காலி முகத்திடலில் கரையொதுங்கிய சடலங்கள் – பொலிஸார் வெளியிட்ட தகவல்

காலி முகத்திடல் கடற்கரையில் நேற்று காலை நபரொருவரின் சடலம் கரையொதுங்கியிருந்த நிலையில், சடலம் இதுவரையில் அடையாளம் காணப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரத்தில் காலி முகத்திடலில் கடற்கரையில் கரையொதுங்கிய இரண்டாவது சடலம் இதுவென பொலிஸார் தெரிவிக்கின்றனர். நேற்று கண்டெடுக்கப்பட்ட சடலம் 40 வயது மதிக்கத்தக்க நபருடையது என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. காலிமுகத்திடலில் போராட்ட இடத்திற்கு அருகில் உள்ள கடற்கரை பகுதியில் சடலம் கரையொதுங்கியமை குறித்து பல்வேறு தரப்பினர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். நேற்று காலை … Read more

கொழும்பு மாநகர பகுதிக்குள் அனைவரும் முக கவசம் அணிய வேண்டும்

கொழும்பு மா நகர எல்லை பகுதிக்குள் நடமாடும் அனைவரும் முக கவசம் அணிய வேண்டும் என கொழும்பு மா நகர சபையின் பிரதம வைத்திய அதிகாரி ருவன் விஜயமுனி வேண்டுகோள் விடுத்துள்ளார். கொழும்பு மா நகர எல்லையில் கடமைக்காக வருபவர்கள் மற்றும் கொழும்பு நகர எல்லையில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசையில் காத்திருப்பவர்கள் , அனைவரும் முகக் கவசம் அணிய வேண்டும். கொழும்பு நகர எல்லையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை, பாரிய அளவு அதிகரித்துள்ளமையால் அவர் இந்த … Read more

கால்நடை உணவு உற்பத்திக்காக அரிசியை பயன்படுத்திய நிறுவனம்

  சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட அரிசியை கால்நடை உணவு உற்பத்திக்காக பயன்படுத்தியதாகக்கூறப்படும் இ குருநாகல் கீனகஸ்பிட்டிய பிரதேசத்தில் இயங்கி வரும் கால்நடை உணவு உற்பத்தி நிறுவனமொன்றை நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை அதிகாரிகள் சோதனையிட்டுள்ளனர்.   அங்கு இருந்து 3இ057 மெட்ரிக் தொன் அரிசியை அதிகாரிகள் கைப்பற்றியதாக வர்த்தகஇ வணிக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.   இது தொடர்பில் எதிர்வரும் 5ஆம் திகதி குருநாகல் நீதவான் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளதாக நுகர்வோர் பாதுகாப்பு அதிகார … Read more

குழந்தைகளுக்கான பிறப்புச் சான்றிதழில், தேசிய அடையாள இலக்க உள்ளீடு நடைமுறை

பிறக்கும் குழந்தைகளுக்கான பிறப்புச் சான்றிதழில், தேசிய அடையாள இலக்கத் Sri Lankan Identification Number/SLIN தை உள்ளீடு செய்யும் நடைமுறை, இன்று (01) முதல் ஆரம்பிக்கப்படுவதாக, ஆட்பதிவு திணைக்களம் அறிவித்துள்ளது. கடந்த 2021 டிசம்பர் 14 திகதி அமைச்சரவை தீர்மானத்துக்கமைய, குழந்தை பிறக்கும்போது , பதிவாளர் நாயகம் திணைக்களத்தினால் வழங்கப்படும் பிறப்புச் சான்றிதழில், ஆட்பதிவு திணைக்களத்தினால் வழங்கப்படும் தேசிய அடையாள இலக்கம் உள்ளீடு செய்யப்படவுள்ளது. மேற்படி இரு திணைக்களங்களுக்கும் இடையில் இணையம் மூலம் தகவல்கள் பரிமாற்றம் இடம்பெறும். … Read more

எரிபொருள் அனுமதி பதிவு:எண்ணிக்கை 5 மில்லியனுக்கும் மேல்

தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்திற்கு பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை ஐந்து மில்லியனைத் தாண்டியுள்ளது. மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர நேற்று காலை தனது டுவிட்டர்பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த முறையை நடைமுறைப்படுத்துவதற்கு ஆதரவளித்த சகல தரப்பினருக்கும் QR  குறியீடுகளை  பின்பற்றிய அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் அந்த டுவிட்டர் பதிவில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை, இன்று முதல் QR முறையின் ஊடாக மட்டுமே நாடளாவிய ரீதியில் எரிபொருள் விநியோகம் இடம்பெறுகிறது.. சில பகுதிகளில் வழமை போன்று நீண்ட வரிசைகள் … Read more

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகை மீண்டும் அதிகரிப்பு

இலங்கைக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருவதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. ஜூலை மாதத்தில் சுமார் 43,000 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக அதன் பணிப்பாளர் நாயகம் தம்மிக்கா விஜேசிங்க குறிப்பிட்டுள்ளார். இலங்கைக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின், சுற்றுலா ஹோட்டல்களின் மின் பிறப்பாக்கிகள் உள்ளிட்ட பிற தேவைகளுக்கும் எரிபொருளை வழங்கும் முறை தற்போது நடைமுறையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இம்மாதத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகை மேலும் … Read more

தொடரும் சீரற்ற காலநிலை! இருவர் மரணம்: பலர் பாதிப்பு(Video)

நுவரெலியா மாவட்டத்தில் நேற்று (31) இரவு தொடக்கம் பெய்து வரும் கடும் மழையினால் இருவர் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் காணாமல் போயுள்ளார். நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. தொடருந்து சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது. பொது போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், கினிகத்தேனை, பொல்பிட்டிய, ஹிட்டிகேகம, பொகரவெவில பிரதேசத்திலிருந்து பாயும் களனி கங்கையின் கிளை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் பாட்டியும் (60) மற்றும் பேத்தியும் (05) சிக்குண்டு வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். முன்பள்ளிக்குச் சென்ற பேத்தியுடன் வீடு திரும்பிய போது இருவரும் … Read more

சட்டவிரோதமாகப் பிரான்ஸ் செல்ல முற்பட்ட 47 பேர் வசமாகச் சிக்கினர்

சட்டவிரோதமாகப் படகு மூலம் பிரான்ஸுக்குச் செல்ல முற்பட்ட 47 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். வென்னப்புவ பிரதேசத்தில் கடற்படை மற்றும் வென்னப்புவ பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின்போதே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கடற்படையினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கு கடற்படை கட்டளை மற்றும் வென்னப்புவ பொலிஸாரால் நேற்றிரவு கூட்டுத் தேடுதல் நடவடிக்கை ஆரம்பமானது. 47 பேரும் கைது  இந்நிலையில், வென்னப்புவ நகரில் இன்று அதிகாலை சந்தேகத்துக்கிடமான 3 வான்களைச் சோதனையிட்டதன் பின்னர் கடல் வழியாக பிரான்ஸுக்குச் சட்டவிரோதமாக குடியேற முயற்சித்தனர் எனச் … Read more