ஜனாதிபதிக்கு பாகிஸ்தான் ஜனாதிபதியிடமிருந்து வாழ்த்து

ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கு, பாகிஸ்தான் ஜனாதிபதி கலாநிதி அரீப் அல்வி (Arif Alvi) அவர்கள் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். ஜனாதிபதி அவர்களுக்கு இன்று, (01) விசேட வாழ்த்துச் செய்தியை தெரிவித்துள்ள பாகிஸ்தான் ஜனாதிபதி அவர்கள், இரு நாடுகளுக்கிடையில் நிலவுகின்ற உறவை இரு நாட்டினதும் முன்னேற்றத்திற்காக மேலும் வலுப்படுத்துவதே தமது எதிர்பார்ப்பாகும் எனக் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களின் தலைமையின் கீழ், இலங்கை தற்போதுள்ள பொருளாதார சவால்களை வெற்றிகொள்ளும் எனக் குறிப்பிட்டுள்ள அரீப் … Read more

கொத்து உள்ளிட்ட உணவுகளின் விலை அதிகளவில் குறையும் வாய்ப்பு

கொத்து மற்றும் ப்ரைட் ரைஸ் உள்ளிட்ட  உணவுப் பொருட்களின் விலை குறைக்கப்படும் என்று  அறிவிக்கப்பட்டுள்ளது.   எரிபொருளின் விலை குறைக்கப்பட்டால் இவ்வாறு உணவுப் பொருட்களின் விலை குறைக்கப்படும் என்று உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.  உணவுப் பொருட்களின் விலை அதிகளவில் குறையும்..  இதன்படி, உணவங்களில் விற்கப்படும் உணவு மற்றும் பானங்களின் விலை 20 சதவீதம் குறைக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  எரிவாயு விநியோகம் … Read more

தென்மேற்கு பருவகால நிலை:எதிர்வரும் 06ஆம் திகதிவரை மழை

தென்மேற்கு பருவகால நிலை  காரணமாக இன்று (01) முதல் எதிர்வரும் 06ஆம் திகதி வரை நாட்டின் பல பாகங்களிலும் மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் மெரில் மெண்டிஸ் தெரிவித்தார். சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் ஓரளவு மழை பெய்யக் கூடுமென எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் கூறினார். அத்துடன், இந்த நாட்களில் 50 முதல் 60 மில்லிமீற்றர் மழை பெய்யக்கூடும் எனவும், நீர்த்தேக்கங்களை அண்மித்த பகுதிகளிலும் மழை பெய்யக் கூடும் … Read more

இலங்கையில் இன்று முதல் புதிய நடைமுறை! ஆட்பதிவு திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பு

இலங்கையில் இன்று முதல் ஆரம்பிக்கப்படும் புதிய நடைமுறை தொடர்பில் ஆட்பதிவு திணைக்களம் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி புதிதாக பிறக்கும் குழந்தைகளுக்கான பிறப்புச் சான்றிதழில், தேசிய அடையாள இலக்கத்தை உள்ளீடு செய்யும் நடைமுறை இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிறப்புச் சான்றிதழில் தேசிய அடையாள இலக்கம் குழந்தை பிறப்பின் போது, பதிவாளர் நாயகம் திணைக்களத்தினால் வழங்கப்படும் பிறப்புச் சான்றிதழில், ஆட்பதிவு திணைக்களத்தினால் வழங்கப்படும் தேசிய அடையாள இலக்கம் உள்ளீடு செய்யப்படவுள்ளது. குறித்த இரு திணைக்களங்களுக்கும் இடையில் இணையம் மூலம் … Read more

எரிபொருள் விநியோகம் தொடர்பில் எரிசக்தி அமைச்சர் வெளியிட்டுள்ள புதிய தகவல்

எரிபொருள் விநியோகத்தின் போது இடம்பெறும் மோசடிகள் தொடர்பில் முறைப்பாடு செய்வதற்கு விசேட தொலைபேசி இலக்கம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தேசிய எரிபொருள் உரிமத்தின் கியூ.ஆர் இலக்கத்திற்கு புறம்பான வகையில் இடம்பெறக்கூடிய முறைகேடுகள் குறித்து இவ்வாறு முறைப்பாடு செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முறைகேடுகள் முறைகேடுகள் பற்றிய புகைப்படங்கள் காணொளிகள் என்பவற்றை 0742123123 என்ற இலக்கத்திற்கு அனுப்பி வைக்க முடியும் என மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். கியூ.ஆர் அட்டைகளுக்கு புறம்பாக எரிபொருள் விநியோகம் செய்தல், … Read more

