தற்போதைய எதிர்பாராத பொருளாதார நெருக்கடியை வெற்றிகொள்வதில் பொருளாதாரத்தின் அனைத்து ஆர்வலர்களும்; ‘நியாமாக நடந்தகொள்வதன்’ முக்கியத்துவம்

பொதுமக்கள் மீதான தற்போதைய பொருளாதார இன்னல்களின் சுமையினைத் இலகுபடுத்துவதற்கு அரசாங்கமும் இலங்கை மத்திய வங்கியும் பல்வேறு வழிமுறைகளை நடைமுறைப்படுத்தி வருகின்றன. வங்கித்தொழில் முறைமையில் காணப்படும் வெளிநாட்டுச் செலாவணி திரவத்தன்மை பற்றாக்குறை பொருளாதார நெருக்கடிக்கும் அதன் விளைவான இன்னல்களுக்கும் பங்களிக்கின்ற முக்கிய காரணியாக விளங்குகின்றது. அத்தகைய வெளிநாட்டுச் செலாவணி திரவத்தன்மை பற்றாக்குறையானது எரிபொருள் உள்ளடங்கலாக அத்தியாவசியப் பொருட்களின் இறக்குமதியினையும் பாதித்துள்ளது. வங்கித்தொழில் முறைமையில் போதுமான வெளிநாட்டுச் செலாவணி திரவத்தன்மையினை உறுதிசெய்யும் பொருட்டுஇ ஏற்றுமதி வருவாய்கள் மீதான ஒப்புவித்தல் தேவைப்பாடுகளை … Read more

இலங்கையில் மீண்டும் கலவரம் வெடிக்கலாம் என்று சந்தேகம்! ரணிலை சந்திக்க தயாராகும் ராஜபக்சர்கள்

இலங்கையில் நாளுக்கு நாள் புதுப் புது மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றது. சமூக, அரசியல் மற்றும் பொருளாதார ரீதியிலான நகர்வுகள், சர்வதேசம் திரும்பிப் பார்க்கும் வகையிலான அரசியல் மாற்றங்களும் அரங்கேறி வருகின்றன. இந்த நிலையில் இன்று எமது தளத்தில் அதிகளவான செய்திகளை நாங்கள் பிரசுரித்திருந்தோம். அவற்றுள் நீங்கள் தவறவிட்ட முக்கிய செய்திகளை விசேட தொகுப்பாக உங்களுக்கு தருகின்றோம். நீங்கள் தவறவிட்ட செய்திகளை கட்டாயம் படிக்கவும். 3 1 இலங்கையில் ஏற்பட்டுள்ள விமானங்களுக்கான எரிபொருள் பிரச்சினையை இலங்கை விமான நிலையம் மீளக் … Read more

ரணிலின் சதுரங்க ஆட்டம்: விழித்தெழ வேண்டிய தமிழ் மக்கள்

“அரசியல் என்பது சதுரங்கத்தை விட மேலானது. அது துடுப்பாட்டத்தைப் போல ஒரு குழுச்செயற்பாடு. மரதன் ஓட்டத்தைப்போல அதற்கு ஒரு திராணி இருக்க வேண்டும். நீங்கள் ஞாபகத்தில் வைத்திருக்கவேண்டும். அது ரகர் விளையாட்டைப் போல கடினமானது, குத்துச்சண்டையைப் போல, ரத்த விளையாட்டு.”இது ரணில் விக்ரமசிங்க கூறியது. அவர் சதுரங்கம் விளையாடுவது போன்ற ஒரு காணொளியின் பின்னணியில் இவ்வாறு கூறுகிறார். இந்த வசனங்களை அவருக்கு எழுதிக் கொடுத்தது தமிழ் ஊடக முதலாளியான ராஜமகேந்திரன் என்று அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகிறார்கள். இப்பொழுது … Read more

