வெளிநாட்டுத்துறைச் செயலாற்றம் – 2022 மே

இறக்குமதிச் செலவினம் 2022 மேயில் ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் வீழ்ச்சியடைந்த அதேவேளையில் ஏற்றுமதிகளிலிருந்தான வருவாய்கள் அதிகரித்து வர்த்தகப் பற்றாக்குறையில் தொடர்ச்சியாக மூன்றாவது தடவையாக சுருக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேவேளை, சுற்றுலாப் பயணிகளின் வருகைகள் முன்னைய மாதத்துடன் ஒப்பிடுகையில் 2022 மேயில் மெதுவடைந்து காணப்பட்டன. தொழிலாளர் பணவனுப்பல்கள் 2022 ஏப்பிறலுடன் ஒப்பிடுகையில் 2022 மேயில் அதிகரித்து காணப்பட்டன. அரச பிணையங்கள் சந்தை மற்றும் கொழும்பு பங்குப் பரிவர்த்தனை என்பவற்றில் மேற்கொள்ளப்பட்ட வெளிநாட்டு முதலீடுகள் 2022 மே மாத காலப்பகுதியில் சிறியளவிலான … Read more

நாட்டை விட்டு வெளியேறினார் கோட்டாபய ராஜபக்ச

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாட்டை விட்டு வெளியேறிவிட்டார் என்று இலங்கை அதிகாரிகள் AFPக்கு உறுதிப்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. AFP செய்தி முகவரம் தனது டுவிட்டர் பக்கத்தில் இதனை குறிப்பிட்டுள்ளது. #BREAKING Sri Lankan president flies out of country, officials say pic.twitter.com/3RB8M2FAXt — AFP News Agency (@AFP) July 12, 2022 கொழும்பில் இருந்து அதிகாலையில் கோட்டாபய ராஜபக்சவை ஏற்றிச் செல்லும் இராணுவ விமானம் புறப்பட்டதாக உறுதிப்படுத்தப்படாத செய்திகளுக்கு மத்தியில் இந்த தகவல்கள் … Read more

இலங்கையில் மெய்நிகர் நாணயங்களின் (Virtual Currency) பயன்பாடு தொடர்பில் பொதுமக்கள் விழிப்புணர்வு

பன்னாட்டு மற்றும் உள்நாட்டு சந்தைகளில் மெய்நிகர் நாணய பயன்பாட்டுடன் தொடர்புடைய அண்மைய அபிவிருத்திகளையும் அதேபோன்று, மெய்நிகர் நாணயத்துடன் தொடர்புடைய விசாரணைகளையும் கருத்திற்கொண்டு, இலங்கை மத்திய வங்கி பொதுமக்களுக்கு பின்வருவனவற்றை தெரிவிக்க விரும்புகின்றது. மெய்நிகர் நாணயங்கள், தனியார் நிறுவனங்களால் வழங்கப்படும் பெருமளவில் ஒழுங்குமுறைப்படுத்தப்படாத டிஜிட்டல் ரீதியான பெறுமதியை பிரதிநிதித்துவப்படுத்துவதுடன் இலத்திரனியல் ரீதியாக வர்த்தகப்படுத்தப்படக் கூடியவையாகும். 2018 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளின் ஊடக அறிக்கைகளூடாக இலங்கை மத்திய வங்கியால் முன்னர் பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டவாறு, மறைகுறிநாணயங்கள் (Cryptocurrencies) உட்பட மெய்நிகர் … Read more

எரிபொருள் நெருக்கடியின் போது தனிநபர் ஆவணங்கள் கொள்ளை – அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தல்

நாட்டில் தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடியுடன் , போலியான விண்ணப்பங்களில் சமர்ப்பிப்பது தொடர்பில் அவதானமாக இருக்குமாறு கணினி அவசர தயார்நிலை குழு ஒருங்கிணைப்பு மையம்  (CERT|CC) பொது மக்களை எச்சரித்துள்ளது. போலியான இணைப்புகளைப் பயன்படுத்தி உங்கள் தனிப்பட்ட தகவல்களைத் திருடுவது தொடர்பான பல சம்பவங்கள் குறித்து ((CERT|CC)  குழுவிடம் புகார்கள் கிடைக்கப் பெற்றள்ளதாக தெரிவித்துள்ளனர். குற்றவாளிகள் எரிபொருளுக்கான டோக்கனைப் பதிவு செய்து, போலியான பதிவுச் செயல்பாட்டின் போது முக்கியமான தனிப்பட்ட தகவல்களை (தொலைபேசி எண்கள், வாகனப் பதிவு எண்கள், … Read more

சர்வதேச ஊடகத்தின் வாயிலாக தோன்றிய அர்ஜுன் மகேந்திரன்

பிணைமுறி மோசடி தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன், சர்வதேச ஊடகமாக CNN இல் ஒளிபரப்பான நேர்காணல் நிகழ்ச்சியில் இணைந்துள்ளார். இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடி குறித்து கருத்து தெரிவிக்கும் வகையில் இந்த நேர்காணல் அமைந்திருந்தது. இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கான பிரதான காரணங்கள் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு 2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள், கோவிட் தொற்றினால் ஏற்பட்ட பாதிப்புகள், புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் வழங்கப்பட்ட வரிச்சலுகைகள் … Read more

