ரஞ்சனுக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்குவார் – நீதி அமைச்சர் நம்பிக்கை

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கப்படும் என தான் நம்புவதாக நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு விவகார அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். அமைச்சர் என்ற வகையில், சட்டமா அதிபரிடம் இருந்து வழக்குச் சுருக்கங்களைப் பெற்றதாகவும், நெறிமுறையின்படி தனது பரிந்துரைகளை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் சமர்ப்பித்ததாகவும் அவர் கூறினார். எவ்வாறாயினும், ஜனாதிபதி மன்னிப்பு வழங்குவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் தனி அதிகாரம் என்பதால், அவருக்கு எப்போது மன்னிப்பு வழங்க முடியும் … Read more

இன்று நள்ளிரவு முதல் குறைந்த பேரூந்துக் கட்டணம் 34 ரூபா

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பரிந்துரையின் பேரில் போக்குவரத்து அமைச்சரின் அனுமதியின் கீழ் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் குறைந்தபட்ச பேரூந்துக் கட்டணம் 34 ரூபாவாக திருத்தியமைக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி நிலான் மிராண்டா தெரிவித்தார். புதிய பேரூந்து கட்டண திருத்தம் தொடர்பில் அரசாங்க தகவல் திணைக்களத்தினால் இன்று (04) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகக் கலந்துரையாடலில் கலந்து கொண்டே அவர் இதனை தெரிவித்தார். இதற்கு முன்னர் ஒரு சந்தர்ப்பத்தில் 20 சதவீதத்தால் … Read more

அமைச்சின் புதிய மேலதிக செயலாளர் – பாராளுமன்ற விவகாரங்கள், கொள்கை மற்றும் திட்டமிடல் நியமனம்

திருமதி இந்திகா விஜேகுணவர்தன இன்று (ஆகஸ்ட் 03) முதல் பாதுகாப்பு அமைச்சின் பாராளுமன்ற விவகாரங்கள், கொள்கை மற்றும் திட்டமிடல் மேலதிக செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவிடமிருந்து திருமதி விஜேகுணவர்தன தனது நியமனக் கடிதத்தைப் அமைச்சில் வைத்து இன்று பெற்றுக்கொண்டார். இலங்கை நிர்வாக சேவையின் விசேட தர அதிகாரியான இவர் இதற்கு முன் ஒரு ஜனாதிபதி மேலதிக செயலாளராகவும் சேவையாற்றியுளார். இவர் தனது 22 வருட சேவை காலத்தில் காணி அமைச்சின் காணி ஆணையாளர் … Read more

அமைச்சின் புதிய மேலதிக செயலாளர் – பாதுகாப்பு நியமனம்

திரு. ஆர்.எம்.பி.எஸ்.ரத்நாயக்க நேற்று (ஆகஸ்ட் 01) பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர்- பாதுகாப்பு பதவிக்கு நியமிக்கப்பட்டார். நேற்று அமைச்சில் நடைபெற்ற நிகழ்வின் போது, பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவிடமிருந்து திரு. ரத்நாயக்க தனது நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டார். புதிய பதவியை பொறுப்பேற்பதற்கு முன்பு அவர் பாதுகாப்பு அமைச்சின் பாராளுமன்ற விவகாரங்கள், கொள்கை மற்றும் திட்டமிடல் மேலதிக செயலாளராக கடமையாற்றினார். இதற்கு முன் பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் – பாதுகாப்பு நியமத்தை வகித்த திரு. பி … Read more

இலங்கைக்கு தொடர்ந்தும் உதவுவோம் – இந்தியா உறுதி

இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு தொடர்ந்தும் உதவுவதாக இந்தியா உறுதி வழங்கியுள்ளது. இந்தியாவின் நம்பகமான நண்பர் மற்றும் நேர்மையான பங்காளி நாடு என்ற அடிப்படையில் இலங்கைக்கு இந்தியா தொடர்ந்தும் உதவிகள் வழங்கப்படும் என அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்திய வெளியுறவு அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கர் உறுதியளித்துள்ளார். இலங்கையின் வெளிவிவகார அமைச்சரை சந்தித்து பேசிய அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். கம்போடியாவில் இடம்பெற்று வரும் ஆசியான் மற்றும் இந்திய அமைச்சர் மட்ட மாநாட்டில் பங்கேற்ற சென்றுள்ள நிலையில் இந்த சந்திப்பு இன்று … Read more

