உயர்தர பரீட்சை: செயன்முறை பரீட்சைக்கு தோற்ற முடியாது போன பரீட்சார்த்திகளுக்கு மீண்டும் பரீட்சை

சமீபத்தில் நடைபெற்ற  2021 கல்வி பொதுத்தராதர பத்திர உயர்தர பரீட்சைக்கான செயன்முறை பரீட்சைக்கு தோற்ற முடியாது போன பரீட்சார்த்திகளுக்கு மீண்டும் பரீட்சை நடத்துவதற்கு பரீட்சைகள் திணைக்களம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதற்கமைவாக செயன்முறை பரீட்சையில் தோற்ற முடியாமற் போனவர்கள் எதிர்வரும் பத்தாம் திகதிக்கு முன்னர் அதற்கான விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும் என திணைக்களம் அறிவித்துள்ளது. பரீட்சை சுட்டிலக்கம், பெயர், பாடம் மற்றும் பரீட்சார்த்தியின் தொலைபேசி இலக்கம் உள்ளடங்கலான விண்ணப்பங்களை வட்ஸ்அப் அல்லது மின்னஞ்சல் மூலம் அனுப்ப முடியும். அனுப்ப … Read more

பொது நலவாய விளையாட்டுப்போட்டி: நெத்மிபொருதொடகேவுக்கு வெண்கலப்பதக்கம்

இங்கிலாந்தின்பர்மிங்காமில்நடைபெற்ற 2022 பொது நலவாய விளையாட்டுப்போட்டியில் (women’s 57kg freestyle  wrestling event)பெண்களுக்கான 57கிலோகிராம் எடைப்பிரிவின்மல்யுத்தப்போட்டியில் இலங்கை வீராங்கனை நெத்மிபொருதொடகே வெண்கலப்பதக்கத்தை வெற்றிக்கொள்டுள்ளார். அவுஸ்திரேலிய வீராங்கனை இரீனி சைமெண்டிஸை Irene Symeonidis 18 வயதான நெத்மி பொருதொடகேதோற்கடித்து வெற்றிபெற்றார். 2022 பொது நலவாய விளையாட்டுப் போட்டி வரலாற்றில் இலங்கை வென்ற முதலாவது மல்யுத்தப் பதக்கமும் இதுவாகும். 2022 பொதுநலவாய விளையாட்டு  போட்டி  எட்டாவது நாள் நிறைவில் இலங்கை ஒரு வெள்ளி மற்றும் 3 வெண்கலப்பதக்கங்கள் என மொத்தமாக 4 பதக்கங்களை பெற்றுள்ளது. காலிறுதிப்போட்டியில் … Read more

அமெரிக்காவில் சுகாதார அவசர நிலை பிரகடனம்  

அமெரிக்காவில் குரங்கு அம்மை நோய் பாதிப்பு அதிகரித்து வருவதன் காரணமாக ,சுகாதார அவசர நிலையை அந்நாட்டு அரசாங்கம் பிரகடனம் செய்துள்ளது. அமெரிக்காவின் மாநிலங்களான கலிபோர்னியா, நிவ்யோர்க் உள்ளிட்ட பிராந்தியங்களில் குரங்கம்மை தொற்று விரைவாக பரவி வருகிறது. குரங்கு அம்மை நோயால் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அமெரிக்காவில் 7 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு குரங்கு அம்மை பாதிப்பு பரவியுள்ளது. இதன் காரணமாக ஏற்கனவே நியூயார்க், இல்லினாய்ஸ், கலிபோர்னியா உள்ளிட்ட பல மாகாணங்களில் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளன. “அமெரிக்கா மக்கள் … Read more

பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோள்

வெள்ளம் மற்றும் மண்சரிவு போன்ற இயற்கை அனர்த்தங்கள் தொடர்பில் விடுக்கப்படும் ஆலோசனைகளை முறையாக கடைப்பிடிக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது. அனர்த்தங்கள் நிகழுமாயின் அதுபற்றி துரித தொலை பேசி இலக்கத்தின் ஊடாக நிலையத்திற்கு அறிவிக்குமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. துரித தொலைபேசி இலக்கம் 117 என்பதாகும். 10 மாவட்டங்களைச் சேரந்;த 65 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்டுள்ளதாக . அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.

