சுற்றுலா பயணிகளுக்கு விமான நிலையத்தில் விசேட எரிபொருள் அனுமதிப்பத்திரம்  

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் விமான நிலையத்தில் வைத்து டொலர்களில் கொள்வனவு செய்யக்கூடிய எரிபொருள் அனுமதி அட்டையை அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. வாகனம் அல்லாத பிற எரிபொருள் தேவைகளுக்கான QR. குறியீடுகளை வழங்க பதிவு செய்வதற்கான வசதிகளை வழங்குதல், ஒரு தொலைபேசி எண்ணிலிருந்து வியாபாரப் பதிவு இலக்கத்தின் மூலம் பல வாகனப் பதிவு, அரசாங்க வாகனப் பதிவின் சார்பாக அந்த நிறுவனத்திற்கு தனிப்பட்ட பதிவு எண் கொண்ட அனைத்து வாகனங்களையும் … Read more

கொவிட் தொற்று:பாடசாலைகளை மூட வேண்டாம்

நாட்டில் கொவிட் தொற்று பரவலாக பரவுகின்ற போதிலும் பாடசாலைகளை மூடிவிட வேண்டாம் என்று சிறுவர் நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா கல்வி அதிகாரிகளிடம் விசேட கோரிக்கை விடுத்துள்ளார். கடந்த கொவிட் அலையின் போது பாடசாலைகள் மூடப்பட்டதால், சில குழந்தைகள் பல்வேறு மனநல பிரச்சினைகளுக்கு ஆளாகியுள்ளனர். ஒன்லைன் கல்வி முறையால் சில குழந்தைகள் கையடக்கத் தொலைபேசியில் ஆபாசமான காட்சிகளைப் பார்ப்பதில் அடிமையாகி உள்ளதாக தகவல் வெளியாகியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். வளர்முக நாடுகளில் கொவிட் நோய் … Read more

அடுத்த ஆட்டம் ஆரம்பம்! கொழும்பில் வன்முறை வெடிக்கும் அபாயம் – நள்ளிரவு முதல் நடைமுறை

இலங்கையில் இன்றைய தினம் அரசியல் ரீதியாகவும், சமூக ரீதியாகவும் பல சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இவ்வாறான சம்பவங்கள் தொடர்பிலும், மேலும் பல முக்கிய தகவல்களும் செய்திகளாக தமிழ்வின் தளத்தில் வெளியாகியிருந்தன. அவற்றில் மிக முக்கிய செய்திகளை நீங்கள் தவறவிட்டவர்களாயின் பின்வரும் செய்திகளை கட்டாயம் படிக்கவும். 1. காலி முகத்திடலுக்கு அருகில் போராட்டம் நடத்துவதற்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் தொடர்ந்தும் தங்கியிருக்கவுள்ளதாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் தெரிவிக்கின்றனர். மேலும் படிக்க >>> பொலிஸாரின் எச்சரிக்கையும் மீறி தொடரவுள்ள போராட்டம் – கொழும்பில் … Read more

டிக்கோயா வீதி கட்டிட பகுதிகளை மாவட்ட கட்டிட ஆய்வு நிறுவன புவியியலாளர்கள் ஆய்வு

அட்டன் டிக்கோயா வீதியில் , எம்.ஆர். பகுதியில் இடிந்து விழும் கட்டிடங்கள் மற்றும் அதனை சூழவுள்ள பகுதிகளை நுவரெலியா மாவட்ட கட்டிட ஆய்வு நிறுவன புவியியலாளர்கள் ஆய்வு செய்துள்ளனர். இதன் போது சில கட்டிடங்கள் இடிந்து விழும் அபாயத்தில் இருப்பதை அவதானித்ததாக புவியியலாளர் திரு.புத்திக விஜேகோன் தெரிவித்தார். . குறித்த பகுதியில் அமைந்துள்ள மிகவும் ஆபத்தான நான்கு மாடி கட்டிடத்தில் வெடிப்புகள் காணப்பட்டதாகவும், இதனால் அங்கிருந்தவர்களை வெளியேறுமாறு தெரிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இதுதொடர்பாக கட்டடம் கட்ட பெறப்பட்ட … Read more

