சீனக் கப்பல் யுவான் வாங் 5  

யுவான் வாங் 5 என்ற சீனக் கப்பல் தொடர்பிலான கருத்துக்களைக் குறிப்பிடுவதற்கு வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு விரும்புகின்றது. 2022 ஆகஸ்ட் 11-17 வரை ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் எரிபொருளை நிரப்பிக் கொள்ளும் நோக்கத்திற்காக சீனாவின் விஞ்ஞான ஆய்வுக் கப்பலான யுவான் வாங் 5 திட்டமிடப்பட்டுள்ளதாக 2022 ஜூன் 28ஆந் திகதிய இராஜதந்திரக் குறிப்பின் மூலம் கொழும்பில் உள்ள சீன மக்கள் குடியரசின் தூதரகம் அமைச்சிற்குத் தெரிவித்தது. குறித்த துறைமுக விஜயத்தின் போது பணியாளர்களின் சுழற்சி எதுவும் நடைபெறாத நிலையில், … Read more

ரஞ்சன் ராமநாயக்க குறித்து நீதி அமைச்சர்

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்குவதற்கான பரிந்துரைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக நீதி மற்றும் சிறைச்சாலைகள் விவகார அரசியல் மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனையை எதிர்பார்த்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். அறிவுறுத்தல்களைப் பெறுவது இது போன்ற ஒரு விஷயத்திற்கு அவசியமில்லை.கொலைக் குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் தொடர்பிலேயே ஆலோசனை பெற வேண்டும். வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்துவதற்காகவே சட்டமா அதிபரின் ஆலோசனையை நாடியதாக அமைச்சர் ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் மேலும் தனது … Read more

பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டெடுக்க வேண்டும் என்பதே எனது பிரார்த்தனை. புனித தந்ததாது உட்பட அனைத்து கடவுள்களின் ஆசிகள் அதற்கு பலமான சக்தியாக அமையும் , தலதா பெரஹர நிறைவு விழாவில் ஜனாதிபதி தெரிவிப்பு

பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுத்தாலும் அந்த நெருக்கடியில் இருந்து நாட்டை நிச்சயம் மீட்டெடுப்பதாக தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள், அதற்கு புனித தந்ததாது மற்றும் அனைத்து கடவுள்களின் ஆசிர்வாதம் பெரும் பலமாக இருப்பதாகவும் தெரிவித்தார். அனைத்து மக்களுக்கும் நல்வாழ்வைக் கொண்டுவரும் புதிய பொருளாதாரம் தொடர்பில் அனைவரும் புதிய நம்பிக்கைகளுடன் முன்னோக்கிச் செல்ல வேண்டும் எனவும் ஜனாதிபதி விக்கிரமசிங்க அவர்கள் குறிப்பிட்டுள்ளார். வரலாற்றுச் சிறப்புமிக்க தலதா பெரஹர விழா மற்றும் நான்கு மகா தேவாலயங்களின் வருடாந்த … Read more

போராட்ட செயற்பாட்டாளருக்கு அதிர்ச்சி – திடீரென கிடைத்த பல மில்லியன் ரூபாய்

தனக்கு தெரியாத நபர்களிடமிருந்து திடீரென தனது வங்கிக் கணக்கில் 50 இலட்சம் ரூபாய் வரவு வைக்கப்பட்டதாக, காலிமுகத்திடல் போராட்டத்தின் முக்கிய செயற்பாட்டாளர்களில் ஒருவரான ரெட்டா எனப்படும் ரதிது சேனாரத்ன தெரிவித்துள்ளார். இது தொடர்பில் சம்பந்தப்பட்ட வங்கியில் முறைப்பாடு செய்திருப்பதாகவும், எதிர்காலத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். திடீரென வந்த பெருந்தொகை பணம் தனது சமூகவலைத்தள கணக்கில் இது தொடர்பில் பதிவிட்டுள்ள அவர், போராட்டத்திற்காக தனிப்பட்ட பணத்தை செலவழித்ததாகவும், தனிப்பட்ட முறையில் எதனையும் பெறவில்லை எனவும் அவர் … Read more

இலங்கையில் மாற்றமடையும் அடையாள அட்டை

இலங்கையர்களின் அடையாள அட்டை புதிய மாற்றங்களுடன் அறிமுகம் செய்யப்படவுள்ளது. அதற்கமைய, பயோமெட்ரிக் தரவுகளை இணைத்து டிஜிட்டல் அடையாள அட்டை கட்டமைப்பை தயாரிக்கும் வேலைத்திட்டமும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதென ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக்க தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். பயோமெட்ரிக் தரவுகள் “தற்போது, ​​தேசிய அடையாள அட்டையைப் பெற பொதுவான தரவுகள் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. பயோமெட்ரிக் தரவுகளை இனிமேல் அடையாள அட்டைகளில் சேர்க்கப்பட வேண்டும். உதாரணமாக, நமது கைரேகைகள், … Read more

முட்டை ,கோழி இறைச்சிக்கான விலைகளை கட்டுப்படுத்த நடவடிக்கை

முட்டை மற்றும் கோழி இறைச்சிக்கான விலை அதற்கான செலவுகள் தொடர்பில் விரைவில் ஆய்வுகளை மேற்கொள்ள வர்த்தக , நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது. நாட்டில் தற்போது முட்டை மற்றும் கோழி இறைச்சி அதனுடன் தொடர்புடைய உற்பத்திப் பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளமையால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நலீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். முட்டை ஒன்றின் தற்போதைய விலை 50 ரூபாவுக்கும் மேற்பட்ட வகையில்விற்பனை செய்யப்படுவதுடன் ,ஒரு கிலோகிராம் கோழி இறைச்சி 1500 ரூபா வரை விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோர் … Read more

கொழும்பிலிருந்து பதுளைக்கு 'எல்ல ஒடெஸி சொகுசு ரயில்

கொழும்பிலிருந்து பதுளைக்கு, இன்று முதல் சொகுசு ரயில், சேவையில் ஈடுபடவுள்ளதாக, போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. கொழும்பிலிருந்து பதுளைக்கு, வார இறுதியில் சொகுசு ரயிலை சேவையில் ஈடுபடுத்தும் ,போக்குவரத்து அமைச்சின் திட்டத்திற்கு அமைவாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ரயிலுக்கு ‘எல்ல ஒடெஸி’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த ரயில் ஒவ்வொரு சனிக்கிழமையும் அதிகாலை 05.30 மணிக்கு கொழும்பு கோட்டையிலிருந்து புறப்பட்டு, பிற்பகல் 3.55 மணிக்கு பதுளையைச் சென்றடையும். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் பதுளையிலிருந்து காலை 09.50 மணிக்குப் புறப்படும் ரயில், … Read more

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான வீடுகளில் வசிப்பவர்களுக்கு…

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான வீடுகளில் வசிக்கும், நிரந்தர உறுதிப் பத்திரங்கள் கிடைக்கப் பெறாத குடும்பங்களுக்கு, நிரந்தர உறுதிப் பத்திரங்களை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்குமாறு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். பாராளுமன்றத்தின் மூன்றாவது அமர்வை ஆரம்பித்து வைத்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சமர்ப்பித்த கொள்கைப் பிரகடனத்திலும் அரச அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிக்கும் மக்களுக்கு இந்த வீட்டு உறுதிப் பத்திரம் வழங்குவது குறித்து குறிப்பிடப்பட்டுள்ளதால், அதனை … Read more