இலங்கை வரலாற்றில் முன்னெப்போதும் நடக்காத அவலம்! முன்னாள் ஜனாதிபதியின் அறிவிப்பு
இலங்கை வரலாற்றில் எப்பொழுதும் நடக்காத ஒரு அவலம் நாட்டில் இடம்பெற்று வருகின்றது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். விசேட அறிவிப்பொன்றின் மூலம் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். நாட்டை முற்றாக அழிக்கும் செயற்பாடு அதிகாரத்தின் முன் கிறுக்குத்தனமான சிறு கும்பல் இந்த நாட்டை முற்றாக அழிக்க செயற்படுவதாகவும் முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். தற்போதைய ஜனாதிபதி மற்றும் செயற்குழு ஜனாதிபதியின் உத்தரவுகளை நடைமுறைப்படுத்தும் போது இருமுறை சிந்திக்குமாறு அவர் அந்த அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார். Source link