கொவிட் தொற்று நோய்க்கான தடுப்பூசி ஏற்றும் பணியை துரிதப்படுத்துங்கள்: சுகாதார அமைச்சர் தெரிவிப்பு

நாட்டில் தற்பொழுது கொவிட் தொற்றுநோய் பரவும் விகிதம் அதிகரித்துள்ள நிலையில், நிலைமையைக் கட்டுப்படுத்த தடுப்பூசி பெற்றுக்கொள்ளும் திட்டத்தை துரிதப்படுத்துமாறு சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். அத்துடன் ,உலகெங்கிலும் உள்ள பல நாடுகள் இந்த தொற்றுநோய் பரவலை எதிர்கொண்டு கடுமையான நெருக்கடியில் உள்ளனர் எனவும், நமது நாட்டில் வெற்றிகரமான முறையில் தடுப்பூசிச் செலுத்தப்பட்டுள்ளதன் மூலம் நாட்டில் குறித்த நோயை கட்டுப்படுத்த முடிந்துள்ள நிலையில், அந்த முறைகளை மிகவும் தீவிரமாகப் கையாள வேண்டும் எனவும் அமைச்சர் … Read more

இலத்திரனியல் முச்சக்கர வண்டிகளை பதிவு செய்ய நடவடிக்கை

இலத்திரனியல் முச்சக்கர வண்டிகளை பதிவுசெய்யக்கூடிய வகையில் மோட்டார் வாகன கட்டளைச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடகத்துறை அமைச்சரும், அமைச்சரவை பேச்சாளருமான கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார். அரசாங்க தகவல் தகவல் திணைக்களத்தில் இன்று (09) நடைபெற்ற  அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் இதுதொடர்பாக அமைச்சர் மேலும் தெரிவிக்கையில் ,தற்போது நடைமுறையிலுள்ள மோட்டார் வாகன கட்டளைச்சட்டத்தில் டீசல் மற்றும் பெட்ரோல் வாகனங்களை பதிவு செய்யலாம் ஆனால் மின்சார வாகனங்களை … Read more

மின்சார கட்டண திருத்தம் 2022

உள்நாட்டு மின்சார பாவனையாளர்களுக்கு மானியம் வழங்கும் வகையில் புதிய மின்சார கட்டண முறைக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. புதிய கட்டணங்கள் 2022 ஆகஸ்ட் மாதம் 10ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும். இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் திரு.ஜனக ரத்நாயக்க; “இறுதியாக 2014ஆம் ஆண்டு மின்சார கட்டணத்தை திருத்தினோம். அதாவது அக்காலப்பகுதியில் மின்சார கட்டணம் 25 சதவீதமாக குறைக்கப்பட்டது. விசேடமாக மின்சார உற்பத்திக்காக இறக்குமதி … Read more

கொழும்பில் நடைபெற்ற 55வது ஆசியான் தின கொண்டாட்டத்தில் வெளியுறவுச் செயலாளர் அருணி விஜேவர்தன பங்கேற்பு

2022 ஆகஸ்ட் 08ஆந் திகதி கொழும்பில் உள்ள இந்தோனேசியத் தூதரகத்தில் நடைபெற்ற 55வது ஆசியான் தினத்தில் பிரதம அதிதியாக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் அருணி விஜேவர்தன கலந்து கொண்டார். இந்நிகழ்வை இந்தோனேசியத் தூதுவர் டெவி குஸ்டினா டோபிங் மற்றும் கொழும்பில் உள்ள 4 ஆசியான் உறுப்பு நாடுகளின் தூதுத் தலைவர்களான மலேசியாவின் உயர்ஸ்தானிகர் டான் யாங் தாய், மியன்மார் தூதுவர் ஹன் து, தாய்லாந்து தூதுவர் போஜ் ஹர்ன்போல் மற்றும் வியட்நாம் தூதுவர் ஹோதி தான் … Read more

நல்லவரா.. கெட்டவரா.. யார் இந்த சரத் பொன்சேகா..!

இலங்கையில் தற்பொழுது மேற்கொள்ளப்பட்டு வருகின்ற மற்றொரு ஆட்சிமாற்றத்திற்கான முனைப்புக்களில் Field Marshal Sarath Fonseka முன்னிலைப்படுத்தப்பட்டு வருகின்றதை காணக்கூடியதாக இருக்கின்றது. ‘நாட்டிற்கு தலைமைதாங்க நான் தயார்’ என்று அறிவித்தது முதல், ‘இன்றைய போராட்டத்தில் தங்களை அர்ப்பணிக்க இளைஞர்கள் தயாராக வேண்டும்’ என்று அறைகூவல் விடுத்ததுவரை, ஆட்சி மாற்றம் ஒன்று ஏற்படும்பட்சத்தில் அதில் சரத் பொன்சேகாவின் பெயர் முன்னிலைப்படுத்தப்படும் படியான பல நகர்வுகள் நடைபெற்று வருகின்றது. யார் இந்த சரத் பொன்சேகா? தமிழ் மக்கள் சார்ந்த இவரது பார்வை … Read more

