மட்டக்களப்பு கொத்துக்குளம் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய ஆடிப்பூர பால்குட பவனி

கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு கொத்துக்குளம் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய ஆடிப்பூர பால்குட பவனி (01) சிறப்பாக இடம்பெற்றது. மாரசூரனை வதைத்து மாரியம்மன் எனப் பெயர் கொண்ட உலகமெல்லாம் இரட்சத்துவரும் அன்னை மாரியம்மன் அகல் விளக்கு எரியவைத்த காலத்துக்கு முந்திய காலமாக மட்டக்களப்பில் அருள்பாலித்துவருகின்ற அம்பாளின் ஆடிப்பூர பால்குட பவனி ஆலய பிரதம குரு ஸ்ரீ நிஜோத் குருக்களின் தலைமையில் விநாயர் வழிபாடுகளுடன் ஆரம்பமாகி விசேட கும்ப பூஜைகள் நடைபெற்றது. மட்டக்களப்பு ஆணைப்பந்தி ஆலயத்தில் இருந்து … Read more

புதிய அமைச்சுப் பொறுப்பை ஏற்றார் நிமல்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் சிறிபால டி சில்வா துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சராக இன்று  பதவிப் பிரமானம் செய்து கொண்டார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இவர் இந்த அமைச்சு பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். நிமல் சிறிபால டி சில்வாவுக்கு எதிரான இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட அதிபர் குழு குற்றச்சாட்டில் இருந்து அவரை விடுவித்ததை அடுத்து நிமல் சிறிபால டி சில்வா அமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டார். குற்றமற்றவர் என … Read more

கோட்டாபயவின் இலங்கை விஜயம் தொடர்பில் வெளியான புதிய தகவல்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எதிர்வரும் 11ம் திகதி நாடு திரும்ப உள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. கட்டுநாயக்க விமான நிலையத்தில் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் கோட்டாபய ராஜபக்ச நாட்டிற்குள் அழைத்து வரப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கோட்டாபயவின் இலங்கை விஜயம் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவின் வீசா காலம் எதிர்வரும் 11ம் திகதியுடன் முடிவடைகின்றது. தனது மனைவியுடன் அமெரிக்கா செல்வதற்கு விடுத்த கோரிக்கையை அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் நிராகரித்துள்ளது என குறித்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறெனினும் … Read more

உடனடியாக இரத்துச் செய்யப்படும் சுற்றறிக்கை! அரச ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு

அரச ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள வெள்ளிக்கிழமை விடுமுறை தொடர்பில் தகவலொன்று வெளியாகியுள்ளது. அதன்படி விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காக அரச ஊழியர்களுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை என்ற சுற்றறிக்கையை உடனடியாக இரத்துச் செய்ய அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. வெள்ளிக்கிழமை விடுமுறை எரிபொருள் நெருக்கடி காரணமாக அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய அனைத்து சேவைகளுக்கும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் பொது அலுவலக விடுமுறையாக பிரகடனப்படுத்தப்பட்டிருந்தது. விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நோக்கிலேயே அரச ஊழியர்களுக்கு நான்கு நாள் வேலை வாரத்திற்கு முன்னதாக அமைச்சரவை அனுமதி வழங்கியிருந்தது. … Read more

இலங்கையில் கொவிட் ஓமிக்ரான் பிஏ5 (B.A5)

உலகில் மிக வேகமாக பரவும் கொவிட் ஓமிக்ரான் பிஏ5 (B.A5)வகை திரிபு கொழும்பு பிரதேசத்தில் பரவ ஆரம்பித்துள்ளதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை நோயெதிர்ப்பு மற்றும் உயிரியல் துறையின் பேராசிரியர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார். இந்த வைரஸ் திரிபு, முதன்முறையாக இலங்கையில் பதிவாகியுள்ளது. எதிர்காலத்தில் அதிகளவான நோய்த்தொற்றாளர்கள் பதிவாகலாம். கடந்த சில மாதங்களாக உலகம் முழுவதும் கொவிட் அலையை உருவாக்குவதில் இந்த திரிபு தாக்கம் செலுத்தியுள்ளதாக பேராசிரியர் சுட்டிக்காட்டியுள்ளார். ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தினால் மேற்கொள்ளப்பட்ட சமீபத்திய மரபணு … Read more