ஜனாதிபதியின் சிம்மாசன உரையை தமிழ் தரப்புக்கள் காத்திரமாக முன்னகர்த்த வேண்டும் – கடற்றொழில் அமைச்சர்

ஜனாதிபதியின் சிம்மாசன உரையை காத்திரமாக முன்னெடுத்துச் சென்று, பொருளாதார சவால்களை தீர்க்கின்ற முயற்சிகளுக்குச் சமாந்தரமாக, தமிழ் மக்களின் எதிர்ப்பார்ப்புக்களுக்கான தீர்வுகளையும் முன்னெடுப்பதற்கான ஒத்துழைப்புக்களை தமிழ் தரப்புக்கள் ஜனாதிபதிக்கு வழங்க வேண்டும் என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றில் நேற்று (03) ஆற்றிய சிம்மாசன உரை தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே கடற்றொழில் அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தமிழ் மக்களின் அபிலாசைகள் தொடர்பாக எம்மால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளும் ஜனாதிபதியின் சிம்மாசன உரையில் … Read more

காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்களில் ஒருவரான தானிஷிற்கு சிறைத் தண்டனை

அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டத்தின் போது ரூபவாஹினி கூட்டுத்தாபனத்திற்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டில்  கைது செய்யப்பட்ட தானிஷ் அலி  விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் தானிஷ் அலி சிறைச்சாலைக்குள் கையடக்க தொலைபேசி பயன்படுத்தியதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.  இந்நிலையில்  குற்றத்தை ஒப்புக்கொண்ட தானிஷ் அலி வெலிக்கடை சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டு மேலும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கோட்டா கோகோம் ஆர்ப்பாட்டத்தில் முன்னின்று செயற்பட்டவர்களால் ஒருவரான தானிஷ் அலி, டுபாய் செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்தில் விமானம் ஒன்றில் தயாராக இருந்த … Read more

இந்தியாவில் ஒரு குடும்பத்தில் வீட்டில் எவ்வளவு பணம் தங்கம் வைத்திருக்கலாம்?

இந்தியாவில் ஒரு குடும்பத்தில் திருமணமான பெண்கள், திருமணமாகாத பெண்கள், ஆண்கள் எவ்வளவு நகைகளை வீட்டில் வைத்திருக்கலாம் என இந்திய வருமானவரித்துறை அறிவித்துள்ளது. இந்திய வருமான வரித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், திருமணமான பெண்கள் 62.5 பவுன் வரையிலான தங்க நகைகளை வீட்டில் வைத்துக்கொள்ளலாம். அதே சமயம் திருமணமாகாத பெண்கள் 31,25 பவுன் நகைகளை வைத்து கொள்ளலாம். ஆண்கள் 12.5 பவுன் தங்கத்தை மட்டுமே வைத்துக்கொள்ள அனுமதி உண்டு என் குறிப்பிடப்பட்டுள்ளது. குடும்ப பழக்கவழக்கங்கள் மற்றும் பாரம்பரியம் போன்ற காரணங்களை … Read more

ஜனாதிபதிக்கும் சீன தூதுவருக்கும் இடையில் சந்திப்பு

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கும் சீனத் தூதுவர் சீ சென்ஹொங் (Qi Zhenghong) அவர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று  இன்று (04) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்த சீனத் தூதுவர், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்துவது குறித்து கலந்துரையாடினார். ”ஒரு சீனா கொள்கை” தொடர்பில் இலங்கையின் கடைபிடிப்பு மற்றும் ஐக்கிய நாடுகளின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு பற்றிய சாசனக் கோட்பாடுகளுக்கான இலங்கையின் அர்ப்பணிப்பையும் ஜனாதிபதி விக்கிரமசிங்க அவர்கள், … Read more

மேற்கு ,தெற்கு கடற்பரப்புகளில் காற்று நிலைமை மேலும் தொடரும்

இலங்கையைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல் நிலை,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு2022 ஓகஸ்ட் 04ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது. இயங்குநிலை தென்மேல் பருவப் பெயர்ச்சி நிலைமை காரணமாக மேற்கு மற்றும் தெற்கு கடற்பரப்புகளில் தற்போது நிலவும்காற்று நிலைமை மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மழை நிலைமை: நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய … Read more