கரைநகர் கடற் பரப்பில் 6 இந்திய மீனவர் கைது

கரைநகர் கடற் பரப்பில் சட்ட விரோதமான தொழில் முறையைப் பயன்படுத்தி, மீன் பிடித்துக் கெ்ண்டிருந்த இந்திய றோலர் மீன்பிடிப் படகு ஒன்றை இலங்கை கடற்படையினர் கைப்பற்றியுள்ளதுடன், 6 இந்தியக் கடற்றொழிலாளர்களும் நேற்று (11) கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துமீறி இலங்கை கடல் பரப்பில் நுழைந்து கடல் வளத்தை அழிக்கும் தொழில் முறையான இழுவைமடித் தொழிலில் ஈடுபடுகின்ற வெளிநாட்டு கலன்கள் அனைத்துக்கு எதிராகவும் சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் இலங்கை கடற் … Read more

சுமூகமான முறையில் அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும் – ஐக்கிய நாடுகள் சபை தெரிவிப்பு

ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரஸ், இலங்கையில் சுமூகமான ஆட்சி மாற்றத்தை உறுதிப்படுத்த பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார். ‘நான் இலங்கை மக்களுடன் நிற்கிறேன் எனவும் அரசாங்கத்தின் சுமூகமான மாற்றத்தை உறுதி செய்வதற்கும், பொருளாதார நெருக்கடிக்கு நிலையான தீர்வுகளைக் காண்பதற்குமான பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்கிறேன்’ எனவும் அவர தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் ,நாட்டில் நடைபெற்ற அனைத்து வன்முறைச் செயல்களையும் தாம் கண்டிப்பதாகவும், அதற்குப் பொறுப்பானவர்கள் பொறுப்புக் கூற வேண்டும் என்றும் … Read more

பதவி விலகுவதற்கு நிபந்தனை விதித்த கோட்டாபய ராஜபக்ச – இந்திய ஊடகம் தகவல்

 எதிர்பாராத திருப்பமாக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, தனது குடும்பத்தினர் நாட்டை விட்டு வெளியேறும் வரை இராஜினாமா செய்யப் போவதில்லை என்று சூசகமாகத் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியா டுடே வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆதாரங்களின்படி, எதிர்க்கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது, ஆனால் இதுவரை எந்தக் கட்சியும் இந்த ஆலோசனையை ஏற்கத் தயாராக இல்லை என அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. மூன்று நாட்களுக்கு முன்னர் சபாநாயகரிடம் பேசிய ஜனாதிபதி, புதன்கிழமை பதவி விலகுவதாக அறிவித்தார். இருப்பினும், … Read more

Fly Dubai நிறுவனத்தில் டிக்கெட் முன்பதிவு செய்த பயணிகளுக்கான அறிவித்தல்

டுபாய் மற்றும் கட்டுநாயக்க விமான நிலையங்களுக்கு இடையிலான Fly Dubai நிறுவனத்தின் விமானச் சேவை ஜூலை மாதம் 10ஆம் திகதி முதல் மறு அறிவித்தல் வரை   இடைநிறுத்தப்பட்டுள்ளது. . இதுதொடர்பாக அறிக்கை ஒன்றை நிறுவனம் வெளியிட்டுள்ளது. இலங்கையில் நிலவும் அரசியல் மற்றும் பொருளாதார அமைதியின்மை காரணமாக தனது விமானச் சேவைகளை இடைநிறுத்த Fly Dubai நிறுவனம் தீர்மானித்துள்ளது. அத்துடன், விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்த பயணிகளுக்கு பணத்தைத் திருப்பித் தருவதாக விமான நிறுவனம் கூறியுள்ளதுடன், இலங்கையின் நிலைமையை நாங்கள் … Read more

ஆகஸ்ட் 30ம் திகதி வரை எரிவாயுக்கு தட்டுப்பாடு இல்லை

ஆகஸ்ட் 30ம் திகதி வரை எரிவாயு தட்டுப்பாடு இல்லை என லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. லிட்ரோ நிறுவனம் நேற்று  30 ஆயிரம் எரிவாயு சிலிண்டர்களையும் இன்று (12)  ஒரு இலட்சத்து 20 ஆயிரம் எரிவாயு சிலிண்டர்களை நாடளாவிய ரீதியில் விநியோகிக்கவுள்ளது கொழும்பில் 30 ஆயிரம் லிட்ரோ எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்க நேற்று  நிறுவனம் ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தது.. இன்றும் நாடு முழுவதும் 120 ஆயிரம் எரிவாயு சிலிண்டர்கள் (12.5மப) விநியோகிக்க உள்ளதாகவும் லிற்றொ கேஸ் லங்கா லிமிடெட் … Read more