மலையக பிரதேசங்களில் கடும் மழை ,காற்றுடன் கூடிய காலநிலை: மண்சரிவு, வெள்ளத்தால் பாதிப்பு

மலையக பிரதேசங்களில் கடும் மழை மற்றும் பலத்த காற்றுடன் கூடிய காலநிலை தெடர்கிறது. இதன் காரணமாக பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்குடன் பாரிய மண்சரிவுகளும் ஏற்பட்டுள்ளன. நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பேலி வீதி, பவ்வாகம, சேலம் பிரிட்ஜ், ஓவிட்ட, அயன்போட் ஆகிய பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. பிரதான வீதிகளும், குடியிருப்புகளும் பாதிக்கப்பட்டுள்ளன. மழை காரணமாக இப்பகுதியில் 100ற்கும் மேற்பட்ட வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.. நாவலப்பிட்டி பகுதியில் உள்ள மகாவெலி பவ்வாகம ஆற்றில் நீரின் மட்டம் அதிகரித்துள்ளது. பாதிக்கப்பட்டோர் உறவினர்கள் வீடுகளிலும், … Read more

இரத்தினபுரி மாவட்டத்திலும் கன மழை:வெள்ள நிலை பிரகடனம்

இரத்தினபுரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவரும் அடை மழை காரணமாக மாவட்டத்தில் பல தாழ்நிலப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. களு கங்கை பெருக்கெடுத்து ஓடுவதால் இரத்தினபுரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சிறு வெள்ளம் ஏற்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. உற்பத்திகளும் பாதிக்கப்பட்டுள்ளன. . கலவான குகுலே ஆற்றின் நீர்மட்டமும் அதிகரிது;துள்ளது. கங்கை எலதோலைக்கு அருகாமையிலும் மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகளிலும் அவதானமாக இருக்குமாறு இரத்தினபுரி மாவட்ட செயலாளர் பொது மக்களை கேட்டுக்கொண்டுள்ளார். களு கங்கை … Read more

சர்வகட்சி ஆட்சிக்கு பலமான சக்தியொன்றைக் கட்டியெழுப்புவோம் – ஜனாதிபதி

மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்து, நாட்டைக் கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றிணைந்தால் மட்டுமே முடியும் என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள், சர்வகட்சி ஆட்சி ஒன்றுக்காக பலமான சக்தியொன்றைக் கட்டியெழுப்புவதற்கு அனைத்துக் கட்சிகளின் மக்கள் பிரதிநிதிகளையும் ஒன்றிணையுமாறு அழைப்பு விடுப்பதாக கண்டியில் தெரிவித்தார். இரண்டு கட்சிகளுக்கு மட்டுப்படுத்தப்படாமல் அனைவரும் ஒன்றிணைந்து, அதற்காக மௌனம் காக்காமல், நாட்டின் உண்மை நிலையை மக்களுக்கு விளக்கி, நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு அணியாக ஒன்றிணைந்து புதிய வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்கு முன்வர வேண்டும் எனவும் ஜனாதிபதி அவர்கள் … Read more

கிழக்கு மாகாண விளையாட்டு விழாவில் மட்டக்களப்பு மாவட்டம் சாதனை

2022 ஆண்டிற்கான கிழக்கு மாகாண விளையாட்டு விழா பாசிக்குடா கடற்கரையில் (30)  இடம்பெற்றது. இதில் கடற்கரை கபடிப் போட்டியில் மட்டக்களப்பு மாவட்டம் சார்பாக கோரளைப்பற்று தெற்கு பிரதேச செயலக பிரிவு  பெண்கள் அணியின் முதலாம் இடத்தினை தம்வசப்படுத்தி மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர். இப்போட்டித் தொடரானது கிழக்கு மாகாண விளையாட்டுத் திணைக்களத்தின் பணிப்பாளர் என்.எம்.நௌபீஸ் தலைமையில் மட்டக்களப்பு பாசிக்குடாவில் நடைபெற்றுள்ளது. விளையாட்டு விழாவில் மட்டக்களப்பு மாவட்ட ஆண்கள் அணியை பிரதிநிதித்துவப்படுத்திகடற்கரை கபடிப் போட்டியில் பங்கேற்ற மண்முனை வடக்கு மற்றும் … Read more