இலங்கை மக்களுக்கு தொடரும் நெருக்கடி! அரைநாள் மின்சாரம் தடைப்படலாம்

வருட இறுதியில் அரை நாள் (12 மணி நேரம்) மின்சாரம் துண்டிக்கப்படும் அபாயம் உள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.  எதிர்வரும் செப்டெம்பர் மாதத்தின் பின்னர் போதிய நிலக்கரி கிடைக்காவிடின், நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் மின் உற்பத்தியில் தடங்கல் ஏற்படும் என  அவர் குறிப்பிட்டுள்ளார். இதன் காரணமாக 12 மணி நேர மின்வெட்டு நடைமுறைப்படுத்த வேண்டிய இக்கட்டான நிலைக்கு முகம்கொடுக்க வேண்டியிருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.   நிலக்கரியின் விலை மும்மடங்கு அதிகரிப்பு … Read more

2022 பொதுநலவாய விளையாட்டு போட்டியில் இலங்கைக்கு முதலாவது  பதக்கம்

2022 பொதுநலவாய விளையாட்டு போட்டியில் இலங்கைக்கு முதலாவது  பதக்கத்தை திலங்க இசுரு குமார பெற்றுக்கொடுத்துள்ளார். ஆண்களுக்கான பளுதூக்கும் போட்டியில்  55 கிலோ எடைப்பிரிவிலேயே இசுரு குமார வெண்கல பதக்கத்தை பெற்றார். இங்கிலாந்தின் பர்மிங்காமில் நடைபெறும் பொதுநலவாய விளையாட்டு போட்டியில் இலங்கைக்கு கிடைத்துள்ள முதல் பதக்கம் இதுவாகும். இங்கிலாந்து பர்மிங்காமில் ‘2022கொமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள்’ வியாழக்கிழமை (28) பிரமாண்டமான முறையில் ஆரம்பமானது. இப் போட்டிகள் ஆகஸ்ட் 8வரை நடைபெறவுள்ளது. பர்மிங்காம் அலெக்சாண்டர் மைதானத்தில் நடைபெற்ற ஆரம்ப விழா பல சிறப்பம்சங்கள … Read more

துவிச்சக்கர வண்டிகளுக்கான, பிரத்தியேக ஒழுங்கை கொழும்பில் ஆரம்பம்

தற்போதைய எரிபொருள் மற்றும் போக்குவரத்து பிரச்சினைகளால், துவிச்சக்கரவண்டிகளின் பாவனையில் கணிசமான அதிகரிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், துவிச்சக்கரவண்டி பாவனையாளர்களுக்கு பிரத்தியேக ஒழுங்கை  முன்னோடித் திட்டத்தை கொழும்பு நகரசபை முன்னெடுத்துள்ளது. 29 ஆம் திகதி கொழும்பு வங்கி அவென்யூவுக்கு எதிரே இந்த முன்னோடித் திட்டத்தை கொழும்பு மாநகர முதல்வர் திருமதி.ரோஸி சேனாநாயக்க ஆரம்பித்துவைத்தார் வங்கி மாவத்தையில் துவிச்சக்கர வண்டிகளுக்கு பிரத்தியேக ஒழுங்கை  ஒதுக்கப்பட்டுள்ளதுடன், துவிச்சக்கர வண்டிகளை பாதுகாப்பாக நிறுத்துவதற்கு இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன வங்கி அவென்யூ முன்னோடித் திட்டத்திற்கு மேலதிகமாக, கொட்டாஞ்சேனை ஜோர்ஜ் … Read more

இந்திய ஜனாதிபதி,இலங்கை ஜனாதிபதிக்கு வாழ்த்து  

இந்தியாவின் புதிய ஜனாதிபதி திரௌபதி முர்மு, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு வாழ்த்துத் தெரிவித்து கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். இலங்கை மக்களுக்கான இந்தியாவின் அர்ப்பணிப்பானது அயலுறவுக்கு முதலிடம் கொள்கையால் வழிநடத்தப்படுவதாகவும் இந்தியாவின் புதிய ஜனாதிபதி  தெரிவித்துள்ளார்.   பொதுவான மரபுகள் மற்றும் இருநாடுகளினதும் மக்களிடையிலான ஆழமான உறவுகள் ஆகியவற்றின் அடிப்படையிலான, நீண்டகால இருதரப்பு பங்குடைமையானது மேலும் வலுவடையுமெனவும் இந்திய ஜனாதிபதி நம்பிக்கையை  குறித்த கடிதத்தில் வெளிப்படுத்தியுள்ளார்.