மட்டக்களப்பில், துவிச்சக்கர வண்டிகளுக்கான,பிரத்தியேக ஒழுங்கை முறைமை

மட்டக்களப்பு மாவட்டத்தில் துவிச்சக்கர வண்டி பாவனை அதிகரித்துள்ள நிலையில் துவிச்சக்கர வண்டிகளுக்கான,பிரத்தியேக ஒழுங்கை அமுலாக்கும் முன்னோடி வேலைத்திட்டம் மட்டக்களப்பு மாநகர சபையினால் முன்னெடுக்கப்பட்டுவருவதாக மட்டக்களப்பு மாநகர சபையின் முதல்வர் தியாகராஜா சரவணபவன் தெரிவித்துள்ளார். குறித்த முன்னோடி வேலைத்திட்டத்தினை மட்டக்களப்பு மாநகர சபையுடன் மட்டக்களப்பு வீதி அபிவிருத்தி அதிகாரசபையும் இணைந்து முன்னெடுத்துவருகின்றன.

ஜனாதிபதி தலதா மாளிகைக்குச் சென்று சமயக்கிரியைகளில் ஈடுபட்டு ஆசி பெற்றார்…

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் இன்று (30) காலை கண்டி வரலாற்று சிறப்புமிக்க தலதா மாளிகைக்குச் சென்று சமயக்கிரியைகளில் ஈடுபட்டார். தலதா மாளிகைக்கு வருகை தந்த ஜனாதிபதி அவர்கள், கண்டி நகரபிதா திரு.கேசர சேனநாயக்க மற்றும் அமைச்சர்களினால் வரவேற்கப்பட்டு தலதா மாளிகையின் பிரதான நுழைவாயிலுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களை தியவடன நிலமே பிரதீப் நிலங்க தேல மற்றும் நான்கு மகா தேவாலய பஸ்நாயக்க நிலமேமார் வரவேற்றனர். அதன் பின்னர், தலதா மாளிகையில் புனித … Read more

சர்வகட்சி கூட்டத்தில் கலந்து கொள்ளப் போவதாக தமிழ் முற்போக்குக் கூட்டணியின் பிரதித் தலைவர் பழனி திகாம்பரம்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அழைப்பையேற்று சர்வகட்சி கூட்டத்தில் கலந்து கொள்ளப் போவதாக தமிழ் முற்போக்குக் கூட்டணியின் பிரதித் தலைவர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார். எனினும், எந்த முடிவை எடுத்தாலும், அதனைக் கூட்டணியாகவே எடுக்கப் போவதாகவும் திரு.திகாம்பரம் கூறியிருக்கிறார். நாட்டில் சமூக பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த தேசிய சர்வகட்சி வேலைத்திட்டத்தில் கலந்து கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று சகல பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுத்திருந்தார். அது பற்றி மலையகத்தை மையமாகக் கொண்ட ஊடகமொன்றிற்கு கருத்து வெளியிடுகையில், தமிழ் … Read more

அனைத்து அரசியல் கட்சிகளையும் ஒன்றிணைத்து சர்வகட்சி அரசாங்கம் ஒன்றை ஸ்தாபித்து நாட்டைக் கட்டியெழுப்புவதாக ஜனாதிபதி தெரிவிப்பு

அனைத்து அரசியல் கட்சிகளையும் ஒன்றிணைத்து, சர்வகட்சி அரசாங்கமொன்றை உருவாக்கி நாடு எதிர்நோக்கியுள்ள சமூக, பொருளாதார மற்றும் அரசியல் சவால்களை முறியடிப்பதற்கு புதிய பாதையில் பயணிப்பதே தமது நோக்கமாகும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் தெரிவித்தார். இன்று (30) பிற்பகல் மல்வத்து மகாநாயக்க அதி வணக்கத்திற்குரிய திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரர் உள்ளிட்ட மகாசங்கத்தினரை சந்தித்த ஜனாதிபதி அவர்கள், நாட்டை கட்டியெழுப்புவதற்காக அமுல்படுத்தப்படும் வேலைத்திட்டத்தில் மகாசங்கத்தினரின் ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் ஆவலுடன் எதிர்பார்ப்பதாக குறிப்பிட்டார். மல்வத்து, அஸ்கிரி மகாநாயக்க … Read more

