இத்தாலி நியோஸ் விமான சேவை நிறுவனம்

இத்தாலியின் நியோஸ் விமான சேவை நிறுவனம் கொழும்பு மற்றும் இத்தாலிக்கு இடையில் வாராந்தம் விமான சேவைகளை ஆரம்பிப்பதற்குத் தயாராகியுள்ளது. இதற்கமைவாக வாரத்தில் 3 விமான சேவைகளை முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இத்தாலி சிவில் விமான சேவை அதிகார சபை இதற்கு அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடந்த வருடத்தை விட இந்த வருடத்தில் டெங்கு தொற்று அதிகரிப்பு

தேசிய டெங்கு ஒழிப்பு வாரம், இம்மாதம் இறுதி வாரத்தில் அறிவிக்கப்படும் என்று தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின்பணிப்பாளரான விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார். நாட்டில் இந்தவருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் சுமார் 50 ஆயிரம் பேர் டெங்கு தொற்றுக்கு இலக்காகிஉள்ளனர். கடந்த வருடத்தை விட இந்த வருடத்தில் டெங்கு தொற்று அதிகரித்துள்ளது. இதனைகருத்திற் கொண்டே தேசிய டெங்கு ஒழிப்பு வாரம் பிரகடனப்படுத்தப்படவுள்ளதாக, தேசியடெஙகுக ஒழிப்பு பிரிவின் பணிப்பாளரான விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர  கூறினார்.

22ஆவது திருத்தசட்டம்: சவாலுக்கு உட்படுத்துவதற்கு மக்களுக்கு தற்போது சந்தர்ப்பம்

அரசியலமைப்பின் 22ஆவது திருத்தசட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்களை சவாலுக்கு உட்படுத்துவதற்கு மக்களுக்கு தற்போதுசந்தர்ப்பம் உள்ளதாக, அமைச்சர் கலாநிதி விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். குறித்த சட்டமூலத்தில் பிரச்சினைகள் இருக்குமாயின் உயர் நீதிமன்றத்தை நாட முடியும் என்றும் அமைச்சர் கூறினார். கண்டியில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ஒன்றின் போதே இந்த விடயங்களை குறிப்பிட்டார். அரசியலமைப்பின் 22ஆவது திருத்த சட்டமூலம் கடந்த பத்தாம் திகதி பாராளுமன்றத்தில்சமர்ப்பிக்கப்பட்டது. இதன்படி, அன்றிலிருந்து ஏழு தினங்களுக்குள் அதனை சவாலுக்குஉட்படுத்துவதற்கு சந்தர்ப்பம் உள்ளது. அரசியலமைப்பிற்கு பொருத்தமற்ற வகையில் ஏதாவதொருவிடயம் சட்டமூலத்தில் … Read more

சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடுகள் – இந்திய அரசாங்கம் அறிவிப்பு

கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதை அடுத்து சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கு இந்திய அரசாங்கம் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.   சுதந்திர தினத்தை ஒட்டி பெரும் கூட்டம் கூடுவதை தவிர்க்குமாறு இந்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது. மேலும், சுதந்திர தின கொண்டாட்டங்களின் போது கொரோனா தொற்றை தடுப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் கண்டிப்பாக பின்பற்றப்பட வேண்டும் என்றும் அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது. இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைய உள்ளது. இந்தியா நாளை (15) தனது 76வது சுதந்திர … Read more

எரிபொருள் விநியோகத்தில் இன்று நள்ளிரவு முதல் கொண்டுவரப்படும் புதிய மாற்றம்

தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரம்(QR) முறையின்படி வழங்கப்பட்ட எரிபொருள் ஒதுக்கீடு இன்று  நள்ளிரவு முதல் புதுப்பிக்கப்படவுள்ளதாக எரிசக்தி அமைச்சு அறிவித்துள்ளது.  கடந்த வார தரவுகளை ஆராய்ந்த பின்னர், அடுத்த வாரத்திற்கான எரிபொருள் ஒதுக்கீட்டில் செய்யப்படவுள்ள மாற்றங்கள் இன்று அறிவிக்கப்படும். குறைந்த வரிசைகள்  இம்மாதம் முதலாம் திகதி முதல் QR முறைப்படி எரிபொருள் ஒதுக்கீட்டின் கீழ் வாகனங்களுக்கு எரிபொருள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.    இந்தநிலையில், எரிபொருள் ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட்டதையடுத்து, எரிபொருள் நிரப்பு நிலையங்களில் காணப்பட்ட வரிசை குறைந்துள்ளதாகவும் எரிசக்தி அமைச்சு … Read more

நாளை (14) முதல் வாரத்தில் 5 நாட்களுக்கு வழமை போன்று பாடசாலைகள்

நாளை (14) திங்கட்கிழமை முதல் வாரத்தில் 5 நாட்களுக்கு வழமை போன்று பாடசாலைகள் நடைபெறும். கல்வி அமைச்சர் தலைமையில் கடந்த 13 ஆம்திகதி இடம்பெற்ற கலந்துரையாடலின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக வாரத்தில் 5 நாட்களுக்கு வழமை போன்று பாடசாலைகளை நடத்துவதற்கான ஒழுங்குகளை  கல்வி அமைச்சு  மேற்கொள்ளது போக்குவரத்து சிரமம் உள்ள பிரதேசங்களில் உள்ள அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கான பொருத்தமான போக்குவரத்து திட்டத்தை தயாரிக்குமாறு அனைத்து மாகாண அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.. பாடசாலை வாரத்தில் போக்குவரத்துச் சிரமங்களினால் மேலும் … Read more