பொலிஸ் உத்தியோகத்தரின் முன்மாதிரி

மட்டக்களப்பு தலைமை பொலிஸ் நிலையத்தில் கடமை புரியும் பொலிஸ் சார்ஜன்ட் கிட்னண் குலேந்திரன் மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகில் கடந்த 3.8.2022 அன்று பணப்பை ஒன்றை கண்டெடுத்துள்ளார். அதனை பரிசோதித்து பார்த்த போது 75520/- பணமும் ஏனைய பெறுமதியான ஆவணங்களும் காணப்பட்டுள்ளது. உடனே குறித்த உத்தியோகத்தர் இவ்விடயத்தினை அவரது உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்து அவர்கள் முன்னிலையில் குறித்த பணத்தையும் ஆவணங்களையும் உரிய நபரிடம் சேர்த்துள்ளார்.

இலங்கையை முன்னேற்றம் மற்றும் சுபீட்சத்திற்கு இட்டுச் செல்லும் திறன் ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கு உண்டு என எகிப்து ஜனாதிபதியிடமிருந்து உறுதிமொழி

இலங்கையை முன்னேற்றம் மற்றும் சுபீட்சத்திற்கு இட்டுச் செல்வதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கு உள்ள திறமையில் எகிப்து அரசாங்கம் நம்பிக்கை கொண்டுள்ளது என எகிப்து அரபுக் குடியரசின் ஜனாதிபதி அப்தெல் பத்தா அல் சிசி ( Abdel Fattah Al Sisi)  அவர்கள் வாழ்த்துச் செய்தியொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளார். ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டுள்ள ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கு தனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துள்ள அப்தெல் பத்தா அல் சிசி அவர்கள், இலங்கை மக்களின் நம்பிக்கைகளையும் எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்றுவதற்காக ரணில் … Read more

சீன கப்பல் விவகாரம் – இலங்கை ஜனாதிபதிக்கு கடும் அழுத்தம்

யுவான் வான் 05 என்ற சீன ஆய்வு கப்பலின் வருகையை நிறுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு கடும் அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் பின்னணியில் முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச மற்றும் அமெரிக்கப் பிரதிநிதி ஒருவர் இருப்பதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று ஊடங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும், ஜனாதிபதிக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் இந்த கப்பல் நிறுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். எந்தவொரு … Read more

லண்டனில் வெடித்து சிதறிய வீடு – நான்கு வயது சிறுமி பலி

தெற்கு லண்டனில் உள்ள குரோய்டனில் வீட்டில் இன்று ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தில் நான்கு வயது சிறுமி உயிரிழந்துள்ளார். வெடிப்பு சம்பவத்தை அடுத்து இடிந்து விழுந்த கட்டிடத்தில் இருந்து மேலும் 4 பேர் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 07:00 மணி நேரத்திற்குப் பின்னர் மிட்சம், கல்பின்ஸ் சாலையில் உள்ள குடியிருப்புப் பகுதியில் தீ மற்றும் வெடிப்பு ஏற்பட்டதாகப் முறைப்பாடு செய்யப்பட்டதை தொடர்ந்து பொலிஸார் சம்பவ இடத்திற்கு அழைக்கப்பட்டதாக பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது. “லண்டன் தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்த … Read more

லங்கா ஐ.ஓ.சி. நிறுவனத்திற்கு, மேலும் 50 புதிய எரிபொருள் நிரப்பு நிலையங்கள்

மேலும் 50 புதிய எரிபொருள் நிரப்பு நிலையங்களை ஆரம்பிப்பதற்கு அனுமதி கிடைத்துள்ளதாக, லங்கா ஐ.ஓ.சி. நிறுவனம் அறிவித்துள்ளது. இதனை நிறுவனம் கொழும்பு பங்குச் சந்தைக்கு அறிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில் 50 எரிபொருள் நிரப்பு நிலையங்களை ஆரம்பிப்பதற்கு, எரிசக்தி அமைச்சர் ஒப்புதல் அளித்துள்ளதாக, லங்கா ஐ.ஓ.சி. நிறுவனத்தின் நிர்வாக பணிப்பாளர் மனோஜ் குப்தா தெரிவித்துள்ளார்.

இந்த வாரத்திற்குள் திரிபோஷா

பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு தேவையான திரிபோஷாவை, சுகாதார மற்றும் வைத்திய அதிகாரிகளின் அலுவலகங்கள் ஊடாக, இந்த வாரத்திற்குள் வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக, இலங்கை திரிபோஷா நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக நிறுவனத்தின் தலைவர் தீப்தி குலரத்ன தெரிவிக்கையில், சுமார் 720,000 திரிபோஷா பொதிகளை நிறுவனம் தற்போது தயாரித்துள்ளது. எதிர்வரும் சில வாரங்களில் குழந்தைகளுக்கு தேவையான திரிபோஷாவை உற்பத்தி செய்ய முடியும் என்று  தெரிவித்தார்.

கோட்டாபயவுக்கு ஏற்பட்ட நிலை: புகலிடம் வழங்க முன்வராத உலக நாடுகள்

கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதி பதவியில் இருந்து விலகி ஒரு மாதம் நிறைவடையவுள்ள நிலையில், அவருக்கு உலகில் எந்த நாடும் அரசியல் புகலிடம் வழங்க இதுவரை முன்வரவில்லை என தெரியவருகிறது. குடியுரிமை பெற்றிருந்த அமெரிக்கா கூட புகலிடம் வழங்கவில்லை கோட்டாபய ராஜபக்ச குடியுரிமை பெற்றிருந்த அமெரிக்கா கூட அவருக்கு புகலிடம் வழங்கவில்லை. அத்துடன் இந்தியா தனது நாட்டுக்கு வரவும் அவருக்கு அனுமதி வழங்கவில்லை. இந்த நிலையில், தற்போது சிங்கப்பூரில் தங்கியிருக்கும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய அங்கு மேலும் 14 … Read more