பணவீக்கம் 2022 யூலையில் 60.8 சதவீதத்தைப் பதிவுசெய்தது

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (கொநுவிசு, 2013=100) ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம், 2022 யூனின் 54.6 சதவீதத்திலிருந்து 2022 யூலையில் 60.8 சதவீதத்திற்கு அதிகரித்தது. ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையிலான பணவீக்கத்தின் இவ்வதிகரிப்பானது உணவு மற்றும் உணவல்லா வகைகள் இரண்டினதும் மாதாந்த அதிகரிப்புக்களினால் தூண்டப்பட்டிருந்தது. அதற்கமைய, உணவுப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு), 2022 யூனின்; 80.1 சதவீதத்திலிருந்து 2022 யூலையில் 90.9 சதவீதத்திற்கு அதிகரித்த அதேவேளை, உணவல்லாப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு) 2022 யூனின் … Read more

Importance of ‘Fair Play’ by all Stakeholders of the Economy in Countering the Current Unprecedented Economic Crisis

The Government and the Central Bank of Sri Lanka (CBSL) have been implementing several measures to ease the burden of the current economic hardships on the people. One major factor that is contributing to the current crisis and the resultant hardships is the lack of foreign exchange liquidity in the banking system. Such shortage of … Read more

தேர்தலுக்கு முன்னர் மக்கள் எதிர்நோக்கும் நெருக்கடிகளுக்கு தீர்வு காண வேண்டும்

சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலை நடத்துவதற்கு நாட்டில் நிலவும் நெருக்கடிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது. நெருக்கடி நிலை முடிவுக்கு கொண்டுவரப்பட்டு, மக்களின் பிரச்சினைகSக்கு தீர்வு கிடைத்ததன் பின்னர் எந்த நேரத்திலும் தேர்தலை நடாத்துவதற்கு தயார் என அதன் தலைவர் நிமல் புஞ்சிஹேவா குறிப்பிட்டுள்ளார். தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்கள் மல்வத்து மற்றும் அஸ்கிரி மகாநாயக்கர்களை சந்தித்த பின்னர் நிமல் புஞ்சிஹேவா இவ்வாறு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார். “தேர்தலை நடத்துவதற்கே தேர்தல் ஆனைக்குழு இருக்கின்றது. எந்த … Read more

எதிர்வரும் 02 வாரங்கள் இலங்கைக்கு மிகவும் முக்கியமானவை – பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை

நிச்சயமற்ற அரசியல் சூழல், சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சுவார்த்தைகள், வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பு மற்றும் எரிபொருள் நெருக்கடி போன்ற காரணங்களால் இலங்கை ஒரு நெருக்கடியான சூழலை எதிர்கொண்டுள்ளது. இதன் காரணமாக எதிர்வரும் 02 வாரங்கள் இலங்கைக்கு மிகவும் முக்கியமானவை என பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இதனிடையே, இலங்கையின் திவால் நிலைக்கான காரணங்களில் சீனாவின் ஆதாயமற்ற திட்டங்களும், கடன் ஒப்பந்தங்களும் இருப்பதாக அமெரிக்கா எச்சரித்து வருகிறது. சர்வதேச நாணய நிதியத்துடனான (IMF) பேச்சுவார்த்தை இன்னும் சரியான உடன்பாடு இல்லாமல் … Read more

இலங்கையில் தயாரிக்கப்பட்ட முதலாவது மின்சார கார்

ஐடியல் மோட்டர்ஸ் நிறுவனம் இலங்கையில் தயாரிக்கப்பட்ட முதலாவது முழுமையான மின்சார மோட்டார் காரை (29) சந்தைக்கு அறிமுகம் செய்துள்ளது. இந்த காருக்கு ‘Ideal Moksha’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த புதிய Ideal Moksha கார், உலகம் முழுவதும் அதிக பிரபலம் பெற்ற ஆஸ்டின் மினி மொக் காரை போன்றது அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் நேர்த்தியான வடிவமைப்புகளை பயன்படுத்தி அதிக திருப்திகரமான ஓட்டுநர் அனுபவத்தை வழங்கும் வகையில் இந்த காருக்கு ‘Moksha’ என பெயரிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. Ideal Moksha … Read more