லிட்ரோ எரிவாயு விலை குறைப்பு தொடர்பில் சற்றுமுன் வெளியான அறிவிப்பு

லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை எதிர்வரும் 5ஆம் திகதி முதல் குறைக்கப்படுவதாக சற்றுமுன் அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது.  இந்த விடயத்தை லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் அறிவித்துள்ளார். உலக சந்தையில் நிலவும் எரிவாயு விலைக்கு ஏற்ப இந்த விலை குறைப்பு முன்னெடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.  எரிபொருள் விலையில் திருத்தம் இதேவேளை ஒவ்வொரு மாதமும் இரண்டு தடவைகள் எரிபொருள் விலையில் மாற்றங்களை அறிவிப்பதற்கு அமைச்சு தீர்மானித்துள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்திருந்தார். அதன்படி ஒவ்வொரு மாதமும் முதலாம் … Read more

இந்தியாவில் குரங்கம்மை நோய்: வாலிபர் உயிரிழப்பு

இந்திய மாநிலமான கேரளாவில் குரங்கம்மை நோய் அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வாலிபர் இறந்துள்ளதாக இந்திய ஊடகமொன்று தெரிவித்துள்ளது. உலகளவில் 75க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ள குரங்கம்மை நோய் இந்தியாவிலும் பரவ ஆரம்பித்துள்ளது. கடந்த மாதம் துபாயிலிருந்து கேரளா வந்த கொல்லத்தை சேர்ந்த 35 வயதான வாலிபருக்கு இந்த நோய் உறுதி செய்யப்பட்டது. அதன் பிறகு மலப்புரம், கண்ணூரை சேர்ந்த மேலும் 2 பேருக்கும் இந்த நோய் பரவியது. இந்நிலையில், கடந்த மாதம் 21ம் தேதி துபாயிலிருந்து வந்த … Read more

மேல் மாகாண பாடசாலை மாணவர்களுக்கு இன்று முதல் புதிய பஸ் சேவை

பாடசாலை மாணவர்களுக்கான புதிய பஸ் சேவை இன்று முதல் ஆரம்பமாகிறது. இதன்படி, முதற்கட்டமாக மேல் மாகாணத்தை கேந்திரமாகக்கொண்டு இந்த பஸ் சேவை இடம்பெறவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் கலாநிதி நிலான் மிரண்டா தெரிவித்தார். கம்பஹா, ஹொரணை, களுத்துறை ஆகிய பிரதேசங்களில் மாணவர்கள் பாடசாலைக்கு செல்வதற்காக இந்த பஸ் சேவை முதற்கட்டமாக ஆரம்பிக்கப்படவுள்ளது. பாடசாலை மாணவர்களின் போக்குவரத்திற்காக இன்றில் இருந்து மேலும் 40 பஸ் கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாக ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். தற்சமயம் சிசுசெரிய … Read more

சேவையில் இருந்து அகற்றப்பட்ட 800 பஸ்கள் மீண்டும் சேவையில்

சேவையில் இருந்து அகற்றப்பட்ட 800 பஸ்கள் இன்று (01)  முதல் மீண்டும் சேவையில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளன. இதுதொடர்பாக போக்குவரத்து மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவிக்கையில் ,டயர் மற்றும் உதிரிப்பாகத் தட்டுப்பாட்டினால் இந்த பஸ்கள் சேவையில் இருந்து அகற்றப்பட்டிருந்ததாக தெரிவித்தார். 105 டிப்போக்களில் இந்த பஸ்கள் பழுதடைந்த நிலையில் நிறுத்தப்பட்டிருந்தன. இவ்வாறான பின்னணியில் தற்போது குறித்த பஸ்கள் செப்பனிடப்பட்டு சேவையில் ஈடுபடுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது..