மக்களின் கோரிக்கைகளுக்கு அதிகாரிகள் விரைவாக தீர்வு வழங்க வேண்டும் -கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

மக்களின் கோரிக்கைகளுக்கு அதிகாரிகள் விரைவாக தீர்வு வழங்க வேண்டும் என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பணிப்புரை விடுத்துள்ளார். கடற்றொழில் அமைச்சின் கீழ் இருக்கும் நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் பணிப்பாளர் நாயகம் ஆகியோருடன் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேற்று (01) சந்திப்பின் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அமைச்சை நோக்கியும் அமைச்சின் நிறுவனங்களை நோக்கியும் பொதுமக்கள் முன்வைக்கும் கோரிக்கைகளுக்கு, சட்ட ரீதியாகவும், அவர்களுக்கு வழிகாட்டலைச் செய்யக்கூடியவகையிலும், முடியுமானவரை சாதகமாகவும், விரைவாகவும் அதிகாரிகள் தீர்வுகளை வழங்க வேண்டும் … Read more

ஜனாதிபதி தொழிற்சங்கப் பணிப்பாளர் நாயகமாக சமன் ரத்னப்பிரிய நியமிக்கப்பட்டுள்ளார்.

தொழிற்சங்க செயற்பாட்டாளரான திரு.சமன் ரத்னப்பிரிய அவர்கள், ஜனாதிபதி தொழிற்சங்கப் பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ளார். அரசியலமைப்பின் 41(1) சரத்தின் பிரகாரம் ஜனாதிபதி அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைவாக ஜனாதிபதி அவர்களின் பணிப்புரைக்கமைய, ஜனாதிபதியின் செயலாளர் திரு.சமன் ஏக்கநாயக்கவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ஊடகப் பிரிவு 2022-08-02  

சர்வகட்சி அரசாங்கத்துக்கான பேச்சுவார்த்தை ஆரம்பம். சர்வகட்சி ஆட்சி  தொடர்பில் மக்கள் அதிக நம்பிக்கையுடன்  எதிர்பார்த்துள்ளனர் –  ஜனாதிபதி தெரிவிப்பு.

மகாசங்கத்தினர் தலைமையிலான மதத் தலைவர்கள், சிவில் அமைப்புகள், இளைஞர் குழுக்கள் உட்பட பொதுமக்கள் அனைவரும் சர்வகட்சி அரசாங்கத்தின் மீது பலமான நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் கொண்டுள்ளனர் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் தெரிவித்தார். சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில் அரசியல் கட்சிகளுடன் இன்று (02) இடம்பெற்ற கலந்துரையாடலில் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அரசியல் கட்சிகளுடன் பல சுற்று பேச்சுவார்த்தை இன்று ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஆளும் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் … Read more

கொவிட் ஆபத்து மீண்டும் அதிகரிக்கிறது. உடனடியாக தடுப்பூசி ஏற்றிக்கொள்ளுங்கள். ஜனாதிபதி மக்களிடம் வேண்டுகோள்.

கொவிட் ஆபத்து மீண்டும் அதிகரித்து வருவதால், கூடிய விரைவில் தடுப்பூசிகளை ஏற்றிக்கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் இன்று (02) விசேட அறிக்கையொன்றை வெளியிட்டு, மக்களைக் கேட்டுக்கொண்டார். சுகாதார அமைச்சு இது தொடர்பில் விசேட கவனம் செலுத்தி சுகாதார வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளதுடன், அந்த அறிவுறுத்தல்களை முறையாகப் பின்பற்றுமாறு மக்களைக் கேட்டுக்கொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள், நாட்டில் மீண்டும் கொவிட் தொற்று பரவுவதற்கு இடமளிக்கக் கூடாது என வலியுறுத்தினார். கொவிட் மற்றும் குரங்கம்மை தொற்று நிலைமை தொடர்பில் … Read more

பெரும் போகத்திற்கு பின்னர் கோழி இறைச்சி விலை குறைவடையும்

பெரும் போகத்தில் 60,000 ஹெக்டெயர் சோளத்தை பயிரிட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். கால்நடைகளின் உணவுக்காக பயன்படுத்தப்படும் சோளம் பற்றாக்குறை காரணமாக தற்போது பால், முட்டை மற்றும் கோழி இறைச்சி ஆகியவற்றின் விலைகள் வேகமாக அதிகரித்து வருகின்றன. இறக்குமதிக்கு போதிய அந்நிய செலாவணி இல்லாததாலும், சோளம் விளையும் நாடுகள் தங்கள் பொருட்களை ஏற்றுமதி செய்யாததாலும் கால்நடைகளுக்கான உணவு பற்றாக்குறை நிலவுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். இதனால், எமது நாட்டுக்குத் தேவையான சோளத்தை பயிரிடுவதைத் தவிர … Read more

கொவிட் ஆபத்து மீண்டும் அதிகரிக்கிறது,உடனடியாக தடுப்பூசி ஏற்றிக்கொள்ளுங்கள், ஜனாதிபதி மக்களிடம் வேண்டுகோள்.

கொவிட் ஆபத்து மீண்டும் அதிகரித்து வருவதால், கூடிய விரைவில் தடுப்பூசிகளை ஏற்றிக்கொள்ளுமாறு  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் இன்று (02) விசேட அறிக்கையொன்றை வெளியிட்டு, மக்களைக் கேட்டுக்கொண்டார். சுகாதார அமைச்சு இது தொடர்பில் விசேட கவனம் செலுத்தி சுகாதார வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளதுடன், அந்த அறிவுறுத்தல்களை முறையாகப் பின்பற்றுமாறு மக்களைக் கேட்டுக்கொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள், நாட்டில் மீண்டும் கொவிட் தொற்று பரவுவதற்கு இடமளிக்கக் கூடாது என வலியுறுத்தினார். கொவிட் மற்றும் குரங்கம்மை தொற்று நிலைமை தொடர்பில் … Read more

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பெருந்தொகை தங்கம் மற்றும் தொலைபேசிகள் பறிமுதல்: இரு பெண்கள் உட்பட அறுவர் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பெருந்தொகை தங்கம் மற்றும் தொலைபேசிகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன. வரி செலுத்தப்படாத 03 கிலோவுக்கும் அதிகமான தங்கம் மற்றும் 39 ஐபோன் வகை கையடக்கத் தொலைபேசிகள் குற்ற புலனாய்வு அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவத்துடன் தொடர்புடைய இரு பெண்கள் உட்பட 06 சந்தேக நபர்கள் கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்தில் வைத்து குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். டுபாயில் இருந்து வந்தவர்கள்  டுபாயில் இருந்து இன்று அதிகாலை வந்தவர்களிடம் … Read more

பொருட்களின் விலை அதிகரிப்பினால், மக்கள் எதிர்கொண்டுள்ள இன்னலை ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டியுள்ளேன்

பொருட்களின் விலை அதிகரிப்பினால் பொது மக்கள் எதிர்கொண்டுள்ள இன்னலை ஜனாதிபதியிடம் தான் சுட்டிக்காட்யிருப்பதாகவர்த்தகம், வணிகம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்திற்கு இன்று (02) மேற்கொண் உத்தியோகபூர் விஜயத்தின் போது நுகர்வோர் மத்தியில் அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார். இந்த விஜயத்தின் போது அமைச்சர் இ கள்ளியங்காடு பகுதியில் அமைக்கப்பட்டுவரும் சத்தோச மொத்த விற்பனை நிலையத்தை பார்வையிட்டார். கள்ளியங்காடு பகுதியில் அமைக்கப்பட்டுவரும் சதோச மொத்த விற்பனை நிலையத்தை பார்வையிட்டதுடன், அதற்கு அருகாமையில் தற்காலிகமாக நிறுவப்பட்டுள்ள … Read more

அன்னையர்களுக்கான திரிபோஷா

பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு தேவையான திரிபோஷாவை சுகாதார மற்றும் வைத்திய அதிகாரிகளின் அலுவலகங்கள் ஊடாக இந்த வாரத்திற்குள் வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை திரிபோஷ நிறுவனம் தெரிவித்துள்ளது. பாலூட்டும் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்களுக்குத் தேவையான சுமார் 720,000 திரிபோஷ பொதிகளை தமது நிறுவனம், தற்போது தயாரித்துள்ளதாக அதன் தலைவர் தீப்தி குலரத்ன தெரிவித்துள்ளார். அத்துடன், எதிர்வரும் சில வாரங்களில் குழந்தைகளுக்கு தேவையான திரிபோஷாவை உற்பத்தி செய்ய முடியும் என்று நிறுவனத்தின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதியின் தனிப்பட்ட இல்லத்திற்கு தீ : மேலும் 03 பேர் கைது

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கொள்ளுப்பிட்டியில் உள்ள தனிப்பட்ட இல்லத்திற்குள் அத்துமீறி நுழைந்து சொத்துக்களுக்கு தீ வைத்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் மூவரை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். பிலியந்தலை மற்றும் நாரஹேன்பிட்டி பிரதேசங்களில் வைத்தே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 18 மற்றும் 22 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனவும் ,அவர்கள் மடபான மற்றும் கொழும்பு 05 பிரதேசங்களை சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக … Read more