைமுகத்தில் நங்கூரமிட்டிருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது. ஆவணங்களை வழங்க நடவடிக்கை குறித்த சீன ஆய்வு கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்குள் பிரவேசிக்க வெளிவிவகார அமைச்சு அனுமதி வழங்கியுள்ளதுடன், அது தொடர்பிலான ஆவணங்களை ஹாபர் மாஸ்டரிடம் வழங்குவதற்கு வெளிவிவகார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. … Read more

காட்டு யானைகளினால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்பு

காட்டு யானைகளினால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்பு தொடர்பான சம்பவங்கள் பல பதிவாகியுள்ளன. இவற்றைத் தடுப்பதற்கு மின்வேலிகளை அனைத்து மாவட்டங்களிலும் அமைப்பதற்கு அடுத்த வருடம் நடவடிக்கை மேற்கொள்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்த பாதிப்புக்களை அடுத்தாண்டு முடிவதற்குள் முடிப்பதற்கு தேவையான சகல ஏற்பாடுகளையும் மேற்கொள்வதற்கு விவசாய சங்கங்க பிரதிநிதிகள்  மற்றும் விவசாயிகளுடன் கலந்துரையாடி உடன்பாட்டை எட்டுவதற்கான திட்டத்தை மேற்கொள்ள அமைச்சின் செயலாளருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் இந்த பாதிப்புக்கள் அதிகரித்துள்ளது.. 2019 … Read more

தபால் கட்டண மறுசீரமைப்பு: இன்று முதல் அமுல்

மறுசீரமைக்கப்பட்ட தபால் கட்டணங்கள் இன்று முதல் அமுல்படுத்தப்படுவதாக தபால் மாஅதிபர் ரஞ்சித் ஆரியரத்ன அறிவித்துள்ளார். அதற்கமைய, 15 ரூபாவாக உள்ள சாதாரண தபால் கட்டணம் 50 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. தபால் அட்டையின் விலை ரூ. 10 இலிருந்து ரூ. 20 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.தற்போது பெரும்பாலும் பொதுமக்களிடையே சாதாரண தபால் பயன்பாடு குறைவடைந்துள்ளதாகவும், தற்போது தபாலிடப்படும் 95மூ இற்கும் அதிக கடிதங்கள் வர்த்தக நிறுவனங்கள் மற்றும் அரசாங்கத்தினுடையதாக காணப்படுவதாக தபால் மா அதிபர் குறிப்பிட்டுள்ளார். அதற்கமைய, சாதாரண/ வர்த்தக நோக்கிலான … Read more

பணம் வைப்பு செய்ய சென்றவருக்கு காத்திருந்த அதிர்ச்சி

யக்கலமுல்ல பிரதேசத்தில் CDM இயந்திரத்தில் பணம் வைப்பு செய்ய சென்றவருக்கு ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமாக பணம் கிடைத்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. எம்.எம்.தஹநாயக்க என்ற நபர் தனது மகனுடன் பணம் வைப்பு செய்ய சென்ற சந்தர்ப்பத்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.  ஏற்கனவே பணம் வைப்பு செய்ய சென்ற நபர் அதனை உரிய முறையில் வைப்பு செய்யாமையினால் பணம் இயந்திரத்திலேயே சிக்கியிருந்தது. இந்த நிலையில் அடுத்தாக பணம் வைப்பு செய்ய சென்ற எம்.எம்.தஹநாயக்க இயந்திரத்தை அழுத்தும் போதும் … Read more

பங்களாதேஷில் எரிபொருள் விலை  அதிகரிப்பு

எரிபொருள் விலை அதிகரிப்பிற்கு எதிராக பங்களாதேஷில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. எரிபொருள் விலை அதிகரிப்பின் காரணமாக அத்தியாவசிய நுகர்வோர் பொருட்களின் விலை அதிகரித்திருப்பதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.  7 நாட்களுக்கு முன்னர் பங்களாதேஷ் அரசாங்கம் 51.7 வீதத்தினால் எரிபொருள் விலைகளை அதிகரித்திருந்தது. ரஷ்ய-உக்ரேன் யுத்த நெருக்கடி காரணமாக இந்த விலை அதிகரிப்பு இடம்பெற்றுள்ளது.

ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் பிரதி பிராந்தியப் பணிப்பாளர் கிறிஸ்டோப் பஹுவுடன் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் சந்திப்பு

தற்போது இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியத்திற்கான பிரதிப் பணிப்பாளர் கிறிஸ்டோப் பஹூட், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரியை 2022 ஆகஸ்ட் 12ஆந் திகதி சந்தித்தார். ஐந்து தசாப்தங்களுக்கும் மேலாக மற்றும் குறிப்பாக கடினமான காலங்களில் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட நிலையான ஆதரவை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி பாராட்டினார். ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்துடன் நெருக்கமான ஒத்துழைப்பைத் தொடருவதற்கு இலங்கை … Read more