அக்குரேகொட இராணுவத் தலைமையகத்திற்கு ஜனாதிபதி உத்தியோகபூர்வ விஜயம்…

நிறைவேற்று அதிகாரத்தை நசுக்கி ஜனநாயகத்தை பாதுகாத்து சட்ட சபையை முடக்கிய வன்முறையாளர்களை ஒடுக்கிய இராணுவத்தினருக்கு தேசத்தின் புகழுரை உரித்தாகுமென ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். பெலவத்த, அக்குரேகொடவில் அமைந்துள்ள இராணுவத் தலைமையகத்திற்கு இன்று (09) முற்பகல் விசேட உத்தியோகபூர்வ விஜயத்தில் கலந்து கொண்ட ஜனாதிபதி, இராணுவத்தினரை சந்தித்து உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். வன்முறையாளர்கள் பாராளுமன்றத்திற்குள் பிரவேசித்து சபையை முடக்கியிருந்தால் நாடு ஆட்சியை இழந்திருக்கும் எனவும் அவ்வாறு நடந்திருந்தால் நாட்டின் நிலைமை முற்றிலும் வேறாக இருந்திருக்கும் எனவும் … Read more

யுவாங் வாங் 5 என்ற சீனக் கப்பலின் சமீபத்திய முன்னேற்றங்கள்

2022 ஆகஸ்ட் 11 முதல் 17 வரை ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் எரிபொருள் நிரப்பும் நோக்கத்திற்காக துறைமுக விஜயத்தை மேற்கொள்வதற்கான இராஜதந்திர அனுமதி, கொழும்பில் உள்ள சீன மக்கள் குடியரசின் தூதரகத்திற்கு 2022 ஜூலை 12ஆந் திகதி அமைச்சினால் தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, மேலதிக ஆலோசனைகளின் தேவை காரணமாக குறித்த கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு செல்வதை ஒத்திவைக்குமாறு அமைச்சு கொழும்பில் உள்ள சீன மக்கள் குடியரசின் தூதரகத்திற்கு தகவல் அனுப்பியுள்ளது. 2022 ஆகஸ்ட் 04ஆந் திகதி ஃபோன்ம் பென் … Read more

மக்களின் எதிர்பார்ப்புக்களுக்கும் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கும் தீர்வுகளை பெற்றுக்கொடுக்கும் நோக்கமாகக் கொண்டே அமைச்சின் செயற்பாடுகள்

மக்களின் எதிர்பார்ப்புக்களையும், மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளையும் முடிந்தளவு தீர்த்துக்கொள்வதை நோக்காகக் கொண்டே கடற்றொழில் அமைச்சின் செயற்பாடுகள் அமைய வேண்டும் என்பதே தனது  எதிர்பார்ப்பு என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.  கடற்றொழில் மற்றும் நீரியல்வளத் திணைக்களத்தின் பணிப்பாளர்கள் மற்றும் நிறைவேற்று அதிகாரிகளுடன்  (08) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே கடற்றொழில் அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார். முறைகேடுகள் – துஸ்பிரயோகங்கள் அற்ற வகையில், கடற்றொழில் அமைச்சின் செயற்பாடுகள் மக்களை சென்றடைவது உறுதிப்படுத்தப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார். இதேவேளை டிக்கொவிற்ற, உஸ்வெட்டி கெய்யாவ பிரதேசத்தினை … Read more

சவால்களை வெற்றிகரமாக எதிர்கொள்ள இயலும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கு செக் குடியரசுத் தலைவர் வாழ்த்து.

தற்போது இலங்கை எதிர்கொள்ளும் சவால்களுக்கு வெற்றிகரமாக முகங்கொடுக்க வேண்டும் என்று தாம் பிரார்த்திப்பதாக செக் குடியரசின் ஜனாதிபதி மைலோஸ் சீமன், (Milos Zeman) அவர்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கு அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள ஜனாதிபதி விக்கிரமசிங்க அவர்களுக்கு தனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துள்ள Milos Zeman அவர்கள், அனுபவமிக்க தலைவராக அவர் சவால்களை வெற்றிகரமாக முறியடிப்பார் எனவும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். செக் குடியரசும் இலங்கையும் பரஸ்பர புரிந்துணர்வு மற்றும் ஒத்துழைப்பின் அடிப்படையில் … Read more

அரசியல் கைதிகள் பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்ய வேண்டும் – ஞானசார தேரரின் செயலணி பரிந்துரை

புனர்வாழ்வு மற்றும் சமூக ஒருங்கிணைப்புச் செயற்பாட்டின் பின்னர் ஈழப் போரில் ஈடுபட்ட அனைத்து தரப்பினரையும் ஜனாதிபதி பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்ய வேண்டும் என கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையிலான ஒரு நாடு, ஒரே சட்டம் என்ற ஜனாதிபதி செயலணி பரிந்துரை செய்துள்ளது. அவர்களின் அறிக்கை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் கையளிக்கப்பட்டதுடன், 43 பரிந்துரைகள் அந்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறான கைதிகள் ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் பாதுகாப்பு தரப்பின் கண்காணிப்பு நடவடிக்கையுடன் … Read more