இங்கிலாந்தில் கடத்தப்பட்டதாக கூறப்படும் இலங்கை பெண் தொடர்பில் வெளியாகியுள்ள முக்கிய தகவல்

பிரித்தானியாவில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் தனது மகள் கடத்தப்பட்டதாக தெரிவித்து காலி உனவடுன பிரதேசத்தில் தந்தையொருவர் விடுத்த வேண்டுகோள் குறித்து அண்மையில் செய்திகள் வெளியாகியிருந்தன. எவ்வாறாயினும், கடத்தப்பட்டதாகக் கூறப்படும் சிறுமி தொடர்பில் தற்போது முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. பிரித்தானியாவில் பத்து வருடங்களாக தீவிரவாத கும்பலால் சிறைபிடிக்கப்பட்ட எனது மகளை விடுதலை செய்” என்ற வாசகம் அடங்கிய வான் ஒன்று தென்னிலங்கையில் சுற்றித் திரிகிறது. காலியில் வாழும் சேனக சொய்சாஎன்பவர் தனது மகளை தேடும் முயற்சியில் இவ்வாறான … Read more

நாட்டைப் பற்றி சிந்தித்து அனைத்து அரசியல் கட்சிகளும் சர்வகட்சி அரசாங்கத்துடன் இணைய வேண்டும் – இலங்கை அமரபுர மகா நிகாயவின் மகா தேரர் தெரிவிப்பு

நிலையான பொருளாதாரக் கொள்கையொன்றை அமுல்படுத்துவதன் மூலம் நாட்டின் நெருக்கடியான பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வுகளை வழங்குவதற்கு பலமான அரசாங்கம் அவசியமானது எனவும், அதற்கு சர்வகட்சி ஆட்சி மிகவும் முக்கியமானது எனவும் இலங்கை அமரபுர மகா நிகாயவின் அதியுயர் மகாதலைவர் அக்கமஹா பண்டித வண. தொடம்பஹல சந்தசிறி தேரர் அவர்கள் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் நேற்று மாலை தேரர் அவர்களை சந்தித்த போதே அவர் இதனைத் தெரிவித்தார். நேற்று (04) பிற்பகல் இராஜகிரிய, கலபலுவாவ, கோதம தபோவன … Read more

ஆர்ப்பாட்டக்காரர்களுடன் வெளிப்படைத்தன்மையுடன் பணியாற்றத் தயார் – ஜனாதிபதி

ஆர்ப்பாட்டக்காரர்கள் மற்றும் இளைஞர்களுடன் இணைந்து வெளிப்படைத்தன்மையுடன் செயற்பட தான் தயார் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் தெரிவித்துள்ளார். நாம் இப்போது பொருளாதாரப் போராட்டத்தில் வெற்றிபெற வேண்டும் என்பதை  சுட்டிக்காட்டிய ஜனாதிபதி விக்கிரமசிங்க அவர்கள், அந்தப் பொருளாதாரப் போராட்டத்தின் வெற்றிக்கு போராட்டக் களத்தில் உள்ள அனைத்து இளைஞர், யுவதிகளையும் சகல வழிகளிலும் பங்கேற்கச் செய்ய தாம் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார். இப்போது பொருளாதாரப் போராட்டத்தில் வெற்றி பெற வேண்டும். அதற்கு இளைஞர்களின் அர்ப்பணிப்பு அவசியம். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க … Read more

வாகன பாவனையாளர்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள விசேட அறிவிப்பு

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளால் இரக்க தகடுகளை திருடும் போக்கு இருப்பதால், பாதுகாப்பற்ற முறையில் தங்கள் மோட்டார் சைக்கிள்களை நிறுத்த வேண்டாம் என்று பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அண்மையில் இடம்பெற்ற பல கொலைகளுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனங்களில் திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் இலக்கத் தகடுகள் பயன்படுத்தப்படுவதை அவதானித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறிப்பாக இரவு நேரங்களில் சாலையோரம் மற்றும் பிற இடங்களில் வாகனங்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களை நிறுத்தும்போது கவனமாக இருக்க வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தினர். இதேவேளை, காலி, திஸ்ஸமஹாராம, அஹுங்கல்ல மற்றும் … Read more