கம்பஹா கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலைகளுக்கு இடையிலான கால்பந்தாட்ட போட்டி

கம்பஹா கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலைகளுக்கு இடையிலான கால்பந்தாட்ட போட்டியில், 20 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில் திஹாரிய அல் அஸ்ஹர் தேசிய பாடாசாலை அணி சம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளது. 16 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில் கஹட்டோவிட்ட அல் பத்ரியா மகா வித்தியாலய அணி வெற்றிக்கிண்ணத்தை வெற்றிக்கொண்டது. இந்த போடடி கம்பஹா ஸ்ரீ போதி மைதானத்தில் நேற்று (03) ஆரம்பமானது.  20 வயதுக்கு உட்பட்டோருக்கான சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டியில் திஹாரிய அல் அஸ்ஹர் தேசிய பாடாசாலை அணி, வெயாங்கொட மத்திய … Read more

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுவின் 2 ஆவது அரையாண்டு தேர்ச்சி அறிக்கை  

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுவின் 2 ஆவது அரையாண்டு தேர்ச்சி அறிக்கை    ஆகஸ்ட்  2022, கொழும்பு: இந்த அறிக்கையானது ஜனவரி முதல் ஜூன் 2022 வரையிலான கொழும்பு துறைமுக நகர செயற்திட்ட நடவடிக்கைகளின் செயல்பாடுகளை உள்ளடக்கியதுடன், கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுவால் (CPCEC/Commission).பகிரப்பட்டது.   • ஒட்டுமொத்த செயற்திட்டத்திற்கான அபிவிருத்திக் கட்டுப்பாட்டு விதிமுறைகள் (DCR) ஏப்ரல் 2022 இல் வர்த்தமானியில் வெளியிடப்பட்டிருந்ததுடன், ஜூன் 2022 இல் அரசாங்க அதிகாரிகளுக்காக ஆணையத்தால் அவை பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சியொன்றும் … Read more

சர்வகட்சி அரசாங்கம்அமைப்பது குறித்து கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதியை தமிழ் தேசிய கூட்டமைப்பு சந்தித்தது  

சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேற்று (03) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களைச் சந்தித்து கலந்துரையாடியது. எம்.ஏ சுமந்திரன், தர்மலிங்கம் சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன், எஸ். இராசமாணிக்கம் உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு கலந்துகொண்டு, சர்வகட்சி அரசாங்கம் தொடர்பில் தமது கட்சியின் கருத்துக்களை ஜனாதிபதி அவர்களிடம் விரிவாக முன்வைத்தனர். குமார வெல்கம அவர்களின் தலைமையிலான புதிய(நவ) லங்கா சுதந்திரக் கட்சியும் வண. அதுரலியே ரதன தேரர் உள்ளிட்ட குழுவினரும் … Read more

நாடாளுமன்ற ஏரிக்குள் திடீரென விழுந்த ட்ரோன் விமானம்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நேற்றையதினம் ஒன்பதாவது நாடாளுமன்ற அமர்வு ஆரம்பமானது. இதன்போது பாதுகாப்பிற்காக அனுப்பப்பட்ட விமானப்படையின் ஆளில்லா விமானம் (ட்ரோன்) தியவன்னா ஏரிக்குள் திடீரென உடைந்து விழுந்துள்ளது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஆளில்லா விமானம் விபத்துக்குள்ளானதாக தெரியவந்துள்ளது. இது தொடர்பில் விமானப்படை ஊடகப் பேச்சாளர் குரூப் கப்டன் துஷான் விஜேசிங்க ஊடகங்களுக்கு விளக்கமளித்துள்ளார். விமானத்தை கண்டுபிடிப்பதற்காக கடற்படை குழுவொன்று இன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக விமானப்படை பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். Source link

