பொதுமக்களின் நியாயமான போராட்டங்களுக்கு செவிசாய்க்க தயார் – பிரதமர்

ஜனநாயக ரீதியில் போராட்டங்களை மேற்கொள்பவர்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்க சமகால அரசாங்கம் தயாராக இருப்பதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். போராட்டக்காரர்களுடன் இணைந்து அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண ஜனநாயக ரீதியில் செயற்பட அரசாங்கம் தயாராக உள்ளதாகவும், இன்று காலை (27) பாராளுமன்றத்தில்  தயாராக இருப்பதாகவும் பிரதமர் குறிப்பிட்டார் அமைதியான முறையில் போராட்டங்களில் ஈடுபடுபவர்களுடன் இணைந்து பணியாற்ற  ஆர்வமாக உள்ளபோதிலும், அவர்களின் வன்முறை செயற்பாடுகளை கண்டிப்பதாகவும் அத்துடன் இலங்கை எதிர்காலத்தில் சவாலான காலங்களை எதிர்கொள்ள உள்ளதாகவும், அதற்கான தீர்வுகளை பாராளுமன்றத்தினால் … Read more

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷவுக்கு  விதிக்கப்பட்ட பயணத்தடை நீடிப்பு

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ மற்றும் முன்னாள் அமைச்சர் பசில்  ராஜபக்ச ஆகியோருக்கு விதிக்கப்பட்ட சர்வதேச பயணத் தடையை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 2ஆம் திகதி வரை நீடிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  

கண்ணீர் புகை குண்டுகளுடன் இளைஞர் கைது

கடந்த ஜூலை மாதம் 13 ஆம் திகதி பொல்துவ சந்தியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது திருடப்பட்டதாக கூறப்படும் ஐந்து கண்ணீர் புகை குண்டுகளுடன் ஏத்துல் கோட்டே பகுதியில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 26 வயதான இவர் ஏத்துல் கோட்டே அழகேஸ்வர வீதியில் உள்ள அவரது வீட்டில் வைத்து குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். போராட்டம் இடம்பெற்ற தினத்தன்று பொலிஸார் கண்ணீர் புகை குண்டுகளை முச்சக்கரவண்டியில் கொண்டு வந்திருந்ததாகவும் அச்சந்தர்ப்பத்தில் ஆர்ப்பாட்டக்காரர்களில் சிலர் குண்டுகளை எடுத்துக்கொண்டு … Read more

குரங்கு அம்மை நோய் ஒரு புதிய நோய் அல்ல

தற்போது பெரிதும் பேசப்படுகின்ற குரங்கு அம்மை நோய் ஒரு புதிய நோய் அல்ல என்றும் 1970 ஆம் ஆண்டு மேற்கு ஆபிரிக்க நாடுகளில் இது முதன்முதலில் பதிவாகியதாகவும் தொற்றுநோயியல் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் சமித கினிகே குறிப்பிட்டுள்ளார். ஆனால் இது அதிபயங்கரமான தொற்றுநோய் நிலை என்று தெரிவிக்கப்படவில்லை, கடந்த சில மாதங்களில் ஒரே நேரத்தில் ஐரோப்பிய நாடுகளில் இருந்து நோயாளிகள் பதிவாகியிருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். பொதுவாக சருமத்தில் (முகம், கைகால், வாய்) கொப்புளங்கள், காய்ச்சல், நிணநீர்க் குழாய்களில் வீக்கம், உடல் சோர்வு … Read more

கொவிட் அச்சுறுத்தல் முடிந்துவிடவில்லை – தாமதம் இன்றி தடுப்பூசியை பெற்றுக் கொள்ளுங்கள்

கொவிட் தொற்றின் புதிய பிறழ்வு உலகம் முழுதும் வேகமாகப் பரவி வருவதாகவும், இலங்கையில் கடந்த சில நாட்களாக கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். எனவே, கொவிட் தொற்றில் இருந்து பாதுகாப்புப் பெற மக்கள் அவதானமாக இருக்க வேண்டும். காலம் தாழ்த்தாது கொவிட் தடுப்பூசியின் நான்காவது டோஸைப் பெற்றுக் கொள்ளுமாறும் அவர் பொது மக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார். குறிப்பாக பொது … Read more

