முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ தலைமறைவாகவில்லை.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ தலைமறைவாகவில்லை. அவர் மீண்டும் இலங்கை வருவார் என்று அமைச்சரவைப் பேச்சாளரும், போக்குவரத்து, பெருங்தெருக்கள் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அரச தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நேற்று (26) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக மாநாட்டில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த போதே அவர் இதனை தெரிவித்தார். முன்னால் ஜனாதிபதி உத்தியோகபூர்வ விசாவிலேயே வெளிநாட்டில் இருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார். அவர் எப்போது நாடு திரும்புவார் என்பது … Read more

கோட்டாபயவை கைது செய்யும் நகர்வை முன்னெடுத்துள்ள சர்வதேச பெரும்புள்ளி

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை உடனடியாக கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்குமாறு மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது. ஜெனிவா மனித உரிமைகள் பேரவையின் சிரேஷ்ட அதிகாரி யஸ்மின் சுகா, சிங்கப்பூர் சட்டமா அதிபரிடம் 63 பக்கத்திலான முறைப்பாடு ஒன்றை சமர்ப்பித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதிக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை ஒவ்வொன்றாக சுகா குறிப்பிட்டுள்ளார். அத்துடன் கோட்டாபய ஜனாதிபதி சிறப்புரிமைகளை இழந்துள்ளதாகவும், இந்த வழக்கு சர்வதேச நீதிமன்றத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அவர் தனது முறைப்பாட்டில் சாட்சிகளையும் … Read more

தேசிய எரிபொருள் அனுமதிப் பத்திரத்திற்கான எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிப்பு

தேசிய எரிபொருள் அனுமதிப் பத்திரத்திற்கு எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிப்பு எதிர்வரும் ஆகஸ்ட் முதலாம் திகதி முதல் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தேசிய எரிபொருள் அனுமதிப் பத்திரத்திற்கு அமைய வாராந்தம் (ஞசு ளுலளவநஅ) கீழ் விநியோகிக்கப்படும் பெற்றோல் மற்றும் டீசல்; பங்கின் .அளவு அதிகரிக்கப்படவுள்ளது.அதற்கமைய, வேன், கார்களுக்கு 20 லிட்டர் வரை டீசல் அல்லது பெட்ரோலை பெற்றுக்கொள்ள முடியும் என எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.இதேபோன்று முச்சக்கர வண்டிகளுக்கு 05 லிட்டர் டீசல் அல்லது பெட்ரோலை பெற்றுக்கொள்ள முடியும்.தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்திற்கு … Read more

பெருந்தொகை வட்டிப் பணத்தை செலுத்தியது ஸ்ரீலங்கன் விமான சேவை

இலங்கையின் தேசிய விமான சேவை நிறுவனமான ஸ்ரீலங்கன் விமான சேவை, 2024 ஆம் ஆண்டு செலுத்த வேண்டிய உத்தரவாதப் பத்திரத்திற்கான வட்டித் தொகையை செலுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது. இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசாங்கத்தால் உத்தரவாதம் அளிக்கப்பட்ட 2024 ஆம் ஆண்டில் செலுத்த வேண்டிய 175,000,000 அமெரிக்க டொலர் உத்தரவாதப் பத்திரம் தொடர்பான வட்டியை செலுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. ஒரு அறிக்கையை வெளியிட்ட விமான நிறுவனம், நிறுவனத்தின் நிதியைப் பயன்படுத்தி பொருந்தக்கூடிய சலுகைக் காலத்திற்குள் … Read more

நாளை பாராளுமன்றத்தில் , அவசர கால நிலைமை குறித்த விவாதம்

பாராளுமன்றம் நாளை (27) கூடும் பாராளுமன்றம் நாளை மு.ப 10.00 மணிக்குக் கூடவிருப்பதுடன், பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பதில் ஜனாதிபதியினால் பிரகடனப்படுத்தப்பட்ட அவசரகால நிலைமை அறிவிப்பு பி.ப 4.30 மணி வரை விவாதிக்கப்பட்டு அங்கீகரிக்கப்படவுள்ளது.\ அவசர கால நிலைமை பிரகடனம் குறித்த விவாதம் மு.ப 10.00 முதல் பி.ப 4.30 மணிவரை வஜிர அபேவர்தன நாளை பாராளுமன்ற உறுப்பினராக பதவிச்சத்தியம் 2022 ஜூலை 17 ஆம் திகதிய 2288/30 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் … Read more

ஓரிரு வாரங்களுக்குள் கடற்றொழிலாளர்கள் எதிர்கொண்டிருக்கும் எரிபொருள் பிரச்சினைகளுக்கு தீர்வு – கடற்றொழில் அமைச்சர்

இன்னும் ஓரிரு வாரங்களுக்குள் கடற்றொழிலாளர்கள் எதிர்கொண்டிருக்கும் எரிபொருள் பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுத்தர முடியுமென்று நம்புவதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். மண்ணெண்ணெய் இல்லாததால் தொழில் செய்ய முடியாமல் தாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக தென் இலங்கையைச் சேர்ந்த சிறு மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் கடற்றொழிலாளர் சங்கங்களின் தலைவர்கள் இன்று (26) கடற்றொழில் அமைச்சரை சந்தித்து கலந்துரையாடிய போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார். கடற்றொழிலாளர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்த அமைச்சர் , கடற்றொழிலாளர்கள் எதிர்கொண்டிருக்கும் பிரச்சினைகள் தொடர்பாக நன்றாக … Read more

ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் ஒலிபரப்பு நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்த முயன்ற சந்தேக நபர் கைது

கடந்த 13ஆம் திகதி இலங்கை தேசிய தொலைக்காட்சி ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் ஒலிபரப்பு நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்த முயன்ற சந்தேக நபர் ,கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று (26) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் இன்று மாலை வெளியிட்டுள்ள அறிக்கையில், 31 வயதான குருநாகல் பிரதேசத்தைச் சேர்ந்த இந்த சந்தேக நபர் வெளிநாட்டுக்கு தப்பிச் செல்ல முற்பட்டபோதே இவ்வாறு கைசெய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. சந்தேக நபர் தற்போது குற்றப் புலனாய்வு திணைக்ளத்தின் அதிகாரிகளினால் விசாரிக்கு … Read more