தேசிய பாதுகாப்புக் கல்லூரியின் ஆராய்ச்சி கருத்தரங்கு – 2022

தேசிய பாதுகாப்புக் கல்லூரியின் ‘ஆய்வுக் கருத்தரங்கம் – 2022’ “மல்டிநோடல் செக்யூரிட்டி டைனமிக்ஸ்” எனும் தொனிப்பொருளின் கீழ் 2022 ஆகஸ்ட் 17 அன்று ஜெனரல் சர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தின் பட்டதாரி கற்கைகள் பீடத்தின் கேட்போர் கூடத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இக்கருத்தரங்கு, பாதுகாப்பு ஆராய்ச்சி கலாச்சாரத்தை மேம்படுத்துவதற்கும், தேசிய பாதுகாப்பு மற்றும் மூலோபாய ஆய்வுகள் தொடர்பான ஆராய்ச்சி கருத்துக்களை ஆராய்வதற்கான சூழலை உருவாக்குவதற்கும் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், சமகால பாதுகாப்பு பிரச்சினைகள் தொடர்பான கல்விசார் கருத்துக்களை … Read more

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஜீ.எல் – டலஸ் குழு –   சர்வகட்சி அரசாங்கம் அமைப்பது குறித்து கலந்துரையாட ஜனாதிபதியை சந்தித்தனர்

பாராளுமன்றத்தை அரசாங்கமாக மாற்றி, நாட்டை கட்டியெழுப்பும் தீர்மானங்களை எடுப்பதே சர்வகட்சி அரசாங்கத்தின் நோக்கம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் தெரிவித்தார். சர்வகட்சி அரசாங்கம் அமைப்பது குறித்து,  ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் மற்றும் டலஸ் அழகப்பெரும ஆகியோர் உள்ளிட்ட குழுவினர் இன்று (04) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களை சந்தித்து கலந்துரையாடிய போதே ஜனாதிபதி அவர்கள் இதனைக் குறிப்பிட்டுள்ளார். பாராளுமன்றத்தை அரசாங்கமாக மாற்றி நாட்டை … Read more

மின் பாவனை குறைவடைந்துள்ளது

நாட்டில் மின்சார  பாவனை இருபது வீதத்தால் குறைந்துள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. சுமார் ஆறு மாதங்களுக்கு முன்னர் மின்சார பாவனையாளர்கள் நாளொன்றுக்கு 48 மில்லியன் அலகுகளை (units) பயன்படுத்தியுள்ளனர். ஆனால் தற்போது அந்த அலகுகளின் எண்ணிக்கை 38 மில்லியனாக குறைந்துள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார். சில மாதங்களுக்கு முன் ஏற்பட்ட மின் துண்டிப்பு அத்துடன், பாவனையாளர்கள் மின்சாதனங்களை குறைவாக பயன்படுத்துவதற்கு தங்களை பழக்கப்படுத்திக் கொண்டமை போன்ற காரணங்களினால் இவ்வாறு மின்சாரப் பயன்பாடு குறைவடைந்துள்ளது … Read more

நாடு முழுவதும் “டெங்கு” வேகமாக பரவி வருகிறது

நாடு முழுவதும் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில், நாட்டு மக்கள் இந்நோய்க்கு வேகமாக பலியாகி வருவதாக டெங்கு கட்டுப்பாட்டு வேலைத்திட்டத்தின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார். 20-45 வயதுக்கு இடைப்பட்டவர்களில் 55 வீதமானவர்கள் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இவ்வருடம் பதிவாகியுள்ள 476,677 டெங்கு நோயாளர்களில் 25 வீதமானோர் 5 வயதுக்கும் 19 வயதுக்கும் இடைப்பட்ட பாடசாலைகளை மாணவர்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், ஓகஸ்ட் மாதத்தின் … Read more