புதிதாக நியமிக்கப்பட்ட வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சருடன் இந்திய உயர்ஸ்தானிகர் மரியாதை நிமித்தம் சந்திப்பு

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, இலங்கையின் புதிய வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரியை 2022 ஜூலை 26ஆந் திகதி அமைச்சில் வைத்து மரியாதை நிமித்தம் சந்தித்தார். இந்த சந்திப்பின் போது, தற்போதைய பொருளாதார சவால்களின் பின்னணியில் இலங்கைக்கு இந்தியா வழங்கிய உதவிகள் குறித்து உயர்ஸ்தானிகர் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சருக்கு விளக்கமளித்தார். குறிப்பாக இந்த இக்கட்டான நேரத்தில் இலங்கைக்கு வழங்கிய ஆதரவிற்காக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி இந்திய மக்களுக்கும், இந்திய அரசாங்கத்திற்கும் நன்றிகளைத் … Read more

புதிய சிலிண்டர்களுக்காக 10 இலட்சம் பேர் காத்திருப்பு  

லிட்ரோ எரிவாயு சிலிண்டர்களை புதிதாக கொள்வனவு செய்ய காத்திருப்பவர்களின் எண்ணிக்கை சுமார் 10 இலட்சம் என்று அந்நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.   இந்த புதிய வாடிக்கையாளர்களின் தேவையை நிறைவேற்றுவதற்காக இந்த ஆண்டில் (2022) ஆரம்பத்தில் 12.5 கிலோ கிராம் மற்றும் 2.3 கிலோ கிராம் எடையுள்ள ஏழு இலட்சத்து முப்பத்தைந்தாயிரம் வெற்று எரிவாயு சிலிண்டர்களை இறக்குமதி செய்ய பெறுகை பத்திரங்கள் கோரப்பட்ட போதிலும், கொள்வனவு செய்யப்படாததால் அதனை இரத்து செய்ய தீர்மானித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். … Read more

கொழும்பில் ஆர்ப்பாட்டத்திற்கு வந்த இளைஞர் பலவந்தமாக ஜீப்பொன்றில் அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக தகவல்

கொழும்பில் இடம்பெற்ற போராட்டத்தில் கலந்து கொண்ட இளைஞரொருவர் பலவந்தமாக சிலரால் அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் செயற்பாட்டாளரும், ருகுணு பல்லைக்கழக மாணவர் சங்கத்தின் முன்னாள் தலைவருமான அந்தணி வெரங்க புஷ்பிக என்ற இளைஞரே இவ்வாறு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. மாபெரும் ஆர்ப்பாட்டம் கொழும்பு – கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுசன அமைப்புக்களின் கூட்டமைப்பின் ஒன்றிணைவில் மாபெரும் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. கொழும்பில் வெடித்தது மற்றுமொரு போராட்டம்! கோட்டை புகையிரத … Read more

வஜிர அபேவர்தன அவர்கள் பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம்

ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக கௌரவ வஜிர அபேவர்தன சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் இன்று (27) சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்ட பின்னர் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக முன்னிலையில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஏட்டிலும் அவர் கையொப்பமிட்டார். கௌரவ ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர் ஏற்பட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு கௌரவ வஜிர அபேவர்தன … Read more

பாடசாலை புதிய பஸ் சேவை

ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பாடசாலைக்கு செல்வதற்காக “பாடசாலை சேவை” என்ற பெயரில் புதிய தனியார் பஸ் சேவை ஆகஸ்ட் மாதம் முதலாம் ஆம் திகதி முதல் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஆகஸ்ட் மாதம் 01ஆம் திகதி முதல் “பாடசாலை சேவை” பஸ்களின் பெயர்ப் பலகையில் குறித்த பாடசாலைகளின் பெயர்களைக் குறிப்பிட்டு தினமும் இரண்டு முறை இந்த புதிய பஸ் சேவை இடம் பெற உள்ளது. எனவே, ஆசிரியர்களும், மாணவர்களும் இந்த பஸ் சேவைக்கு கட்டணம் செலுத்தி … Read more