2022 பொதுநலவாய விளையாட்டு விழாவின் 6 வது நாள்: இலங்கைக்கு 2 பதக்கங்கள்

இங்கிலாந்தின் பர்மிங்காமில் நடைபெற்ற 2022 பொது நலவாய விளையாட்டுப் போட்டியில் ,பரா பரிதி வட்டம் எறிதல் போட்டியில் பங்கேற்ற பாலித்த பண்டார, 44.20 மீற்றர் தூரம் வீசி வெள்ளிப்பதக்கத்தை வெற்றிக்கொண்டுள்ளார். இந்தப்போட்டியில், வேல்ஸைச் சேர்ந்த அலெட் டேவிஸ் Aled Davies தங்கப் பதக்கத்தை வெற்றிக்கொண்டனர். ஹெரிஸன் வோல்ஸ்  Harrison Walsh வெண்கலப்பதக்கத்தை கைப்பற்றினார். இதன் மூலம் 2022 பொதுநலவாய விளையாட்டு விழாவின் ஆறுாவது நாள் நிறைவில், இலங்கை இரண்டு பதக்கங்களை வெற்றிக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

2022 பொதுநலவாய விளையாட்டுப் போட்டி:யுபுன் அபேகோனுக்கு வெண்கலப்பதக்கம்

இங்கிலாந்தின் பெர்மிங்ஹாமில் நடைபெற்று வரும் பொதுநலவாய விளையாட்டுப் போட்டியின் ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் யுபுன் அபேகோன் வெண்கலப்பதக்கத்தை வெற்றிகொண்டார். இதன் மூலம் இம்முறை பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் 100 மீற்றர் ஓட்டப்போட்டியின் இறுதிப் போட்டியில் இலங்கை அணி வரலாற்றில் சாதனை புரிந்துள்ளது. பொது நலவாய விளையாட்டுப் போட்டியில் ,24 ஆண்டுகளில்  இலங்கை வென்ற முதல் பதக்கம் இதுவாகும். இதன் மூலம் பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் பதக்கம் வென்ற முதல் … Read more

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரியுடன் கொரியத் தூதுவர் சந்திப்பு

கொழும்பில் உள்ள கொரியத் தூதுவர் வூன்ஜின் ஜியோங், இலங்கையின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரியை 2022 ஜூலை 29ஆந் திகதி அமைச்சில்  மரியாதை நிமித்தம் சந்தித்தார். அரசியல், பொருளாதாரம், வேலைவாய்ப்பு, கல்வி, அறிவுப் பரிமாற்றம் மற்றும் மக்களுடனான தொடர்புகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை ஆழமாக்குதல் குறித்து இரு தரப்பினரும் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர். அமைச்சர் சப்ரி, கடந்த சில ஆண்டுகளில் இருதரப்பு ஈடுபாடுகளின் மட்டத்தில் திருப்தியை வெளிப்படுத்தியதுடன், இலங்கைக்கும் தென் கொரியாவிற்கும் இடையிலான … Read more

22வது அரசியலமைப்பு திருத்த சட்டமூலம் தொடர்பில் நீதி அமைச்சர் விளக்கம்

நாட்டு மக்கள் நீண்டகாலமாக எதிர்பார்த்திருந்த 22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்திற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளதாக நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் (02) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் இதனை அறிவித்தார். இது (02) வர்த்தமானியில் வெளியிடப்பட்டு 07 நாட்களுக்குப் பின்னர் பாராளுமன்றத்தில் முதல் வாசிப்புக்காக சமர்ப்பிக்கப்படவிருப்பதாகவும், குறிப்பாக இது 22ஆவது அரசியலமைப்புத் திருத்தமாக முன்வைக்கப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்தார். … Read more

அரசாங்கத்திற்கெதிராக காலி முகத்திடலில் தீப்பந்த போராட்டம்

எதிர்வரும் ஐந்தாம் திகதி, மாலை ஐந்து மணிக்கு முன்னதாக காலி முகத்திடலில் அமைக்கப்பட்டிருக்கும் போராட்டக்காரர்களின் கூடாரங்கள் அகற்றப்பட வேண்டும் என பொலிஸார் அறிவித்துள்ளனர். இந்நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காலி முகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்கள் தீப்பந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குறித்த போராட்டம் ஆர்ப்பாட்ட இடம் என பெயரிடப்பட்டுள்ள பகுதியில் அமைதியான முறையில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. Source link